கூட்டு சோ்ந்து சிறுமியை சீரழித்த “வாத்திகள்” அதிர வைத்த கொடூரம்! நடந்தது என்ன?
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் காக்கங்கரை சந்தூர் செல்லும் சாலையில் உள்ள ஒரு குக்கிராமம் “எம்ஜி ஹள்ளி” இங்கு , ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 65 மாணவர்கள், 75 மாணவிகள் என மொத்தம் 140 பேர் பயின்று வருகின்றனர்.
களத்தில் இறங்கிய தலைமையாசிரியை
இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். மேலும், அந்த மாணவி கடந்த 1 மாதமாக பள்ளிக்கு செல்லாததால், சந்தேகமடைந்த தலைமை ஆசிரியை அந்த மாணவியின் வீட்டிற்கு சென்று பள்ளிக்கு வராதது குறித்து விசாரிதுள்ளார். அப்போது தனது மகள் கர்ப்பமடைந்துவிட்டதால் கருகலைப்பு செய்துள்ளோம் அதனால் பள்ளிக்கு அனுப்பவில்லை என தெரிவித்துள்ளனர்.
அதிர்ச்சியடைந்த தலைமை ஆசிரியை அந்த மாணவியிடம் தனியாக அழைத்து சென்று விசாரித்ததில் தனது கர்ப்பத்திற்கு காரணம், பள்ளி ஆசிரியர்கள் பாரூர் சின்னசாமி (57), மத்தூர் ஆறுமுகம் (48), வேலம்பட்டி பிரகாஷ் (37) ஆகியோர் என்றும், கூட்டாக சேர்ந்து பலாத்காரம் செய்ததாகவும் விம்பி அழுதுள்ளார்.
இதை கேட்டு ஆவேசமடைந்த தலைமை ஆசிரியர், வட்டார கல்வி அலுவலர் சுமதியிடமும் , மாவட்ட கல்வி அதிகாரிக்கும் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பள்ளி கல்வித்துறை சார்பில், குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்தில் (சைல்டு லைன்) புகார் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்தினரும், பாதிக்கப்பட்ட மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்
போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு
புகாரின் பேரில் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீது போக்சோ 5 (f), 6(1), BNS 329(3), உள்ளிட்ட 4 பிரிவுகளில் பர்கூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்த டிஎஸ்பி முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசார்கள் ஆசிரியர்கள் சின்னசாமி, ஆறுமுகம், பிரகாஷ், 3 பேரையும் விசாரித்ததில் கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது அதனையடுத்து 3 பேரும் மீதும் “போக்சோ” சட்டத்தின் கீழ் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
குற்றம் நிறுமிக்கப்பட்டால் டிஸ்மிஸ்
மாணவி வன்கொடுமை வழக்கில் ஆசிரியர்கள் ஆறுமுகம், சின்னசாமி, பிரகாஷ் ஆகிய மூவரும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிரியர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் நிரந்தரப் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்” என்று கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொறுப்பு) முனிராஜ் தெரிவித்துள்ளார்
மக்கள் சாலை மறியல்
புதன்கிழமை காலை பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளியின் முன்பு குவிந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஆசிரியர்களை இங்கு அழைத்து வந்தால் மட்டுமே சாலை மறியலைக் கைவிடுவோம் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரம் குறித்து, மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமாரிடம் கூறியபோது,
குழந்தைக்கு கருக்கலைப்பு செய்யபட்டதாக வதந்திகள் பரப்பப்படுகிறது. பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் அச்சத்தால் புகார் அளிக்க முன்வரவில்லை, என்று தெரிவித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைக்கு 24 மணிநேரமும் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையின் அடிப்படைத் தேவைகளுக்கான நிதி உடனடியாக வழங்கப்பட்டுள்ளது.
அதோடு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய மன நல ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளதாகவும் ஆட்சியர் கூறினார்.
“பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் மற்றும் குற்றத்தை வெளிக் கொண்டு வரக் காரணமாக இருந்த தலைமை ஆசிரியருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது” என்று “மாவட்ட காவல் துறை எஸ்பி தங்கதுரை” தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவியை சீரழித்த ஆசிரியர்களுக்கு ஆதரவாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வழக்கறிஞர்கள் ஆஜாராக போவதில்லை என மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த சம்பவத்தை கண்டித்து 8 ம் தேதி காலை கிருஷ்ணகிரி அண்ணா சிலை அருகில் அதிமுக கண்டனம் ஆர்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
6-மாதங்களுக்கு முன்பு உலுக்கிய தனியார் பள்ளி பாலியல் வழக்கு, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் கத்திகுப்பம் கிங்ஸ்லி என்ற தனியார் பள்ளி ஒன்றில் போலி என்.சி.சி. பயிற்சி முகாம் நடந்தது. இதை நடத்திய நாம் தமிழர் கட்சி நிராவாகியும் போலி பயிற்சியாளருமான சிவராமன், பல மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்த வழக்கில் பள்ளியின் தாளாளர் உள்பட 17- க்கும் மேற்பட்டவர்களில் முக்கிய குற்றவாளியான சிவராமன் போலீசார் கைது செய்யும் முன்பாக விஷம் குடித்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். அந்த வழக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.
அந்த சம்பவம் நடந்த 6 மாதங்கள் கூட ஆகாத நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மீண்டும் 13 வயதுடைய பள்ளி மாணவியை அதே பள்ளியை சேர்ந்த 3 ஆசிரியர்கள் பள்ளியிலே கூட்டு பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கொடூர சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
— மணிகண்டன்.