அங்குசம் பார்வையில் ‘தி ஸ்மைல் மேன்’

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தயாரிப்பு : சலீல் தாஸ்,  அனீஸ் ஹரிதாசன் & ஆனந்தன். டைரக்‌ஷன் : ஷ்யாம்—பிரவீன். நடிகர்-நடிகைகள் : சரத்குமார், சிஜா ரோஸ், ஸ்ரீகுமார், சுரேஷ்மேனன், கலையரசன், ஜார்ஜ் மரியான்,  இனியா, பேபி ஆலியா,  குமார் நடராஜன், ராஜ்குமார், மலைராஜன். கதை : கமலா அல்கெமிஸ், ஒளிப்பதிவு : விக்ரம் மோகன், இசை : கவாஸ்கர் அவினாஷ், எடிட்டிங் : சான் லோகேஷ், எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளர் : முகேஷ் ஷர்மா, சவுண்ட் டிசைன் : ஏ.சதீஷ்குமார், மேக்கப் : வினோத் சுகுமாரன். பி.ஆர்.ஓ. சதீஷ் & சிவா [ எய்ம் ]

சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 150-ஆவது படம் என்ற சிறப்புடன் 2024-ன் இறுதியில் வெளிவந்துள்ளது இந்த ’தி ஸ்மைல் மேன்’. கோவை புதூர் தான் கதைக்களம். அங்கே தமிழ்நாடு காவல்துறையில் சிபிசிஐடி பிரிவில் அதிகாரியாக இருக்கிறார் சரத்குமார். இவருக்கு மேலதிகாரியாக சுரேஷ் மேனன். இவர்கள் பணியில் இருக்கும் ஆங்காங்கே சில கொலைகள் நடக்கின்றன. கொலையானவர்களின் வாய்ப்பகுதியை சிரித்தபடியே அறுத்து [ டைட்டிலுக்கு கனெக்ட்டாகிருச்சா ] வீசிவிடுவது தான் அந்த சீரியல் கில்லரின் ஸ்டைல்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

கொலைகாரன் யாராக இருக்கும் என சரத்தும் சுரேஷ்மேனனும் மண்டையப் பிய்த்துக் கொள்கிறார்கள்.  திடீரென ஒரு நாள் அந்தக் கொலைகாரனை சுட்டுக் கொன்றுவிட்டதாக சுரேஷ்மேனன் சொன்னதும் கேஸ் ஃபைலை குளோஸ் பண்ணிவிடுகிறார்கள். ஆனால் ஒருநாள் ராத்திரி காட்டுப்பகுதியில் நடந்த மோதலில் சுரேஷ்மேனனை சுட்டுக் கொல்கிறார் சரத்குமார். அப்போது நடந்த விபத்தில் சரத்துக்கு தலையில் அடிபட்டு, பழையை நினைவுகளை மறந்துவிடும் அல்ஸைமர் வியாதி தாக்குகிறது. போலீஸ் வேலையிலிருந்து விலகிவிடுகிறார்.

இந்த நிலையில் தான் அதே ஏரியாவில் சீரியல் கொலைகள் மீண்டும் நடக்கின்றன. இதற்கு உதவி செய்ய இப்போது வேலையில் இருக்கும் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் ஸ்ரீகுமார், சரத்தின் உதவியை நாடுகிறார். சுரேஷ்மேனனை சரத் ஏன் சுட்டுக் கொன்றார்? இப்போது நடக்கும் கொலைகளுக்கு காரணம் யார்? என்பதை சிதம்பரம் நெடுமாறன் [ அதாங்க நம்ம  சரத்குமார் கேரக்டர் பெயர் ] கண்டு பிடிக்கும் வரை நடக்கும்  க்ரைம் த்ரில்லர் கண்ணாமூச்சி ஆட்டம் தான் இந்த ‘தி ஸ்மைல் மேன்’.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

இந்த மாதிரி கேரக்டர்கள் என்றால் சரத்துக்கு சர்பத் சாப்பிடுவது மாதிரி. அதிலும் ஞாபக மறதி வியாதி வேறயா? மனுசன் நல்லாவே ஸ்கோர் பண்ணிருக்கார். அடிக்கடி நினைவுகள் தடுமாறும் போது தவிப்பது, மீண்டும் நினவில் வந்ததும் ஆக்டிவாக இருப்பது என டிஃப்ரெண்ட் காட்டியுள்ளார். என்ன ஒண்ணு படத்தை கேப் விட்டு, கேப் விட்டு எடுத்திருப்பார்கள் போல. ஏன்னா போலீஸ் பணியில் இருக்கும் போது சில சீன்களில் முறுக்கு மீசையுடன் இருக்கிறார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

சில சீன்களில் மீசையை ட்ரிம் பண்ணியிருக்கார். சிபிசிஐடின்னா அப்படித்தான்னு டைரக்டர்கள் ஷ்யாம்—பிரவீனிடம்  யாராவது சொல்லியிருப்பார்களோ? அதே போல் அதே டிபார்ட்மெண்டில் ரிட்டையர்டான ஜார்ஜ் மரியானை குமாஸ்தா என்கிறார்கள். இதெல்லாம் இப்ப எங்கிருக்கு ட்வின்ஸ் டைரக்டர்ஸ்?

கொடுத்த கேரக்டரை சிறப்பாக செய்திருக்கார் இன்ஸ்பெக்டராக வரும் ஸ்ரீகுமார். படத்தில் ஸ்ரீகுமாருடன் இணைந்து வரும் போலீசாக, பெரும்பாலான சீன்களில் மஃப்டியில் வருவதால் பளிச்சுன்னு இருக்கார் சிஜா ரோஸ். நடிப்பும் நல்லாத்தான் வந்திருக்கு.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கதையின் மெயின் ட்விஸ்டுக்கு உதவியிருக்கிறார்கள் கலையரன், இனியா, பேபி ஆலியா ஆகிய மூவரும். மியூசிக் டைரக்டர் கவாஸ்கர் அவினாஷும் கேமராமேன் விக்ரம் மோகனும் சவுண்ட் டிசைனர் சதீஷ்குமாரும் ஸ்மைல் மேனுக்கு த்ரில் கூட்டியிருக்கிறார்கள்.

‘தி ஸ்மைல் மேன்’ குறைகள் பல இருந்தாலும் க்ரைம் த்ரில்லர்ர் சினிமா ரசிகர்களுக்கு  நிறைவு நிறைய கிடைக்கும்.

 

–மதுரைமாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.