திருச்சி சாரதாஸ் ஜவுளி கடைக்கு சோதனைக்கு சென்ற முதல் அதிகாரி !
திருச்சி சாரதாஸ் ஜவுளி கடைக்கு சோதனைக்கு சென்ற முதல் அதிகாரி !
தமிழகத்தின் மிகப்பெரிய ஜவுளி சாம்ராஜ்யம் என்று விளம்பரம் செய்யப்படுவது திருச்சி சாரதாஸ் ஜவுளி கடை. விளம்பரத்தில் குறிப்பிடப்படுவது போல் மிகப்பெரிய சாம்ராஜ்யம்தான் சாரதாஸ் என்கின்றனர் வியாபாரிகள். பத்திரிக்கைகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் என அனைவரிடமும் ‘நட்பாக’ இருப்பதாலோ என்னவோ சாரதாஸ்க்கு தனி மரியாதை. அத்தகைய அதிகாரம் பொருந்திய சாரதாஸ் நிறுவனத்திற்குள் புகுந்து சோதனை நடத்தி சாதனை படைத்திருக்கிறார் திருச்சி அதிகாரி ஒருவர்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சப் கலெக்டராக பணியாற்றி வருபவர் ஆதித்யா செந்தில்குமார். இவர் மேலும் சில அதிகாரிகளோடு நேற்று திடீரென சாரதாஸ் கடைக்குள் புகுந்து நீங்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். அவற்றை பறிமுதல் செய்கிறோம் என கூறி அதிகாரிகள் வைத்து சோதனை செய்துள்ளார். பல்வேறு கவுன்டர்களில் என மொத்தம் 2 டன் பிளாஸ்டிக் பைகளை கைப்பற்றிய அதிகாரிகள் அவற்றை எடுத்துச் சென்று விட்டனர். கடந்த சில ஆண்டுகளில் சாரதாஸ் கடைக்கு ரெய்டுக்கு சென்ற முதல் அதிகாரி இவர்தான் என்கின்றனர் வியாபார சங்கத்தினர்.