குடிபோதையில் ஸ்பூனை விழுங்கிய நபர்! கனவில் விழுங்கியதாக புலம்பல்!
தாய்லாந்தை சேர்ந்தவர் 21 வயதான யாங், இவர் ஒருமுறை ஹோட்டல் அறையில் மது அருந்த சென்று இருக்கிறார். அப்போது அளவுக்கு மீறி மது அருந்தியதால் போதை தலைக்கேறி என்ன செய்வது என்று அறியாமல் வாந்தி எடுப்பதற்காக ஒரு பீங்கான் காபி ஸ்பூனை வாய்க்குள் விட்டு பயன்படுத்திருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக அதனை அவர் விழுங்கியிருக்கிறார். போதையில் சுயநினைவு இழந்த போது இது நடந்திருக்கிறது.
இச்சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கழித்து தற்போது யாங்கிற்க்கு கடுமையான வயிறு வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனைக்கு சென்று யாங் பரிசோதனை செய்து பார்த்த போது அவரது வயிற்றில் 15 சென்டிமீட்டர் கண்ணாடி ஸ்பூன் இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.
இந்த மருத்துவ பரிசோதனைக்கு பின் யாங் மருத்துவர்களிடம் ஒரு விஷயத்தை நினைவு கூர்ந்திருக்கிறார். நான் ஸ்பூன் விழுங்கியதாக ஆறு மாதத்திற்கு முன்பு தான் கனவு கண்டதாகவும், அது வெறும் கனவு என்று நினைத்து பெரிதாக கண்டுகொள்ளாமல் விட்டதாகவும் ஆனால் அது கனவல்ல உண்மை என தற்போது புரிகிறது என்றும், நான் மது போதையில் இருந்ததால் இது எனக்கு நினைவில்லை என கூறியிருக்கிறார், இந்த நிலையில் அவருக்கு எண்டோஸ்கோபிக் எனும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஸ்பூன் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது மற்றும் தற்போது யான் நலமாக இருக்கிறார்.
— மு. குபேரன்