அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

முதல்வரால் நின்று போன கடை திறப்பு !

திருச்சியில் அடகு நகையை விற்க

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றம் பக்க நாடு பஞ்சாயத்துக்குட்பட்ட ஆணை பள்ளம் கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பாஜக நிர்வாகி தங்கமணி, அந்தப் பகுதி மக்களுடன் இணைந்து நியாயவிலைக் கடை கட்டிடம் கொண்டு வர நெடுங்காலமாக கோரிக்கை மனுவை வைத்து தற்போது பகுதிநேர நியாய விலை கடை கட்டிடம் கட்டப்பட்டது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இந்தக் கட்டிடம் இரண்டு முறை திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்து”  முதல்வர் ப்ரோக்ராம் சேஞ்ச்” என்ற அடிப்படையில் கட்டிட திறப்பு விழா ரத்து செய்யப்பட்டது. இதனால் அந்த கிராம பொதுமக்கள் பெரும் மன வேதனைக்கு உள்ளார்கள். ஒவ்வொரு வீடாக 100 ரூபாய் 200 ரூபாய் என்று பெற்று திறப்பு விழாவுக்கு வாழை மரம் சேர் மின் விளக்கு அலங்காரம் ஊர் பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.

https://www.livyashree.com/

அரசியல்வாதிகள் மெத்தனப்போக்கு அலட்சியத்தால் மக்கள் பயன்பாட்டுக்கு வரவேண்டிய கட்டிடம் காலதாமதம் ஆகிக் கொண்டிருக்கின்றது. இதனால் கிராம பொதுமக்கள் ரேஷன் பொருள்களை வாங்க  சுமார் மூன்று கிலோ மீட்டர்கள் சொல்ல வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக தலையிட்டு உடனடியாக கட்டிடத்தை திறக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் கிராம மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

 

 -மு. குபேரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.