100 நாள் வேலை திட்டத்தில் 30ற்கும் மேற்பட்டோர் காயம்!

0

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

100 நாள் வேலை திட்டத்தில் 30ற்கும் மேற்பட்டோர் காயம்!

சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் ஊராட்சிக்குட்பட்ட சக்கந்தி கிராம மனக்குளத்து கண்மாய் முனியாண்டி கோவில் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்த போது அங்கு சேகரிக்கப்பட்ட குப்பைகளை ஆலமரத்தின் அருகே தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

2

அப்போது, ஆலமரத்ததில் கூடுகட்டியிருந்த தேனீக்கள் கூட்டில் இருந்து வெளியேறி, அங்கு பணிபுரிந்த சிவகாமி,ஆறுமுகம்,காந்தி,அஞ்சலை ஆகியோர் உட்பட 30க்கும் மேற்பட்டோரை கொட்டியது.

3

இதில் காயம் அடைந்தவர்கள் மீட்க்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில்,அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

-பாலாஜி

Leave A Reply

Your email address will not be published.