பொறம்போக்கு இடத்தை ரியல் எஸ்டேட் அதிபருக்கு தாரை வார்த்த ஊராட்சி தலைவி ? போர்க்கொடி தூக்கிய வார்டு உறுப்பினர்கள் ! திருப்பத்தூர் அருகே பரபரப்பு
பொறம்போக்கு இடத்தை ரியல் எஸ்டேட் அதிபருக்கு தாரை வார்த்த ஊராட்சி தலைவி ? போர்க்கொடி தூக்கிய வார்டு உறுப்பினர்கள் ! திருப்பத்தூர் அருகே பரபரப்பு – ஊராட்சி மன்ற தலைவர் என்பவர் அந்த ஊராட்சியின் செயல் அதிகாரம் கொண்டவரும் ஆவார். ஊராட்சியில் உள்ள குடிநீர் குழாய்களை பராமரிப்பு செய்வது , குடிநீர் திட்டங்களை நிறைவேற்றுவது அவரது தலையாய பணியாகும்.மேலும் ஊராட்சி ரோடு களை பராமரிப்பு செய்வதும் அவரது பணியே.
இதை தவறாக புரிந்து கொண்ட ஊராட்சி தலைவி ஒருவர் அரசுக்கு சொந்தமான பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொது வழியை ஒட்டியுள்ள இடத்தை ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டு மனைகளுக்கு தாரை வார்த்த ஊராட்சி தலைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் அளித்து ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பரபரப்பை கிளப்பியுள்ளனர்
திருப்பத்தூர் மாவட்டம் குருசிலாப்பட்டு ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மொத்தமுள்ள 9 பேரில் 5 உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்காமல் கடந்த 29-02-2024-ம் தேதியில் குருசிலாப்பட்டு ஊராட்சியில் சிறப்பு ஊராட்சி மன்ற கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கான அறிவிப்பின் போது எந்த உறுப்பினர்களுக்கும். அஜண்ட்டா வழங்கப்படவில்லை.
அன்றைய கூட்டத்தில் தலைவிக்கு வேண்டப்பட்ட 2 உறுப்பினர்களை அழைத்தும் மற்ற இரண்டு உறுப்பினர்களுக்கு பொய்யான தகவல்களை அளித்து வெறும் 4 உறுப்பினர்களோடு , வைத்துக் கொண்டு கந்திலி பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் முகமது முஸ்தபா என்பவரின் வீட்டு மனைகளுக்கு ஓட்டி உள்ள பொது வழி அருகில் அமைந்திருக்கும் அரசுக்கு சொந்தமான இடத்தை தாரை வார்த்து அப்ரூவல் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார் எனவும் , உரிய அதிகாரிகளின் முன்னிலையில் மீண்டும் ஊராட்சி மன்ற கூட்டத்தை நடத்தி மேற்கண்ட தேதியில் நிறைவேற்றிய தீர்மானங்களை நீக்கி குருசிலாப்பட்டு ஊராட்சி மன்றத்தில் மொத்தமுள்ள தலைவர் அல்லாமல் 9 பேரில் 7 உறுப்பினர்களான,பி சண்முகம் , ஜி ராதா,கே பிரேம்குமார்,எம் அகிலா எஸ் பிரேமா , எஸ் பண்பரசி, எஸ் ஹேமாமாலினி, ஆகியோர் ஊராட்சிமன்ற தலைவிக்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சியின் வார்டு உறுப்பினர் பி. சண்முகத்திடம் பேசினோம். எங்கள் ஊராட்சியின் தலைவராக இருப்பவர் திருமதி சரோஜா இவர் சமூகநலத்துறையில் அரசு அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் வருகையின் போது நன்றாகத்தான் செயலாற்றினார் போக போகதான் அவரின் செயல்பாடுகள் மோசமானது.
உதாரணமாக ,கந்திலி பகுதியை சேர்ந்த முகமது முஸ்தபா என்ற ரியல் எஸ்டேட் அதிபருக்கு ஆதரவாக 19-02-2024-ம் தேதியில் சர்வே எண். 152/18, 152/1D, 152/4, 153-ல் உள்ள நிலத்தில் உள்ள வீட்டு மனைகள் ஏற்படுத்தி விற்பனை செய்ய அப்ரூவல் வழங்கி உள்ளார் ஊராட்சி தலைவர் அதன் அருகில் சுமார் 50 லட்சத்திற்கு பெறுமானம் கொண்ட சர்வே எண். 157/1, உள்ள அரசாங்க பொது இடத்தை (மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான கிராம நத்தம் இடங்கள் ) மேற்கண்ட அப்ரூவல் வழங்கி சாலை அமைக்க வழங்கப்பட்ட அப்ரூவல் மோசடியானது.
இது குறித்த விபரங்களை நான் மற்ற உறுப்பினர்களுக்கு தெளிவாக எடுத்துக் கூறிய பிறகு மேற்கண்ட அப்ரூவலுக்கு யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. மொத்தமுள்ள (கிழக்கு, மேற்காக) 13.1 மீ அளவில் கிழக்கில் 6 மீட்டர் அளவில் பொது வழி போக எஞ்சிய 7.1 மீ அளவு அந்த இடம் அரசுக்கு உரியதாகும். அந்த இடத்தில் நடைப்பயிற்சி பூங்கா, பழத்தோட்டம். விளையாட்டு மைதானம் அல்லது மரம் நடுதல் போன்ற ஏதாவது ஒன்றை அரசு பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியும்.
ஆனால் ஊராட்சி தலைவர் சரோஜா , செயலாளர் பிரபாகரன் கூட்டாக சேர்ந்து கொண்டு மேற்கண்ட இடத்தை தனியாருக்கு தாரை வார்த்து அரசுக்கு மிகுந்த அநீதி செய்துள்ளார்கள். மேலும் சாலை அமைப்பதாக கூறுகின்றனர் இதன் அருகில் 6.மீ. தூரத்தில் உள்ள பொது வழி இருக்கும் போது மற்றோரு சாலை அமைக்க வேண்டிய நிலை கேலிக்கூத்தானது.
இரண்டு ஊராட்சி மன்ற உறுப்பினர்களிடம் சரியான தகவலை கூறாமல் ரியல் எஸ்டேட் அதிபரிடம், தலைவரோடு ஆதாயம் அடைந்த மற்ற இரண்டு உறுப்பினர்களை வைத்து கையொப்பம் பெற்ற ஊராட்சி மன்ற தலைவரின் செயல் மற்ற 5 உறுப்பினர்களுக்கு சமீபத்தில்தான் தெரியவந்தது. , 19-02-2024-ம் தேதி வாய்மொழி உத்தரவின் பேரில் ஊராட்சி அலுவலகத்தில் சில உறுப்பினர்கள் கூடினார்கள் .
ஊராட்சி மன்றத்தின் ஒன்றாவது வார்டு முத்த உறுப்பினராகிய நான் அன்று வரவில்லை. இது குறித்து மற்ற உறுப்பினர்கள் அவரிடம் விளக்கம் கேட்டபோது (நான்) அன்றைய தினம் காலையிலே தீர்மானங்களுக்கு வாய் மூலமாக ஒப்புதல் வழங்கிவிட்டு சென்றுவிட்டதாக பொய்யாக கூறிய ஊராட்சி தலைவர் சரோஜாவின் பேச்சை அவர்கள் நம்பவில்லை.
ராதாஞானசேகரன், பிரேம்குமார், இந்த இரண்டு உறுப்பினர்களை தவிர வேறு யாரும் அன்றைய கூட்டம் தொடர்பான தீர்மான புத்தகத்தில் கையெழுத்து இடவில்லை , இதுகுறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட (ஜூலை 2 ந்தேதி ) கிராம சபை கூட்டத்தில் நான் கலந்துகொண்டு மேற்கூறிய ரியல் எஸ்டேட் அதிபருக்கு தாரை வார்த்த அரசாங்க இடத்திற்கு போடப்பட்ட அப்ரூவலை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன் அப்போது ஆக்ரோஷம் அடைந்த தலைவர் சரோஜா டேய் அறிவு கெட்டவனே வக்காருடா என்று ஒருமையில் பேசினார்.
வயது வித்தியாசம் மூத்த உறுப்பினர் என்று கூட பார்க்கவில்லை நான் பெரியார் கொள்கை வாதி சாதி மதம் அற்றவன் அதனால் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் இடம் முறையிட்ட போது போலீசிடம் புகார் அளியுங்கள் என்றதால் குரிசிலாப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். சம்மந்தப்பட்ட இடத்தினை தாரை வார்த்ததில் வருவாய் துறை மற்றும் உள்ளாட்சி துறை அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்காலாம் என இப்பகுதிமக்களின் கருத்தாக உள்ளது என்றார்.
ஊராட்சி மன்ற கூட்டங்கள் நடக்குபோது நோட்டு புத்தகத்தில் மட்டுமே உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்குவது வழக்கமாகும் , ஆனால் அஜண்ட்டா கொடுக்காமல் உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டி கையெழுத்து போட்டபிறகு இடை சொருகல்களாக தீர்மானங்களை எழுதி மோசடி செய்துள்ளார்கள்.
அதனால் ரியல் எஸ்டேட் அதிபருக்காக போடப்பட்ட தீர்மானத்தை உரிய அரசு அதிகாரியின் தலைமையில் ஊராட்சி கூட்டத்தை கூட்டி அப்ரூவலை ரத்து செய்ய வேண்டும் என்கிறார் மற்றொரு உறுப்பினரான எஸ் பிரேமா.
இது சம்மந்தாமாக ஊராட்சி மன்ற தலைவர் சரோஜா”விடம் கேட்டபோது ? நான் அவசரமாக ஒரு மீட்டிங்கில் இருக்கிறேன் பிறகு அழைப்பதாக கூறியவர் பலமுறை அழைத்தும் நமது அழைப்பை எடுக்கவேயில்லை. ஊராட்சி தலைவர் சரோஜா அவர்கள் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு குறித்து சரியான முறையில் விளக்கம் அளிக்க முன் வந்தால் அங்குசம் செய்தி பிரசுரிக்க தயாராக உள்ளது
புகார் குறித்து மாவட்ட ஆட்சியர் சொன்ன விளக்கம் அது குறித்து விசாரிப்பதாக ஒரே வார்த்தையில் முடித்துக்கொண்டார்.