அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

15 லட்சக் கடை முதல் குங்குமக் கடை வரை’ – மகா உருட்டுக் கடைகளும் மாயமான ஊழல் கடைகளும்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க

நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தின்  முதல்வராக இருந்து, இந்தியாவின் பிரதமர் பதவியை குறிவைத்து களத்தில் இறங்கியதுமே தனக்கு எதிராக காவி சுத்தும் [ கம்பு சுத்தும்னுதான் எழுதணும். இது காவிக்கூட்டம்கிறதால காவி சுத்தும்னு மாத்திருக்கோம் மக்களே] பி.ஜே.பி.யின் சீனியர் தலைவர்களான லால் கிஷன் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி போன்றவர்களை  ஒதுக்கித் தள்ளினார். முதல்வராக இருந்த போது தனக்கு எல்லாமுமாக இருந்த அமித்ஷாவை துணைக்கு வைத்துக் கொண்டு பிரதமர் பதவிக் களத்தில் குதித்தார்.

2000 கோடி முதலீட்டில் பிரம்மாண்டமான பிரச்சாரக் கடை ஒன்றைப் போட்டு, அதில் விற்கும் அனைத்துப் பொருட்களுக்கும் நரேந்திர மோடியை பிராண்ட் அம்பாசிடராக்கினார்கள் தொழிலதிபர்கள்  அதானி & பிரதர்ஸ்.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

“நான் பிரதமரானால் சுவிஸ் பேங்கில் இந்திய பெருமுதலாளிகள் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணத்தை மீட்டு வருவேன். அப்பணத்தை கணக்குப் பண்ணி, எண்ணி சரிபார்த்த பின், அதைப் பிரித்து  இந்தியர்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் போடுவேன்” என முதல் கடையையே கவர்ச்சிகரமாக போட்டார் மோடி.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

அதன் பின் இந்தியா முழுக்க ’குஜராத் மாடல்’ என்ற கடையை விரித்தார் . பெட்ரோல், கேஸ் சிலிண்டர் விலையை பாதியாக குறைப்பேன், இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, இருபது லட்சம் வீடு, நாட்டின் அனைத்து வீடுகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், விவசாயிகள் வாழ்வில் மறுமலர்ச்சி, வியாரிகள் வாழ்வு சுகவாழ்வு, ஏழைகள் எல்லாரும் முதலாளிகள், பாட்டாளிகள் எல்லாரும் பணக்காரர்கள்” என டிசைன் டிசைனாக கடைகளைப் போட்டார்.

இடையிடையே  தேசபக்திக் கடை என்ற  ரசகுல்லா இனிப்புக் கடையும் ”இந்தியா நாசமாப் போனதற்கு நேரு தான் காரணம், இந்திராகாந்தி தான் காரணம்” என்ற காரமான மிளகாய் பஜ்ஜிக் கடையும் போட்டார்.

இப்படி  பலப்பல  டிஷ்களுடன் இந்தியா முழுக்க பிரச்சாரம் மூலமே  பிராஞ்களை ஓப்பன் பண்ணி 2014—ல் இந்தியாவின் பிரதமரும் ஆகிவிட்டார் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள்.

ஆட்சிக்கு வந்த அடுத்த ஆண்டே , “15 லட்சமா? அப்படில்லாம் நான் சொல்லவேயில்லையே. சுவிஸ் பேங்க்காரன்கிட்ட கேட்டேன். அப்படில்லாம் பொசுக்குன்னு தூக்கி கொடுத்துர முடியாதுன்னுட்டான். கருப்புப் பணம் இருந்தாத்தானே அவன் கொடுப்பான். அவன் கொடுத்தா நான் கொடுப்பேன்” என 15 லட்சக் கடையை குளோஸ் பண்ணுவதற்கு பல தினுசான காரணங்களைச் சொன்னார் நம்ம மோடிஜி. இப்போது வரை அவரின் சிஷ்ய கோடிகள் இதையே தான் சொல்லிக் கும்மியடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆட்சிக்கு வந்த இரண்டாவது ஆண்டில் அதாவது 2016 நவம்பர் மாதம் 08—ஆம் தேதி நம்ம மோடிஜி போட்ட அதிர்வேட்டு, சரவெடிக் கடையால ஒட்டு மொத்த இந்தியாவே சிக்கிச்சின்னாபின்னமானது. அதாங்க… பணமதிப்பிழப்புக் கடை.. சிவகாசி, சீனாவுல தயாராகும் பட்டாசுகளைவிட இந்திய நடுத்தர, ஏழை மக்களை பயங்கர சேதாரத்திற்குள்ளாக்கியது இந்தக் கடை. இதிலிருந்து இன்னும் நம்மால் மீள முடியவில்லை என்பது தனிக்கதை.

காஷ்மீர் பஹல்காம் பகுதி
காஷ்மீர் பஹல்காம் பகுதி

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

”1,000, 500 ரூபாய் நோட்டுகளை ஒழித்துவிட்டேன். இதனால கள்ள நோட்டு ஒழியும் கருப்புப் பணம் ஒழியும், தீவிரவாதம் ஒழியும், குறிப்பா காஷ்மீர்ல தீவிரவாதிகள் ஒழிந்துவிடுவார்கள்” என பணமதிப்பிழப்புக் கடைக்கு பகீர் விளக்கம் சொன்னார் நம்ம மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.  “கண்ணாடியத் திருப்பினா எப்படிங்க ஆட்டோ ஓடும்” என கண்பார்வை உள்ளவர்களும் புத்திக்கூர்மை உள்ளவர்களும் கேட்டார்கள். இது எதுவுமே இல்லாத காவிக்கூட்டத்துக்கு இதெப்படி புரியும்?

இப்படியே பல உருட்டுக் கடைகளைப் போட்டு இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வந்து பிரதமரானார் நம்ம மோடிஜி. ”இரண்டு கோடிப் பேருக்கு வேலையா? யாருகிட்ட கேட்குற? போய் பக்கோடா கடை போட்டு பொழக்கிற வழியப்பாரு. இல்லையா டூவிலர்க்கு பஞ்சர் போடும் கடை போட்டு கஞ்சி குடிக்கிற வழியப்பாரு” எனச் சொல்லி இளைஞர்கள் சமுதாயத்தையே இருளில் தள்ளினார்.

இதைக்கூட நாம சகிச்சுப் பழகிட்டோம். ஆனா காஷ்மீர் தீவிரவாதிகள் ஒழிந்துவிடுவார்கள்னு 2016-ல் சொன்னாரு மோடிஜி. ஆனா அதுக்குப் பிறகு தான் புல்வமா தாக்குதல், இப்ப பஹல்காம் தாக்குதல்னு தீவிரவாதிகள் வெறியாட்டம் ஆடினார்கள்.

உடனே ”பாகிஸ்தானைப் போட்டுப் பொளக்கிறேன். தீவிரவாதிகளின் கொலைவெறிக்கு குங்குமத்தை இழந்து தவிக்கும் நம் நாட்டுப் பெண்களுக்கு தீவிரவாதிகளைக் கொன்று, அவர்களின் ரத்தத்தால் குங்குமம் வைப்பேன்” ஆவேச ஆறுதல் கூறினார் நம்ம மோடிஜி. இரண்டு நாட்களுக்கு முன்பு கூட உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு, தனது இல்லத்தில் குங்கும மரக்கன்றுகளை நட்டுள்ளார் நம்ம மாண்புமிகு பிரதமர்.

அந்த மரக்கன்றுகளை 1971 போரில் ஈடுபட்ட பெண்கள் தன்னிடம் குஜராத்தில் கொடுத்தாக புல்லரிக்கும் வீரவரலாற்றுக் கதையும் மோடியே சொன்னார்.

 அஜித் பவார்
அஜித் பவார்

இப்படியெல்லாம் பல டிசைன்களில் உருட்டுக் கடைகளைப் போட்டு தினம்தோறும் இந்தியர்களிடம் மோடிமஸ்தான் வித்தைகள் காட்டும் நம்ம மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள், பல ஊழல் கடைகளை இழுத்து மூடும் மாயஜால வித்தையை அசராமல் செய்கிறார்.

ஹிண்டன்பர்க் அம்பலப்படுத்திய அதானியின் பங்குச் சந்தை ஊழல், மகாராஷ்டிராவில் அஜித்பவாரின் 2,000 கோடி ஊழல், 5 ஜி ஏலத்தில் நடந்த பல லட்சம் கோடி ஊழல், ரஃபேல் விமான ஊழல், இன்னும் பலப்பல ஊழல்களை, பலே திருடர்களை பி.ஜே.பி.வாஷிங் மிஷின் மூலம் யோக்கியர்களாக மாற்றி நாட்டுக்கு புனிதக் கடமையாற்றி வரும் நம்ம பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடியை நினைத்தால்…. ?

 

  இப்படிக்கு…

  தினசரி நஷ்டப்படும் பெட்டிக் கடைகாரன் .

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.