அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தமிழர்களுக்கு எதிரான தந்தி டிவி ! ‘ரஜினி கேங்’ விழாவில் விளாசிய தயாரிப்பாளர்!

திருச்சியில் அடகு நகையை விற்க

‘மிஸ்ரி எண்டெர் பிரைஸ்’ சார்பில் மறைந்த  எஸ். செயின்ராஜ் ஜெயின் நல்லாசியு டன், ரஜினி கிஷன் தயாரித்து ஹீரோவாக நடிக்க, இயக்குநர் எம். ரமேஷ் பாரதி இயக்கத்தில், கலக்கலான ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள படம்  ‘ரஜினி கேங்’.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும்  டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை கமலா தியேட்டரில் நவம்பர் 12- ஆம் தேதி காலை  நடந்தது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

இவ்விழாவில் பேசியோர் …

தயாரிப்பாளர் எச்.முரளி

https://www.livyashree.com/

“எனக்கு செயின்ராஜ் சார் குடும்பத்தை 40 வருடமாகத் தெரியும். இந்தப்பட டிரெய்லர் பார்க்கும் போது அவர் இல்லை என வருத்தமாக இருக்கிறது. கிஷென் ஒரு ஹீரோவாக வேண்டும் என அவர் அதிகம் ஆசைப்பட்டார்.  அவரது சகோதரர்கள் சேர்ந்து அஷ்டகர்மா வெற்றிப்படத்தைத் தந்தனர். இப்போது ரஜினி கேங் படத்தைத் தந்துள்ளார்கள். சின்ன பட்ஜெட்டில் அழகாக எடுத்துள்ளார்கள். அவர்கள் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்”.

திருமலை
திருமலை

இயக்குநர் & தயாரிப்பாளர் திருமலை

“கையில் பல கோடிகள் இருந்தாலும் போராடித் தான் ஹீரோவாகியுள்ளார் கிஷென். முதல் சந்திப்பில் இயக்குநர் பற்றியும், கதையைப் பற்றியும் அவ்வளவு ஆவலோடு பேசினார். மிஸ்ரி  பல படங்கள் வெளியாக உதவியாக இருக்கிறது. . இன்றைய நிலையில் படம் வெளியிடுவது பெரும் சிக்கலாக உள்ளது. நல்ல கண்டன்ட் உள்ள படம் கண்டிப்பாக ஜெயிக்கும். நல்ல கதை உள்ள இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். இன்னொரு முக்கியமான விஷயம்… தமிழ்நாட்டில் பிழைப்பு நடத்தும் தந்தி டிவி குரூப் நடத்தும் தந்தி1 சேனலில் வேற்று மொழிப் படங்களை தமிழில் டப்பிங் பண்ணி போடுகிறார்கள். இதுவரை தமிழ்ப் படங்களை போட்ட தேயில்லை. இதை சொன்னதற்காக என்னை அவர்கள் குறி வைத்து அடித்தாலும் கவலைப்பட மாட்டேன்” என போட்டு பொளந்து கட்டினார்.

இசையமைப்பாளர் *ஜோன்ஸ் ரூபர்ட்

ஒரு அழகான படைப்பை எனக்குத் தந்தத இந்த டீமுக்கு பெரிய நன்றி. ரமேஷ் பாரதி அண்ணா நாம் டீமாக ஒரு படம் செய்கிறோம் என எல்லோருக்கும் வாய்ப்பு தந்தார். இவர்களுடன் வேலை பார்த்தது மிகச் சந்தோசமான அனுபவமாக இருந்தது. இப்படத்தில் பாடிய, பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்”.

 முனிஷ்காந்த்

“இயக்குநர் ஹார்ட் ஒர்க் இல்லை பேய் ஒர்க் செய்வார். என்னிடம் சில நாட்கள் மட்டும் தான் கேட்டார் அதற்குள் எப்படி எடுப்பீர்கள் என்றேன். காலையில் ஆரம்பித்து இரவு வரை அசராமல் உழைத்தார். அவரிடம் கொஞ்சம் கூட அசதியே இல்லை “.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

நடிகர் ரஜினி கிஷன்

“ரஜினி கேங் எனது மூன்றாவது படம். ஏற்கனவே இரண்டு படம் செய்துவிட்டேன். மக்கள் மனதில் பெரிய ஹீரோவாக இடம் பிடிக்க வேண்டும் என்பது தான் என் கனவு. அதற்காகத் தான் கதை கேட்டேன். ரமேஷ் பாரதி சார் மூன்று கதை சொன்னார், அவரே இந்தக்கதை செய்யுங்கள், காமெடி மக்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்றார்.

நாமே தயாரித்து விடலாம் என முடிவு செய்து படத்தை ஆரம்பித்து விட்டோம். என்னுடன் நடித்த எல்லா பெரிய நடிகர்களும் பெரும் ஒத்துழைப்பு தந்தார்கள்.  மேனேஜர் சந்துரு என் வேலையை எளிமையாக்கிவிட்டார். அவருக்கு நன்றி.  என் அப்பா சொன்னது போல ஒரு டீமாக எல்லோரும் உழைத்து ஒரு நல்ல படைப்பை உருவாக்கி யுள்ளோம்”.

இயக்குநர் எம்.ரமேஷ் பாரதி

“ரஜினி கிஷனுக்கு  முதலில் இந்தப்படம் எப்படி வரும் என்ற சந்தேகம் இருந்தது.  ஷூட்டிங் ஆரம்பித்த பின்னர் தான் நம்பினார்.  இந்தப்படத்தைச்  சொன்ன நேரத்தில், சொன்ன மாதிரி முடித்துக்கொடுக்க அவர் என் மீது வைத்த முழுமையான நம்பிக்கை தான் காரணம். படத்தில் நடித்த எல்லோரும் மிகச்சிறப்பாக நடித்தார்கள். படத்தில் உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும் நன்றிகள். இப்படம் கண்டிப்பாகப் பிடிக்கும் என உறுதியாகச் சொல்ல முடியும். அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள்”

தயாரிப்பு: சி.எஸ்.பதம் சந்த், சி.அரியந்த் ராஜ் & ரஜினி கிஷென்

இயக்கம் : எம் .ரமேஷ் பாரதி

இசை : ஜோன்ஸ் ரூபர்ட்

எடிட்டிங் : ஆர்.கே. வினோத் கண்ணா

ஒளிப்பதிவு :  சதீஷ்குமார்

மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)

 

– ஜெடிஆர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.