அங்குசம் பார்வையில் ‘தி பெட்’
சென்னை ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் ஸ்ரீகாந்த், பிளாக் பாண்டி, விக்ரம், விஜே பப்பு ஆகிய நான்கு நண்பர்களுக்கும் வீக் எண்ட் பார்ட்டிக்காக புதுச்சேரி, ஈசிஆர் பார் போய் போய் சலித்துப் போகிறது. அதனால் ஒரு சேஞ்சுக்காக வீக் எண்ட் பார்ட்டியை ஊட்டியில் ஜாலி பண்ண ப்ளான் போட்டு ‘கால் கேர்ள்’ சிருஷ்டி டாங்கே வை கூட்டிக் கொண்டு போகிறார்கள். போன முதல் நாள் இரவு, ஸ்ரீகாந்தைத் தவிர மற்ற மூவரும் ஓவராக சரக்கடித்துவிட்டு மட்டையாகிவிடுகிறார்கள். மறுநாள் சிருஷ்டி டாங்கே ஃபுல் மப்பாகி மட்டையாகிவிடுகிறார். இதனால் ‘பெட் மேட்டர்’ முடியாமல் தவிக்கிறார்கள் மூவரும். ஆனால் மூன்றாம் நாளோ சிருஷ்டி டாங்கே லாட்ஜிலிருந்து காணாமல் போகிறார். இந்த நேரத்தில் நால்வரில் ஒருவரான விக்ரம் ஊட்டியின் சாலையோரம் சாக்கு மூட்டையில் பிணமாகக் கிடக்கிறார். கொலையை விசாரிக்க களத்தில் இறங்குகிறார்கள் இன்ஸ்பெக்டர் ஜான்விஜய்யும் தேவிப்ரியாவும்.
நண்பன் கொலையானது தெரியாமல் மூவரும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். விக்ரமைக் கொன்றது யார்? சிருஷ்டி டாங்கேவின் நிலை என்ன? இதான் இந்த ‘தி பெட்’டின் க்ளைமாக்ஸ்.
ஒரு பெட் கதை சொல்வது போல படத்தை ஆரம்பிக்கிறார் டைரக்டர் மனிபாரதி. ஆனால் இடைவேளை வரை நம்மளை கொஞ்சம் படுத்தி எடுக்கிறார். அவ்வப்போது டபுள் மீனிங் டயலாக் போட்டுத் தாக்குறார். ஸ்ரீகாந்த் வழக்கம் போல உம்முன்னு வந்து உம்முன்னு போகிறார். சிருஷ்டி டாங்கேவின் கேரக்டர் கொஞ்சம் பிசகியிருந்தாலும் ஏடாகூடமாகியிருக்கும், ஆபாசம் தாண்டவமாடியிருக்கும். ஆனால் இதை கேர்ஃபுல்லா டீல் பண்ணியிருக்கார் டைரக்டர்.
சிருஷ்டி டாங்கேவின் அம்மாவாக வரும் திவ்யா ஸ்ரீதர் சும்மா நச்சுன்னு இருக்கார். “நாலு நாள் பேக்கேஜுக்கு ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கு 10 ஆயிரம்னா பாப்பா ஓகே” என ஸ்ரீகாந்திடம் படு கேஷுவலாக ரேட் பேசுகிறார். கேரளா இம்போர்ட்டான இவர், தமிழ் சினிமாவில் பெரிய ரவுண்ட் வர வாய்ப்பிருக்கு.
இன்ஸ்பெக்டராக வரும் ஜான் விஜய் இதில் கொஞ்சம் அடக்கி வாசிச்சுருக்கார். இவரது மனைவி ரிஷாவும் பெட் சீனில் சூடேற்றுகிறார். ஆனால் சூடு தணிவதற்குள் பெட்டிலிருந்து ஜான்விஜய் எழுந்து போனதும் எரிச்சலாகிறார். மறுநாள் காலையில் அரை கப் காபி கொடுத்துவிட்டு, “நேத்து பாதில முடிஞ்சது, அதனால் பாதி கப்” என கடுகடுப்பது, அதற்க்டுத்த நாள் ஃபுல் கப் என ரிஷாவுக்கு கிளுகிளுப்பு மூடு தான். சப்-இன்ஸ்பெக்டராக ஓல்டு தேவிப்ரியாவும் பாலிஸாத்தான் இருக்கார். நம்ம திருச்சி சாதனாவுக்கு இதில் ஐட்டம் வேசம், கரெக்டா மேட்ச் ஆகியிருக்கு.
இடைவேளைக்குப் பின் கடைசி அரை மணி நேரம் ஜான் விஜய்யின் விசாரணைக் கொக்கியில் ஸ்ரீகாந்த் மாட்டிய பிறகு படம் கொஞ்சம் க்ரிப்பா இருக்கு.
‘தி பெட்’ டெட் ஸ்லோ…
— ஜெடிஆர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.