அங்குசம் சேனலில் இணைய

பார் டூ சந்துக்கடை-மந்திரியின் புதிய ரூட்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நீதிமன்றத்தின் உத்தரவின் படி தமிழகத்தில் பார் கள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதால்  சட்ட விரோதமாக சந்துக்கடை முறையை நடைமுறைப்படுத்த அமைச்சர்  முடிவு செய்துள்ளார்.

கொரோனாவை முன்னிட்டு தமிழகம் முழுவ தும் பார்கள் மூடப்பட்டிருந்து நிலையில், டாஸ்மாக் நிறுவனத்தால் சில்லறை மதுபான கடைகளுக்கு அருகில் உள்ள பார்களில் திண்பண்டங்கள் விற்பனை மற்றும் காலி பாட்டில்களை சேகரிப்பதற்கு புது டெண்டர் குறித்த  அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில், கொரோனா ஊரடங்கின் காரணமாக பார்கள் மூடப்பட்டிருந்ததால், புதிய டெண்டருக்கு பதிலாக பழைய டெண்டரை நீட்டித்தல், நில உரிமையாளர்களின் தடையில்லா சான்றை கட்டாயப்படுத்தக்கூடாது போன்ற கோரிக்கைகளுடன் பல வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டன.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

இவ்வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி சி.சரவணன், வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டதோடு மட்டுமில்லாமல், தமிழ்நாடு மதுவிலக்கு சட்டப்படி, பார் நடத்த டாஸ்மாக்குக்கு அதிகாரம் இல்லாததால், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள பார்களை ஆறு மாதங்களுக்குள் மூட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

மேலும், 1937 தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் கீழ் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பதற்கு மட்டுமே அனுமதி உண்டு, அங்கு வாங்கும் மதுபானங்களை வீடுகளிலோ அல்லது தனியான இடங்களிலோ அருந்தலாம் என்று தெரிவித்தார். இதை சற்றும் எதிர்பாராதா தமிழக அரசு உத்தரவை எதிர்த்து  சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அதில், டாஸ்மாக் பார் டெண்டரை எதிர்த்து தான் வழக்கு தொடரப்பட்டதாகவும், டாஸ்மாக் கடைகள் அருகில் பார் அமைக்க கூடாது என எந்த வாதங்களும் முன் வைக்கப்படாத நிலையில், தனி நீதிபதி, பார்களை மூட வேண்டும் என பிறப்பித்த உத்தரவு தேவையற்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இந்த வழக்கிற்கான தீர்ப்பு வரும் வரையில் பார்களை இயக்க முடியாது என்பதால், சந்துக்கடைகளை இயக்க மந்திரியின் நெருக்கமான வட்டாராங்கள் கூறுகின்றனர். இதனால், ஆளும் கட்சியைச்சேர்ந்த கிராமங்கள் முதல் சிட்டிவரை பொறுப்பில் உள்ள ஆளும் கட்சி பிரமுகர்கள் அந்த அந்த ஏரியாவில் சந்துகடை நடத்துவதற்கு இடங்களை தேடியும், நடத்தியும் அவரவர் வருமானத்திற்கு வழிகிடைத்து விட்டதாக சந்தோஷத்தில் புகுந்து விளையாடி வருகின்றனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.