*”டிக்கெட் ரேட்டை குறைக்கலேன்னா சினிமா குளோஸ் தான்”*–‘லெவன்’ விழாவில் டென்ஷன்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஏ.ஆர். என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில்,  அறிமுக இயக்குனர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள படம்  ‘லெவன்’.

படத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி, அபிராமி, திலீபன், ரித்விகா, ‘ஆடுகளம்’ நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். க்ரைம் த்ரில்லராக தயாராகி இருக்கும் இப்படத்தை  அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

Sri Kumaran Mini HAll Trichy

‘லெவன்’ டிரெய்லரை உலக நாயகன் கமல் ஹாசன் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீடு உரிமையை சுஷ்மா சினி ஆர்ட்ஸ் ஜி. என். அழகர்சாமி,தெலுங்கு வெளியீட்டு உரிமையை ருச்சிரா என்டர்டெய்ன்மென்ட்ஸ் என் சுதாகர் ரெட்டி, மலையாள உரிமையை E4 என்டர்டெய்ன்மென்ட் முகேஷ் ஆர் மேத்தா, கர்நாடகா உரிமையை ஃபைவ் ஸ்டார் கே செந்தில் ஆகியோர் பெற்றுள்ளனர்.

லெவன்'  திரைப்பட விழாமே 16 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் ஏப்ரல் 29- ஆம் தேதி இரவு நடந்தது. இதில் இயக்குநர் கே. பாக்யராஜ், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ் தாணு, டி.ஜி. தியாகராஜன், டி. சிவா, இணை தயாரிப்பாளர் கோபாலகிருஷ்ணன், இயக்குநர்கள் அமீர், செல்வராகவன், பிரபு சாலமன்,  ஏ. எல்.விஜய் , விநியோகஸ்தர்கள் ஃபைவ் ஸ்டார் செந்தில், அழகர்சாமி, அருள்பதி , சரிகம ஐஸ்வர்யா, சஞ்சய் வாத்வா, முகேஷ் மேத்தா, மீனா சாப்ரியா, கிருஷ்ண ரெட்டி, பி. எல். தேனப்பன், கதிரேசன், ராஜ் டிவி ரவி, ரகுநந்தன், இயக்குநர்கள் விஷால் வெங்கட், பத்ரி, ரமேஷ் கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இந்த விழாவிற்கு வருகை தந்திருந்த அனைவரையும் எழுத்தாளர் செல்வேந்திரன் வரவேற்றார். இப்படத்தின் இசையை இயக்குநர் கே. பாக்யராஜ் மற்றும் தயாரிப்பாளர் எஸ் தாணு வெளியிட, இயக்குநர் ஏ.எல். விஜய், தயாரிப்பாளர்கள் கதிரேசன், டி சிவா, தியாகராஜன், பி. எல். தேனப்பன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து இப்படத்தின் முன்னோட்டத்தை இயக்குநர்கள் அமீர் – செல்வராகவன் இணைந்து வெளியிட, விநியோகஸ்தர்கள் சஞ்சய் வாத்வா, அழகர்சாமி, செந்தில், முகேஷ் மேத்தா ஆகியோர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

இந்நிகழ்வில் கலைப்புலி தாணு, சத்யஜோதி தியாகராஜன் ஆகியோர் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் டெக்னீஷியன்களை வாழ்த்திப் பேசிய பிறகு மைக் பிடித்த ,

தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் *கதிரேசன்*

“தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திரைப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் அதிக கேட்டுக்கு டிக்கெட்  வாங்கி பார்க்கிறார்கள். அதனால் பத்து கோடி ரூபாய் முதலீட்டில் எடுக்கும் சிறிய முதலீட்டு படங்களுக்கு அனைவரும் ஒன்று கூடி விவாதித்து டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும். நல்ல படமாக இருந்தாலும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பல சங்கடங்கள் இருக்கிறது. ஆந்திராவுடன் ஒப்பிடும்போது ஒரு நல்ல படத்திற்கு தமிழ்நாட்டில் வசூல் சதவீதம் குறைவாகவே இருக்கிறது. சினிமாவைப் பொறுத்தவரை வெள்ளி, சனி, ஞாயிறு – இந்த மூன்று நாட்களில் தான் ரசிகர்களின் வருகை அதிகமாக இருக்கிறது. அதனால் சிறிய முதலீட்டில் உருவாகும் படங்களுக்கு 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயித்தால் நன்றாக இருக்கும். இதனை மூன்று அல்லது நான்கு மாதங்கள் வரை பரீட்சார்த்தமாக சோதனை செய்ய வேண்டும். இது தொடர்பாக திரையுலகினர் அனைவரும் ஒன்று கூடி பேச்சுவார்த்தை நடத்தலேன்னா சினிமா குளோஸ் தான்” என்றார் கொந்தளிப்புடன்.

*நடிகை ரித்விகா*

“இந்தப்படத்தில் நானும் ஒரு பங்காக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த தயாரிப்பு நிறுவனம் இதற்கு முன் உருவாக்கிய‌ ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்திலும் நான் நடித்திருக்கிறேன். அதற்கு ரசிகர்களிடத்தில் பெரிய வரவேற்பு இருந்தது. இந்தப் படத்திற்கும் மிகப்பெரிய ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன், ”

 *ரியா ஹரி*

”திரையுலகில் உள்ள அனைத்து தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் இந்த மேடையில் இருக்கிறார்கள். இதற்கு காரணம் அக்பர் சார்தான்.‌ அவர் மீதான அன்பின் காரணமாகவே அனைவரும் இங்கு வருகை தந்திருக்கிறார்கள். நானும் அவருடைய பார்ட்னர் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.

இந்தப் படத்தில் ஒரு மேஜிக் இருக்கிறது. படத்தை பார்க்கும்போது உங்களுக்குள் நிபந்தனையற்ற அன்பு இருப்பதை உணர்வீர்கள். அந்த அதீத அன்பு ஒரு மேஜிக்கை நிகழ்த்தி இருக்கிறது. இந்த திரைப்படம் த்ரில்லராக இருந்தாலும் எமோஷனலான படம். அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்”.

*இயக்குநர் கே. பாக்யராஜ்*

”நான்  இயக்குவதற்கும், படத்தை பார்ப்பதற்கும் சம்பந்தமே இருக்காது. எனக்கு க்ரைம் ஆக்ஷன் படங்கள் தான் மிகவும் பிடிக்கும். இது போன்ற படங்களை பார்க்கும் போது மூளைக்கும் கொஞ்சம் வேலை கொடுக்கும் விஷ‌யம் இருக்கும். அடுத்து என்ன என்ற இன்ட்ரஸ்ட் இருக்கும். ‘விடியும் வரை காத்திரு’, ‘ஒரு கைதியின் டைரி’ என இரண்டு படங்களை நான் இந்த வகையில் தான் இயக்கினேன். இந்த ‘லெவன்’ படம் க்ரைம் த்ரில்லர் என்று சொன்னவுடன் ஆர்வம் ஆகிவிட்டேன்.‌ ரசிகர்களிடமும் வரவேற்பு இருக்கும்”.

Flats in Trichy for Sale

*நடிகை அபிராமி*

“இயக்குநர் லோகேஷ் அஜில்ஸின் தொடக்கப் பயணத்தில் என்னையும் இணைத்துக் கொண்டதற்கு நன்றி. தயாரிப்பாளர் அஜ்மலுடன் இணைந்து பணியாற்றுவது அனைத்து நட்சத்திரங்களுக்கும் இயல்பாக இருக்கும். அவருடைய அக்கறையும், அன்பும் அதிகம். இந்தப் படத்தில் என்னுடன் நடித்த அனைவருக்கும் நன்றி “.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

*இயக்குநர் அமீர்*

”இப்படத்தின் நாயகன் நவீன் சந்திராவிற்கும், இன்றைய விழா நாயகன் இசையமைப்பாளர் இமானுக்கும், தயாரிப்பாளர் அஜ்மலுக்கும் என் வாழ்த்துக்கள். ஒட்டுமொத்த திரையுலகத்தையும் அவ‌ர் மேடையில்  அஜ்மல் ஒன்றிணைத்திருக்கிறார்.  இங்கு மேடையில் பேசிய விநியோகஸ்தர் மதுரை அழகர் எந்தப்படத்தையும் அவ்வளவு எளிதாக பாராட்ட மாட்டார். அவர் இந்தப்படத்தை விநியோகிக்கிறார் என்றால், இந்த படம் உண்மையிலேயே நன்றாக இருக்கிறது என்று அர்த்தம்.‌ அத்துடன் பிரபு சாலமன்- இமான் ‍ அக்பர் –  இணைந்திருக்கிறார்கள் என்றால்.. அந்த படம் நன்றாக தான் இருக்கும்.  அக்பர் ஆடிட்டர் என்றாலும் சினிமாவை அளவு கடந்து நேசிப்பவர்”.

*இசையமைப்பாளர் டி. இமான்*

‘போர் தொழில்’, ‘ராட்சசன்’ போன்று இந்தப்படமும் இருக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை. படத்தை திரையரங்கத்தில் பார்த்துவிட்டு உங்களுடைய அன்பையும் ஆதரவையும் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்”.

*இயக்குநர் பிரபு சாலமன்*

”தயாரிப்பாளர் அக்பருடன் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறேன்.‌ இந்தப் படத்தின் கதையை கேட்டதும் பிடித்திருந்தது. கதைக்குப் பொருத்தமான நடிகர்களை தேடத் தொடங்கினோம். அந்தத் தருணத்தில் அற்புதமான நடிப்புத் திறமை உள்ள நவீன் சந்திரா இந்த கதைக்குள் வந்தார். மற்றவர்களளும் வந்தார்கள். கதாபாத்திரத்தை திரையில் கச்சிதமாக காட்சிப்படுத்துவதில் திறமையானவர் நடிகர் நவீன் சந்திரா என்பதை படம் பார்த்த பிறகு நீங்கள் அனைவரும் சொல்வீர்கள்.

மே 16-ல் இப்படத்திற்கான அங்கீகாரத்தை ரசிகர்கள் வழங்குவார்கள் எனும் நம்பிக்கை இருக்கிறது”.

லெவன்'  திரைப்பட விழா *ஹீரோ நவீன் சந்திரா*

“டைரக்டர் லோகேசும் நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றியதால் இந்தப் படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. தமிழ்  தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.‌ மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். படத்தை சிறப்பான தருணத்தில் வெளியிட வேண்டும் என்பதற்காக காத்திருந்தோம். ரசிகர்களுக்கு நல்லதொரு படத்தை வழங்க வேண்டும் என தீர்மானித்திருக்கோம். மே 16ம் தேதி அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு அளிக்க வேண்டும்”.

*இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ்*,

“என்னுடைய முதல் படம் தமிழ்- தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இயக்க வேண்டும் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றதும் தொடக்கத்தில் சற்று பதற்றமாக இருந்தது. ஆனால் வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கு என்னுடன் பணியாற்றிய நடிகர்களும் நடிகைகளும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் தான் காரணம். அவர்கள் கொடுத்த முழு ஒத்துழைப்பின் காரணமாகத்தான் படத்தினை திட்டமிட்டபடி நிறைவு செய்தேன். முக்கியமாக

தயாரிப்பாளர் அக்பர் – படத்திற்கு நிதி அளித்ததோடு மட்டும் இல்லாமல் இப்படத்திற்காக நாங்கள் எவ்வளவு கடுமையாக உழைப்பை கொடுத்தோமோ, அதற்கு நிகராக அவரும் உழைத்தார். அவர் ஒருபோதும் தயாரிப்பாளராக இருந்ததில்லை. பட்டத்திற்கான அனைத்து பணிகளையும் அவர் செய்தார். அவருக்காகவே இந்தப்படம் பெரிய வெற்றியை பெறும், வெற்றி பெற வேண்டும்.

படம் பார்த்த அனைவரும் படம் எப்படி நன்றாக இருக்கிறது என்று ஒருமித்த குரலில் சொன்னார்களோ, அதேபோல் அனைவரும் நவீன் சந்திராவின் நடிப்பையும் பாராட்டினார்கள். இந்தப் படம் நவீன் சந்திராவிற்கு தமிழ் திரையுலகத்தில் நல்ல பெயரை சம்பாதித்து தரும். நிறைய வாய்ப்புகளும் கிடைக்கும் என்று நம்புகிறேன். ‘லெவன்’ படம் பார்க்கும் ரசிகர்களுக்கு அற்புதமான திரையரங்க அனுபவம் காத்திருக்கிறது. அதைக் காண திரையரங்கத்திற்கு வாருங்கள்”.

 

—   மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.