அதிகாரிகளை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை ; முதல்வர் போட்ட முட்டுக்கட்டை!
அதிமுக ஆட்சியில் திமுக நிர்வாகிகளுடன் மல்லுக்கட்டி சண்டை போட்டுகிட்டு இருந்த இருந்த பல அதிகாரிகள் இன்னும் அதே பொறுப்புகளில் நீடிக்கிறார்கள். இதனால இப்ப ஆட்சியைப் பிடித்து இருக்கக்கூடிய திமுக காரங்க அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள், மூத்த நிர்வாகிகள் என்று பலரும் இந்த அதிகாரியை மாற்றனும், இந்த அதிகாரிய மாற்றனும் என்று லிஸ்ட் தயார் பண்ணி மாவட்ட தலைமைக்கு அனுப்பி வச்சாங்க. அத மாவட்ட தலைமை மாநிலத் தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளது, இத பார்த்த அறிவாலயம்.
நிர்வாக மாற்றம் எப்ப நடக்கனும், எப்படி நடக்கனும் என்று எங்களுக்கு தெரியும், கொஞ்ச நாள் அமைதியா இருங்க, எந்த அதிகாரியும் உங்ககிட்ட வெச்சிக்க மாட்டாங்க இனிமேல், அதனால கொஞ்சம் அனுசரித்துப் போங்க, கடந்த ஆட்சியில் இருந்த அதிகாரி இப்போதும் அதே பதவியில் தான் இருக்காருன்னு கவலைப்பட தேவையில்லை, நீங்க போங்க உங்களுக்கு நடக்க வேண்டியது நடக்கும் என்று அறிவாலய வட்டாரம் கடிதங்களோடு வந்தவர்களை திருப்பி அனுப்பி வைத்ததாம்.
அதேநேரம் அதிகாரிகள் ஒவ்வொருவருக்கும் வாய்மொழி உத்தரவு போயிருக்கிறாதாம், சென்ற ஆட்சியில் எப்படி இருந்தீங்கன்னு இப்ப பேச வேண்டிய அவசியம் இல்லை, இனிமேல் எப்படி இருக்கப் போகிறீர்கள் என்பது தான் முக்கியம். நிர்வாகிகளுடன் கொஞ்சம் அனுசரித்துப் போங்க, போன ஆட்சியில் இருந்த மாதிரியே மற்ற விஷயங்கள் எல்லாம் தொடர்ந்து நடக்கட்டும். கடந்த காலத்து நட்பை எல்லாம் முடிச்சுக்கோங்க அது உங்களுக்கு நல்லது கிடையாது, என்று கடந்த கால ஆட்சியில் அதிகாரியா இருந்த எல்லா நண்பர்களுக்கும் தகவல் சென்று இருக்காம்.