அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த மாவட்டத்தில் தொடரும் வருமான வரித்துறை சோதனை!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த மாவட்டத்தில் தொடரும் வருமான வரித்துறை சோதனை!
தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான கரூர் மற்றும் கோவை மாவட்டங்களில் வருமான வரித் துறையினர் கடந்த மாதம் 8 நாட்களுக்கும் மேலாக, அவரது வீடு மற்றும் அவரது அலுவலகம் தம்பி இல்லம் உறவினர்கள் இல்லம், நண்பர்கள் இல்லம், தொழில் நிறுவனங்கள் என பல்வேறு இடங்களில் நூற்றுக்கணக்கான வருமான வருமானவரித்துறையினர் துணை ராணுவ உதவியோடு சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கோயம்புத்தூரிலும் வருமானவரித்துறை பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது. இந்நிலையில் மீண்டும் இன்று 13 ஆம் தேதி கரூரில் 4 இடங்களிலும், அது போல சென்னையிலும், வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக குளித்தலை அருகே உள்ள லாலாபேட்டை பகுதி காஞ்சி நகரில் அவருக்கு நெருக்கமான ஆடிட்டர் திருநாவுக்கரசு என்பவரது வீட்டிற்கு இன்று (13.06.2023) காலை சுமார் 11 மணியளவில்
இரண்டு கார்களில் வந்த அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் உதவியோடு, சோதனை செய்வதற்காக வந்தனர்.
வீடு பூட்டப்பட்டிருந்ததால், வீட்டின் உரிமையாளர் ஆடிட்டர் திருநாவுக்கரசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வராததால் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேர் மற்றும் துணை ராணுவத்தினர் 4 பேர் என என 7 பேர் அடங்கிய குழுவினர் அங்கேயே சோதனை செய்வதற்காக முகாமிட்டுள்ளனர்.
-நௌஷாத்