வீடு கட்டி தருவதாக 45 லட்சம் மோசடி.. பிஜேபி பிரமுகர் உட்பட 3 பேர் கைது!

0

வீடு கட்டி தருவதாக 45 லட்சம் மோசடி.. பிஜேபி பிரமுகர் உட்பட 3 பேர் கைது!

போடி அருகே மேல சொக்கநாதர் புரத்தைச் சேர்ந்த ராகுல் ஜேக்கப் இவருடைய மகன் ராஜி மேத்திவ். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு துபாயில் ஹெலிகாப்டர் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் நிதி மேலாக பணிபுரிந்து வந்தார். அப்போது போடி மொட்டு அருகே மணப்பட்டி பகுதியில் வீடுகட்ட திட்டமிட்டார். இதனை அறிந்த பெரியகுளம் வடகரை சேர்ந்த ஷேக் முகமது மகன் முகமது என்பவர் அவருக்கு வீடு கட்டித் தருவதாக கூறினார். இதனை நம்பி அவர் கடந்த 2012 ஆம் ஆண்டு மே மாதம் 45 லட்சத்தை முகமதுவின் வங்கிக் கணக்கில் ராஜீவ் மேத்திவ் அனுப்பினார்.

https://businesstrichy.com/the-royal-mahal/

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

பணத்தை பெற்றுக்கொண்ட முகமது முழுமையாக வீடு கட்டித் தராமல் பாதியிலேயே நிறுத்தினார். பணத்தை திருப்பி கேட்டால் பெரியகுளம் அருகே எண்ட புளி பகுதியில் உள்ள ஒரு இடத்தை ராஜீவ் மேத்திவ் பெயருக்கு முகமது எழுதி கொடுத்தார். அதன் பிறகு அது பஞ்சமி நிலம் என தெரிய வந்தது. இது குறித்து கேட்டபோது தேனி அரண்மனை புதூரில் ஒரு இடத்தை முகமது பதிந்து கொடுத்தார். ஆனால் அந்த இடத்தில் மீது மோசடி வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

இதனையடுத்து ஏற்கனவே எண்ட புளியில் கொடுத்த இடத்தை விலைக்கு விற்று தருவதாக கூறிய முகமது பெரியகுளம் வடகரையை சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கு அந்த இடத்தை பத்திர பதிவு செய்தார். அதிலும் முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது. இப்பிரச்சனை தலையிட்ட தேனி அரண்மனை புதூர், வசந்தம் நகரை சேர்ந்த மரக்காமலை என்பவர் தலா ரூ 5 லட்சம் மதிப்பிலான இரண்டு காசோலைகளை ராஜீ மேத்திவ் கொடுத்தார்.

ஆனால் அந்த காசோலைகளும் வங்கியில் பணம் இல்லாததால் திரும்பியது. இதனால் தான் மோசடி செய்யப்பட்டது உணர்ந்து ராஜீ மேத்திவ் இது குறித்து தேனி மாவட்ட குற்றப் பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். இதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் முகமது, பிரபாகரன், மற்றும் பிஜேபி பிரமுகர் மரக்காமலை ஆகிய மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

– ஜெ.ஜெ

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.