அங்குசம் பார்வையில் ‘தணல்’
தயாரிப்பு : ‘அன்னை பிலிம்ஸ்’ எம்.ஜான் பீட்டர், டைரக்ஷன்: ரவீந்த்ரா மாதவா, ஆர்டிஸ்ட் : அதர்வா முரளி, லாவண்யா திரிபாதி, அஸ்வின் காக்குமானு, ஷா ரா, அழகம் பெருமாள், பரணி சோனியா, போஸ் வெங்கட், செல்வா பாரத், லக்ஷ்மி ப்ரியா. ஒளிப்பதிவு : சக்தி சரவணன், இசை : ஜஸ்டின் பிரபாகரன், எடிட்டிங் : ஆர்.கலைவண்ணன், ஆர்ட் டைரக்டர் : எஸ்.அய்யப்பன். பி.ஆர்.ஓ : சுரேஷ் சந்திரா & ஏ.அப்துல் நாசர்.
வங்கிக் கொள்ளளையர்கள் ஐந்து பேரை என்கவுண்டரில் சுட்டுக் கொல்கிறார் போஸ் வெங்கட். இந்தக் கோபத்தில் போலீஸ் ஜீப்பை டிரான்ஸ்பார்மரில் மோத வைத்துக் கொல்கிறார் அஸ்வின் காக்குமானு. ஏன்? எதற்கு? இதான் ‘தணல்’ க்ளைமாக்ஸ்.
போலீஸ் கான்ஸ்டபிள் வேலை கிடைத்து ஜாய்னிங் லெட்டரை வாங்குவதற்கு முன்பாகவே நைட் ரவுண்ட்ஸ் போகிறார்கள் அதர்வா முரளி, பரணி, ஷா ரா உள்ளிட்ட ஆறு பேர். அப்போது பாதாள சாக்கடையிலிருந்து வெளிவரும் ஒருவனைப் பிடிக்க விரட்டிப் போய் படுபயங்கரமான இடத்தில் மாட்டிக் கொள்கிறார்கள் ஐந்து பேரும். அதன் பின் அங்கே அஸ்வின் காக்குமானுவுக்கும் அதர்வாவுக்கு நடக்கும் மோதல் நடக்கிறது. ஒரே நேரத்தில் ஐந்து வங்கிகளை கொள்ளையடிக்க காக்குமானு ஏன் ப்ளான் போடுகிறார் என்பதற்கான காரண-காரிய ஃப்ளாஷ் பேக் கரெக்டாத்தான் இருக்கு. ஆனால் படம் முக்கால்வாசி, அதுவும் ராத்திரியில் அந்த குடிசைப்பகுதி செட்டுக்குள்ளேயே நடப்பது தான் அயர்ச்சியாத் தான் இருக்கு. படத்தில் ரெண்டாயிரம் ரூபாய் நோட்டெல்லாம் இருக்குன்னா, எப்படியும் மூணு வருசத்துக்கு முன்னால எடுத்த படமாத்தான் இருக்கும்.
ஓப்பனிங்கில் அதர்வா-லாவண்யா திரிபாதி லவ் எபிசோட் மகா எரிச்சலைக் கிளப்புது. அதர்வாவின் அப்பா அழகம் பெருமாள், அம்மா சோனியா இந்த கேரக்டர்கள் ஓகே . அஸ்வின் காக்குமானுவும் அவரது ஃப்ளாஷ்பேக்கும் தான் இந்த ‘தணலி’ன் முதுகெலும்பு. ஆனால் படத்தின் திரைக்கதை தான் முதுகொடிந்த மாதிரி ஆகிப்போச்சு டைரக்டர் ரவீந்தரா மாதவா . இருந்தாலும் சுரங்க மாஃபியாக்களைப் பற்றிச் சொன்னதற்காக உங்களை பாராட்டலாம்.
— ஜெடிஆர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.