பள்ளி திறக்கும் சூழ்நிலையில் துறையூர் பள்ளி மாணவன் மாயம் !

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

துறையூர் அருகே பள்ளி மாணவன் மாயம் ! நாளை மறுநாள் பள்ளி திறக்கும் சூழ்நிலையில் பெற்றோர்கள் அதிர்ச்சி !

திருச்சி மாவட்டம் ,துறையூர் அடுத்த அம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்த தியாகராஜன் _பானுமதி தம்பதியினர், தியாகராஜன் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். தாய் பானுமதி வீட்டில் டெய்லரிங் வேலை செய்து வருகிறார்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இவர்களுக்கு கோபி ஸ்ரீ (13), தர்ஷன் (9) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் கோபி ஸ்ரீ துறையூரில் உள்ள தனியார் ஆங்கில வழிப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். .இந்நிலையில் கோபி ஸ்ரீ தனது சட்டை பையில் ரூ 500 வைத்திருந்ததைக் கண்ட தாய் பானுமதி , மகனிடம் உனக்கு ஏது பணம் எனக் கேட்டு திட்டியதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக நேற்று மதியம் வீட்டில் இருந்து கோபித்துக் கொண்டு வெளியே சென்ற கோபி ஸ்ரீ ,இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த தாய் பானுமதி , அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் துறையூர் காவல் நிலையத்தில் தனது மகனை காணவில்லை என நேற்று புகார் அளித்தார்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

நாளை மறுதினம் பள்ளி திறக்க உள்ள நிலையில் எட்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதுகுறித்து துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பள்ளி மாணவனை வலை வீசி தேடி வருகின்றனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.