வாய் இருக்குனு எத வேணாலும் பேசுவாரா? சூமோட்டோ கேஸ் போட வச்சிராதீங்க – சீமானுக்கு எதிராக சாட்டையை சுழற்றிய உயர் நீதிமன்றம் !
வாய் இருக்குனு எத வேணாலும் பேசுவாரா? சூமோட்டோ கேஸ் போட வச்சிராதீங்க – சீமானுக்கு எதிராக சாட்டையை சுழற்றிய உயர் நீதிமன்றம் !
”அண்ணன் மேல கேசு போட்டு கோர்ட்டுக்கு அலைய வுட்றாங்க. டெய்லி ஒரு கேசு வேற போடுறாங்க. அண்ணன் கோர்ட்ல ஆஜராக தேவையில்லனு உத்தரவு போடுங்க” எசமான்னு … சென்னை உயர்நீதிமன்ற படியேறி இருந்தார்கள் அண்ணன் சீமானின் தம்பிகள்.
வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன்பாக பிப்-06 அன்று விசாரணைக்கு வந்தது. என்ன வழக்கு? எதுக்காக வழக்கு? என்ன பின்னணி?னு நீதிபதி கொஞ்சம் ஆராய்ஞ்சி பார்த்தாரு.
கடந்த 2019-ஆம் வருஷம், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சமயத்துல நாம் தமிழர்கட்சி வேட்பாளரை ஆதரிச்சி அண்ணன் தேர்தல் பிரச்சாரத்துக்கு போயிருந்தாரு. அப்போ, வழக்கம் போல ஆறுமணிக்கு மேல மைக்க பிடிச்சவரு, மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இன துரோகி, தேச துரோகி னு சகட்டு மேனிக்கு பேசியிருக்காரு. இந்த சர்ச்சை பேச்சு தொடர்பா, லோக்கல் காங்கிரஸ் கட்சி தலைவர், கஞ்சனூர் போலீசில் புகார் கொடுக்க. போலீசும் வழக்குப்பதிவு செஞ்சு, விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்குல ஆஜராக சொல்லி, சும்மா டார்ச்சர் பன்றாங்கனுதான் … இதுல இருந்து அண்ணனை விடுவிக்க வேணுனுதான் இப்போ வழக்கு.
இந்த வழக்குல முதல் தகவல் அறிக்கை, இறுதி அறிக்கை, சாட்சிகளின் வாக்குமூலத்த வச்சி பார்க்கும்போது, சீமானுக்கு எதிரான குற்றச்சாட்டு முகாந்திரம் இருக்கு. கேசு நடக்கட்டும். நீதிமன்றம் முடிவெடுக்கட்டும். சீமானை வழக்குல இருந்து விடுவிக்க முடியாதுனு நீதிபதி வேல்முருகன் உத்தரவு போட்டிருக்காரு.
சரி, வழக்கு நடக்கட்டும்யா… அண்ணனை கோர்ட்ல ஆஜர் ஆகிறதுல இருந்தாச்சும் விடுவிச்சு விடுங்களேன்… அண்ணனுக்கு அன்றாடம் ஆயிரம் சோலி இருக்கு… இதுல கோர்ட் கோர்ட் டா அலைய முடியுமானு அண்ணன் தரப்பில் வாதங்களை அடுக்க …
கடுப்பான, மைலார்ட் … வாய் இருக்குனு எதை வேணாலும் பேசிடலானு நினைக்கிறாரா, சீமான்? ஒவ்வொரு நாளும் உங்கள் மனுதாரர் சீமான் அவதூறாகவும் திமிராகவும் வரம்பு மீறி பேசுகிறார். அப்பொழுது வழக்குப்பதிவு செய்ய தானே வேண்டும்? நீதிமன்றம் அதில் தலையிட முடியாதுனு கறார் காட்டியிருக்கிறார்.
இந்திய அரசியல் சாசனம் Article 19 இன் படி எந்த அவதூறை வேண்டுமானாலும் பேசிவிட்டு தப்பித்து விடலாம் என்று சீமான் கணக்கு போட வேண்டாம். தினசரி சீமான் யாரையாவது திட்டிக்கொண்டு அவதூறு பரப்பிக் கொண்டு தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கிறார். சமுதாயத்தில் பதட்டம் ஏற்படுத்துகிறார். இது மிகவும் கண்டனத்துக்குரிய செயல். நீதிமன்றம் கண்களை மூடிக்கொள்ளாது. இதுவரை நீதிமன்றம் தானாக வந்து இந்த விஷயத்தை கையில் எடுக்கவில்லை. கையில் எடுக்க வைத்து விடாதீர்கள்.
அவர் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க முடியாது. குறைந்த பட்சம் அவர் நான்கு நீதிமன்றம் ஏறி இறங்கினால் தான் அவருக்கு வாய் கட்டுப்படுத்த இயலும். தற்பொழுது நிதானமற்ற மனிதராக இருக்கிறார். நீதிமன்றம் செல்லட்டும் என்னால் விலக்களிக்க முடியாது. போகிற போக்கில் நிதானம் இல்லாமல் எதையோ பேசிக் கொண்டே இருக்கிறார். ” என்பதாக தனது கடும் கண்டனத்தை பதிவு செய்து, சீமான் தரப்பில் முன்வைத்த கோரிக்கைகள் அத்தனையும் நிராகரித்து உத்தரவு பிறத்திருக்கிறார், நீதிபதி வேல்முருகன்.
அட, நீங்க வேற … சீமான் நடந்துக்கிறதல்லாம் வச்சி பார்த்தா … நகரம் மறுபக்கம் திரைப்பட காட்சியில் நகைச்சுவை நடிகர் வடிவேலு கதாபாத்திரம் போல … மோதிப்பார் என்று சவால் விடுவதும்… பின்னர், மொக்கை காமெடி செய்துவிட்டு ஜகா வாங்கி கடந்து போவதுமாகத்தான் போக்கு காட்டி வருகிறார். ஜட்ஜ் சொன்ன மாதிரியே, நிதானமற்ற மனிதராகத்தான் இருக்கிறார். டெய்லி நாலு கோர்ட்டுக்கு ஏறி இறங்குனாக்கூட, மாற்றம் வருமான்னு தெரியலனு தலையில் அடித்துக் கொள்கிறார்கள் பொதுஜனங்கள்.
புளியம் விளாறு