அக்கா- தம்பி பாசம்னா… அது ‘பிரதர்’ தான் பெஸ்ட் சாம்பிள்!–டைரக்டர் எம்.ராஜேஷ்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம் . ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ திரைப்படம் தீபாவளியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. முழுமையான பொழுதுபோக்குப்படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் அக்டோபர் 28- ஆம் தேதி மதியம் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பில் இயக்குநர் எம். ராஜேஷ், நடிகர்கள் ஜெயம் ரவி, நட்டி என்கிற நட்ராஜ், விடிவி கணேஷ், நடிகை பூமிகா சாவ்லா, ஒளிப்பதிவாளர் விவேகானந்த் சந்தோஷம், படத்தொகுப்பாளர் ஆசிஷ் ஜோசப், கலை இயக்குநர் ஆர் .கிஷோர், சண்டை பயிற்சி இயக்குநர் ஸ்டன்னர் சாம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

ஜெயம் ரவி
ஜெயம் ரவி

படத் தொகுப்பாளர் ஆசிஷ் ஜோசப், ”இந்த படம் நான்கரை மணி நேரமாக இருந்தது. அதனை இரண்டரை மணி நேரமாக தொகுப்பது என்பது சவாலாக இருந்தது.‌ இருந்தாலும் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் படத்தை தொகுத்திருக்கிறோம் . திரையரங்குகளில் பார்த்துவிட்டு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்”.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

கலை இயக்குநர் ஆர். கிஷோர் , ”இயக்குநர் ராஜேஷ் உடன் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படம் இது. படப்பிடிப்புக்கு முன்னரே நிறைய முன்-தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டோம். அதிலும் குறிப்பாக அரங்குகள், வண்ணங்கள் என பலவற்றிலும் யோசித்து பணியாற்றினோம். உடன் பணியாற்றிய மூத்த தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினார்கள். நான் வளரும் தொழில்நுட்பக் கலைஞர் என்பதால் அனைவரும் தங்களின் பங்களிப்பை வழங்கி எனக்கு ஆதரவளித்தனர். இதற்காக படக் குழுவினர் அனைவருக்கும் நன்றி,”.

ஸ்டண்ட் மாஸ்டர்  ‘ஸ்டன்னர் சாம்’, ”இயக்குநர் ராஜேஷின் படங்களில் சண்டை காட்சிகள் இருக்காது. அவர் முதன் முதலாக இயக்கியிருக்கும் ஆக்ஷன் ஸ்கிரிப்ட் இது. இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பளித்ததற்காக இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி.

நானும்  ஜெயம் ரவியும் ஒய் .எம் .சி .ஏ. மைதானத்தில் பயிற்சி பெறும் போதே அறிமுகமாகி இருக்கிறோம். நல்ல நண்பர். நான் திரைப்படங்களில் உதவி சண்டை கலைஞராக பணியாற்றும் போதே அவரைத் தெரியும்.‌ அவருக்காக இந்த படத்தில் சண்டைக் காட்சியை  அமைப்பதற்கு வாய்ப்பு வழங்கியதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,”.

ஒளிப்பதிவாளர் விவேகானந்த் சந்தோஷம்  ”இயக்குநர் ராஜேஷின் திரைப்படங்கள் பெரும்பாலும் உரையாடலை மையப்படுத்தியதாக இருக்கும். ஆனால் பிரதர் படத்தின் கதையைக் கேட்கும் போது அவர் விஷுவலுக்கும், டயலாக்கிற்கும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்பது புரிந்தது.‌ இந்தக் கதை சென்னையிலும், ஊட்டியிலும் நடைபெறுவது போல் எழுதப்பட்டிருக்கிறது.‌ அதற்காக நானும் இயக்குநரும் நன்றாக புரிந்து கொண்டு உழைத்திருக்கிறோம்.

ஸ்கிரீன் சீன் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படம் இது. இப்படத்தை பார்க்கும் போது பூமிகாவை போல் வரும் சகோதரி இல்லையே என்ற ஏக்கம் சகோதரிகளுடன் பிறக்காதவர்களுக்கு ஏற்படும். சகோதரியுடன் பிறந்தவர்களுக்கு ஒரு முறை சகோதரியை காண வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். அதற்கு ஏற்ற வகையில் இயக்குநர் ராஜேஷ் படத்தை உணர்வுப்பூர்வமாகவும் உருவாக்கி இருக்கிறார்”.

நடிகர் நட்டி என்கிற நட்ராஜ் ”எனக்கு இந்த படத்தில் நல்ல கதாபாத்திரத்தை வழங்கியதற்காக இயக்குநர் ராஜேஷிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட நாள் கழித்து திரையரங்குகளில் ஒரு படத்தை பார்த்துவிட்டு ஃபீல் குட் உணர்வுடன் வீடு திரும்பும் ஒரு படமாக இந்த பிரதர் படம் இருக்கும்”.

'பிரதர்' திரைப்படம்
‘பிரதர்’ திரைப்படம்

நடிகர் விடிவி கணேஷ் , ”இயக்குநர் ராஜேஷ் காமெடி படங்களை இயக்குவதில் வல்லவர். அவர் எப்படி இது போன்ற ஃபேமிலி படத்தை இயக்க உள்ளார் என எதிர்பார்த்தேன். என்னை சந்தித்து பேசும்போது என் கதாபாத்திரத்திற்கான விஷயங்களைப் பற்றி மட்டும் சொன்னார். அவர் ஏற்கனவே நல்ல படங்களை இயக்கிய இயக்குநர் என்பதால் அவர் மீது நம்பிக்கை வைத்து நடிப்பதற்கு ஒப்புக்கொண்டேன்.

அதே தருணத்தில் படத்தின் தயாரிப்பாளர் கதை கேட்டு தான் படத்தை தயாரிக்க ஒப்புக் கொள்வார் என எனக்கு ஏற்கனவே தெரியும். அதனால் அவர் மீதும் நம்பிக்கை வைத்தேன். இவர்களையெல்லாம் கடந்து எனக்கு மிகவும் பிடித்த ஹீரோ ஜெயம் ரவியின் படம் இது. நல்ல ஹைட் .நல்ல கலர். திறமையான நடிகர். அவருக்கு நடிப்பை விட டைரக்ஷன் நாலெட்ஜ் அதிகம். எனக்குத் தெரிந்து சிம்புவிற்கு அடுத்து இது போன்ற நாலெட்ஜ் உள்ளவர் ஜெயம் ரவி மட்டும்தான்.

இந்தப் படத்திற்கு என்ன தேவையோ அனைத்தையும் தயாரிப்பாளர் செய்திருக்கிறார் . இந்த படத்தின் மீதுள்ள நம்பிக்கையால் சொந்தமாக வெளியிடுகிறார். இந்தப் படத்தின் மீது தயாரிப்பாளர் வைத்திருக்கும் நம்பிக்கையை ரசிகர்களாகிய நீங்களும் கை கொடுத்து ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

நடிகை பூமிகா சாவ்லா,” இந்தப்படம் அக்காவிற்கும் தம்பிக்கும் இடையேயான உறவை  பேசுகிறது. இந்த படத்தை திருவிழா நாளில் திரையரங்கத்திற்கு சென்று ரசித்து கொண்டாடுங்கள்,”.

இயக்குநர் எம். ராஜேஷ் , ”மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தீபாவளி திருநாளில் என்னுடைய திரைப்படம் வெளியாகிறது. என்னுடைய இயக்கத்தில் உருவான படம் திரையரங்கத்தில் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது. இப்போது  கொண்டாட்டத்திற்குரிய திரைப்படம் திருவிழா நாளில் வெளியாகிறது.‌ இது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.‌ இதற்காக  ஜெயம் ரவிக்கு நன்றி சொல்கிறேன்.

இந்தப் படத்தின் திரைக்கதையை நான் அவரிடம் சொன்னபோது அவர் முழுவதும் கேட்டுவிட்டு ஓகே சொன்னார். அப்போதிலிருந்து இப்போது வரை நடிகர் என்பதை கடந்து உதவி செய்வதுடன் முழுமையான ஒத்துழைப்பையும் அளித்து வருகிறார்.

ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுந்தர்  டைனமிக்கானவர் . அவர் ஒரு விஷயத்தை நம்பி விட்டால் அதற்காக கடுமையாக உழைப்பவர். இவரைப் போன்ற அர்ப்பணிப்புடன் கூடிய தயாரிப்பாளர் திரையுலகத்திற்கு தேவை. இந்த நிறுவனம் தொடர்ந்து திரைப்படங்களை தயாரிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. தமிழ் சினிமாவிற்கு கிடைத்த சிறந்த தயாரிப்பாளர் இவர்.

இதில் நடித்திருக்கும் அனைவரும் தங்களுடைய திறமையான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள். இது ஒரு கிளீன் ஃபேமிலி எண்டர்டெய்னர் சினிமா .இப் படத்தை சென்சார் குழுவினர் பார்த்து ஒரு கட் கூட கொடுக்காமல் கிளீன் யூ சர்டிபிகேட்டை கொடுத்தார்கள். இதுவே எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.

பாஸ் என்கிற பாஸ்கரன் – சந்தோஷ் சுப்பிரமணியம் இந்த இரண்டு திரைப்படத்தையும் இன்றைய டிரெண்டிற்கு ஏற்ற அளவில் அப்டேட் செய்தால் எப்படி இருக்கும் என்பதை நினைத்து தான் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். இதனை ரசிகர்களாகிய நீங்கள் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்துவிட்டு சொல்லுங்கள். குடும்பத்துடன் பார்க்க வேண்டிய ஜாலியான படமாக இது இருக்கும்.

இந்தப் படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களுக்கும் நான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறேன். படத்தின் மிகப் பெரிய பலம் ஹாரிஸ் ஜெயராஜ் தான் .படத்திற்கான பின்னணி இசைக்கு நிறைய நேரம் எடுத்துக்கொண்டு நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார். பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இந்தப் படம் வெளியான பிறகு இன்னும் இரண்டு பாடல்கள் வெற்றி பெறும்.

தீபாவளியன்று குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசித்து கொண்டாடும் படமாக ‘பிரதர்’ இருக்கும்”.

நடிகர் ஜெயம் ரவி, ”பிரதர் படம் நல்லதொரு டீசன்டான   மூவி.‌ லீனியர் நேரேஷனில் அழகான படமாகவும் குடும்பம் முழுவதும் மகிழ்ச்சி அடையும் வகையிலும்  உருவாகி இருக்கிறது. ஒரு தீபாவளி படத்திற்கு என்னென்ன டிக் மார்க் வேண்டுமோ, அவை எல்லாம் ஒன்றாக சேர்ந்திருக்கும் படம் தான் பிரதர்.  இந்தப் படத்தை உருவாக்கும் போதும் நாங்கள் அனைவரும் சந்தோஷமாகவே பணியாற்றினோம்.

படப்பிடிப்பு நடைபெறும் தருணங்களில் நாங்கள் அனைவரும் ஒரு குடும்பமாகத்தான் இருந்தோம். தயாரிப்பாளர் சுந்தர் எங்கள் அனைவருக்கும் அனைத்து வசதிகளையும் அளித்தார்.  படப்பிடிப்பு நடைபெற்ற நாட்கள் முழுவதும் அனைவரிடமும் அன்பும், அக்கறையும் இருந்தது. இந்தப் படத்தில் நடித்த  நடிகர்களையும் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களையும் மறக்க முடியாது. கடுமையான உழைப்பில் உருவான படம் இது.

ஸ்டண்ட் மாஸ்டர்  ஸ்டன்னர்  சாமை சிறுவயதில் இருந்தே தெரியும். பேராண்மை படத்தில் மரத்தின் மீது ஓடும் காட்சி ஒன்று இருக்கும். அந்த காட்சியில் நான் நடிக்க தயங்கிய போது.. அவர் அவர் அந்த மரத்தின் மீது ஓடி காண்பித்து நம்பிக்கையை உண்டாக்கினார். இந்த படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.

கலை இயக்குநர் கிஷோர் எந்த ஒரு சிக்கலான தருணத்தையும் எளிதாக கையாளக்கூடிய திறமை மிக்கவர். ஃபேமிலி டிராமா ஜானர் திரைப்படங்களை எடிட் செய்வது கஷ்டமான விஷயம். என் அப்பா எடிட்டர் மோகன் நிறைய ஃபேமிலி டிராமா ஜானரிலான படங்களை எடிட் செய்திருக்கிறார்.

அப்போது நான் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். அது எவ்வளவு கடினம் என எனக்குத் தெரியும்.  இந்த மாதிரி படங்களை எடிட் செய்வதற்கு பயிற்சியும்ஸஅனுபவமும் வேண்டும். அது எல்லாம் இப்படத்தை தொகுத்த ஆசிஷுக்கு இருக்கிறது.

இந்தப் படத்தில் நானும் நன்றாக நடித்திருக்கிறேன். இந்தப் படம் அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு சென்று ஜாலியாக ரசிக்கக்கூடிய படம். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்,”.

 

— மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.