செல்போனை பறித்துச் சென்ற குரங்கும் … உயிரைப் பறித்த செல்பி மோகமும் !

செல்ஃபி எடுத்து விட்டு ஓய்வுக்காக அங்குள்ள படிக்கட்டில் அமர்ந்திருந்தபோது தரணிவேலின்  செல்போனை குரங்கு எடுத்துச் சென்றதாகவும் அதனைப் மீட்க சென்றபோது 100 அடி உயரமுள்ள மலையில் இருந்து தவறி விழுந்து தரனிவேல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

செல்போனை பறித்துச் சென்ற குரங்கும் … உயிரைப் பறித்த செல்பி மோகமும் !

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கொட்டமிட்டாய் பகுதியை சேர்ந்தவர் தரணிவேல் (17). இவர் குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

இந்நிலையில் ஆம்பூர் அடுத்த கொத்தூர் பகுதியில் தரணிவேலுவின் மாமா வடிவேலு என்பவர் வெளிநாட்டில் உள்ளதால் அவரது வீட்டில் அவர் தங்கி பயின்று வந்துள்ளார்.

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

இந்த  நிலையில் தரணிவேல் தினமும் ஊருக்கு அருகில் உள்ள கைலாசகிரி மலைசாலையில் பாலூர் பகுதியை  சேர்ந்த கவின்குமார் என்பவருடன் ரன்னிங் மற்றும் உடற்பயிற்சி செய்துவந்துள்ளார். வழக்கம் போல் மலை சாலையில்  உடற்பயிற்சி செய்துவிட்டு இருவரும் செல்ஃபி எடுத்து விட்டு ஓய்வுக்காக அங்குள்ள படிக்கட்டில் அமர்ந்திருந்தபோது தரணிவேலின்  செல்போனை குரங்கு எடுத்துச் சென்றதாகவும் அதனைப் மீட்க சென்றபோது 100 அடி உயரமுள்ள மலையில் இருந்து தவறி விழுந்து தரனிவேல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இதனை கண்ட நண்பர் கவின்குமார் அதிர்ச்சியடைந்து உறவினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் விரைந்து சென்ற உமராபாத் காவல் துறையினர் மலை அடிவாரத்தில் சடலமாக கிடந்த தரணிவேல் உடலை மீட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்பூர்  உமராபாத் காவல்துறையினர்.

கே.எம்.ஜி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.