கழிவறையில் ஓடி ஒளிந்த “கட்டிப்பிடி ” பேராசிரியர்! மதுரை காமராஜர் பல்கலைகழகம்…
“என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பேராசிரியர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்..” என்று விரியும் பகீர் கடிதமொன்று அங்குசம் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தது. தேனியைச் சேர்ந்த ஸ்ரீலெட்சுமி என்ற பெண்மணி எழுதியிருந்த கடிதம் அது. மதுரை காமராஜர் பல்கலைகழகத்தின் ஒரு பிரிவாக தேனியில் செயல்பட்டுவந்த மாலை நேர கல்லூரியில் தான் பணியாற்றியபோது, நேர்ந்த சம்பவம் இதுவென்பதையும் குறிப்பிட்டிருந்தார், ஸ்ரீலெட்சுமி. புகைப்படக் கலைஞரோடு, தேனி ரயில் நிலையத்தில் ஸ்ரீலெட்சுமியை சந்தித்தோம்.
வீடியோ லிங்:
விளக்கம் கேட்க, பேராசிரியர் கணேசனை சந்திக்க சென்றோம். நாம் அலுவலகம் சென்றிருந்த சமயம், அனைத்து ஜன்னல்களும் சாத்தியே இருந்தது. ”பழக்க தோஷத்துல, பின்னாடி ஏதும் தட்டிவிடாதீர்கள்” என்றோம் தமாசாக. அவரும் வாய்விட்டு சிரித்தபடியே, ”சொல்லுங்கள்” என்றார். ஸ்ரீலெட்சுமி முன்வைத்த குற்றச்சாட்டு களையெல்லாம், அவர்முன் கொட்டினோம். வியர்த்து விறுவிறுத்தவர் விர்ரென்று எழுந்தார், ”வயிற்றை கலக்குகிறது, கழிவறை சென்று வருகிறேன்” என்று சொல்லி நடையை கட்டி விட்டார். திரும்ப வருவாரென்று நாம் காத்திருக்க. “நான் யார் தெரியுமா? பத்திரிக்கை துறையில், அவரைத் தெரியுமா? இவரைத் தெரியுமா?” என்று வீரவசனம் பேசியபடியே ஒருவர் வந்தார். ”முதலில் நீ யாரப்பா?” என்றோம். ”டூரிசம் டிபார்ட்மெண்ட் புரொபசர் ராஜேஷ்” என்றார். ”நாங்கள் பேராசிரியர் கணேசனைத்தான் பார்க்க வந்தோம் உங்களை அல்ல”, என்றோம். ”அவர் உங்களிடம் பேச மாட்டார். விவரம் வேண்டுமெனில் துணைவேந்தரிடம் போய் கேட்டுக்கொள்ளுங்கள்” என்றார், வந்த விரைப்பு சற்றும் குறையாமலே! கழிவறை சென்று வருகிறேன் என்று சொல்லி சென்ற மனுசன், கக்கூஸ்ல ஒளிஞ்சிகிட்டே எல்லாத்துக்கும் போன போட்டுடாப்ள போல! கடைசி வரைக்கும் திரும்ப வரவே இல்லை. வேறுவழியின்றி, துணைவேந்தரை சந்திக்க சென்றோம். உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பதாக சொன்னார் ஊழியர் ஒருவர்.
வீடியோ லிங்: