பூ வியாபாரியின் ‘தீயவர் குலை நடுங்க’
‘ஜி. எஸ். ஆர்ட்ஸ்’ பேனரில் ஜி. அருள்குமார் தயாரிப்பில், ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 21- ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது ‘தீயவர் குலை நடுங்க’. இதனையொட்டி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நேற்று ( நவ.13) இரவு நடந்தது.
இந்நிகழ்வினில் பேசியவர்கள்…
தயாரிப்பாளர் ஜி. அருள்குமார்
“மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த விழா எப்படி நடக்கும் என பதட்டம் இருந்தது. ஆனால் எல்லாம் ஒன்றாக இணைந்து இந்த விழா நடப்பது மகிழ்ச்சி. இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. நான் பூ வித்து வாழ்க்கையில் முன்னேறியவன். அர்ஜுன் சாரின் ஜெண்டில்மேன் படம் பார்த்துள்ளேன். அவரின் ரசிகனான நான் இன்று அவரை வைத்துப் படமெடுத்துள்ளேன் என்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. எனக்குத் தேதி தந்து படத்தில் நடித்த ஐஸ்வர்யா மேடம், அபிராமி மற்ற நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. இப்படத்தில் உழைத்த அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. அண்ணன் லோகு எனக்கு நிறைய உதவிகள் செய்தார் . படத்தை வெளியிட உதவிய தேவராஜ் அண்ணாவுக்கும் எல்லோரையும் ஒருங்கிணைத்து இந்த விழா நடக்க காரணமான பி.ஆர்.ஓ. யுவராஜ் சாருக்கும் நன்றி”
நடிகர் லோகு
“ஒரு பெரிய படத்தில், இவ்வளவு பெரிய நட்சத்திரப் பட்டாளம் உள்ள படத்தில், எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநர் தினேஷுக்கு நன்றி.தயாரிப்பாளர் அருள்குமார் பட்ட கஷ்டத்தை நான் நேரில் பார்த்துள்ளேன், அவர் குழந்தை மனதுக்காரர், அவர் மனதுக்கு இப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும்”.
இசையமைப்பாளர் பரத் ஆசிவகன்
“தினேஷ் அண்ணனை பல வருடங்களாகத் தெரியும். நான் அஸிஸ்டெண்டாக வேலை பார்த்து வந்தேன். நிறைய படத்தில் வேலை பார்த்தாலும் கிரெடிட் கிடைக்காது. எனக்கு வாய்ப்பு தந்ததற்கு தினேஷ் அண்ணனுக்கும் தயாரிப்பாளர் அருள்குமார் சாருக்கும் நன்றி. நான் நன்றாக வேலை பார்த்துள்ளேன் என நம்புகிறேன்”
தயாரிப்பாளர் பிஎல் தேனப்பன்
“தயாரிப்பாளர் பூ வியாபாரி என்றார்கள். அவர் பெரிய வெற்றி பெற்று கோயம்பேட்டில் மிகப் பெரிய பூக்கடை போட வாழ்த்துக்கள். நான் சின்ன வயதில் சங்கர் குரு பார்த்தேன் இன்றும் அப்படியே இருக்கிறார் அர்ஜுன். ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு படம் ஒத்துக்கொள்வது கடினம். இருவரும் சேர்ந்துள்ள இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
பிராங்ஸ்டர் ராகுல்
“தினேஷ் அண்ணன் எவ்வளவு கஷ்டப்பட்டார் என எனக்குத் தெரியும். இந்தப்படத்தில் ஒரு காமெடி கேரக்டர் செய்துள்ளேன்”.

நடிகை அபிராமி வெங்கடாசலம்
” நான் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளேன். குழந்தைகள் வளர்ப்பு பற்றி விழிப்புணர்வு தரும் படம் இது”
நடிகர் பிரவீன் ராஜா
“சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தில் நடித்திருந்தேன். அதைப்பார்த்த என் நண்பர் மூலம் இப்பட வாய்ப்பு கிடைத்தது. படம் மிக நன்றாக வந்துள்ளது அனைவரும் ஆதரவு தாருங்கள்”.
டைரக்டர் அஜயன் பாலா
“இந்தப்படம் வெற்றி பெற எல்லா அம்சங்களும் படத்தில் உள்ளது”.
இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன்
“அறிமுக இயக்குநர் தினேஷுக்கு வாய்ப்பு தந்த தயாரிப்பாளருக்கு நன்றி. தென்னிந்தியாவில் மிகப்பெரிய ஸ்டார் அர்ஜூன் சார் தான். அட்டகத்தி படத்திலிருந்து ஐஸ்வர்யா மேடம் வளர்ச்சியைப் பார்த்து வருகிறேன். இன்று சோலோ ஹீரோயினாக வளர்ந்துள்ளதற்கு அவரின் நம்பிக்கை யும் உழைப்பும் தான் காரணம். அவர் ஒரு படத்தை ஓகே செய்தால் அந்தப்படம் வெற்றி. தயாரிப்பாளர் சங்கத்தில் பெரிய ஹீரோக்கள் படத்தில் வெற்றி தோல்வியில் பங்கு கொள்ள வேண்டும் என தீர்மானம் போட்டுள்ளார்கள் அதை நான் வரவேற்கிறேன். தமிழ் திரையுலகில் நிறைய பிரச்சனைகளைச் சரி செய்ய வேண்டியுள்ளது. புது தயாரிப்பாளர்கள் பலர் திணறுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்”.
வேலூர் அலங்கார் தியேட்டர் ஓனர் தேவராஜ்
“நான் படம் பார்த்துவிட்டேன். படம் அருமையாக இருக்கு. பத்திரிகையாளர்கள் ஆதரவு தர வேண்டும். சக்ஸஸ் மீட்டில் இன்னும் அதிகம் பேசுகிறேன். தயாரிப்பாளருக்கு இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைத் தரும்”.
விசிக வன்னியரசு
” குற்றவாளி கள் எப்படி எளிதாக தப்பிக்கிறார்கள், அரசும் அதிகார வர்க்கம் எப்படி துணை போகிறது என்பதை இப்படம் பேசுகிறது”. அடுத்தடுத்து இப்படக்குழு மிகப்பெரிய படங்கள் செய்து ஜெயிக்க வாழ்த்துக்கள்.

ஐஸ்வர்யா ராஜேஷ்
” இப்படம் ஒரு உண்மைச் சம்பவம். இயக்குநர் சொன்ன போது எனக்கு உடல் நடுங்கி விட்டது. உண்மையான கதையைச் சொல்லும் போது மக்கள் நெருக்கமாக உணர்வார்கள். அவர்களுக்குப் பெரிய விழிப்புணர்வை அது தரும். கமர்ஷியல் சினிமா உலகில் இப்படி உண்மைக் கதையை சொல்ல முயற்சித்த தினேஷுக்கு நன்றி. அர்ஜூன் சார் ரியல் லைஃபில் உண்மையாகவே ஜெண்டில்மேன். அவர் மேஜிக்கை நேரில் பார்த்தது நல்ல அனுபவம். நான் நன்றாக ஃபைட் செய்ய அவர் தான் காரணம். அவர் தான் இந்தப்படத்தில் ஹீரோ”.
இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன்
“என் 15 வருட ஏக்கம் தான் இந்தப்படம். என்னவாக வந்தோம், என்னவாக இருக்கிறோம் என்னவாக போகிறோம் என்பது முக்கியம். என்னை இந்த இடத்திற்கு அழைத்து வந்த அனைவருக்கும் நன்றி. என் அப்பா அம்மாவிற்கு நன்றி. என் அப்பா தான் சினிமா ஆசையை என்னுள் தூண்டியவர். தயாரிப்பாளர் அருள்குமார் அவருக்கு ஊரில் அவ்வளவு மரியாதை. அவருக்கு ரெண்டு படம் சரியாகப் போகவில்லை. ஆனால் அவர் உனக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன் என்றார். எனக்கு அவர் மேல் இருந்த நம்பிக்கையை விட அவர் என் மேல் வைத்த நம்பிக்கை அதிகம். என்னிடம் எந்த கேள்வியும் கேட்க மாட்டார். அவர் நம்பிக்கைக்கு நன்றி.

டெக்னீஷியன்ஸ் எல்லோரும் எனக்கு முழு ஒத்துழைப்பு தந்தார்கள். அர்ஜூன் சார் ஷூட்டிங்கில் நிறைய கரெக்சன் சொல்வார். அப்போது நிறைய விவாதிப்போம். அதெல்லாம் படம் முடிந்து பார்க்கும் போது தான் அவரின் எக்ஸ்பீரியன்ஸ் எனக்குப் புரிந்தது. அவ்வளவு ஆதரவாக இருந்தார். ஐஸ்வர்யா மேடம் மிகக் கடுமையாக உழைத்துள்ளார். அர்ஜூன் சாருக்கு சமமான பாத்திரம். மிகச்சிறப்பாக நடித்துள்ளார். இப்படத்தில் நிறைய நடிகர்கள் எல்லோரும் கதைக்கு முக்கியத்துவமாக இருப்பார்கள். இங்கு வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்”.
நடிகர் அர்ஜூன்
“எனக்கு இது மிக முக்கியமான படம். எனக்கு எல்லா படமுமே முதல் படம் போலத்தான். தயாரிப்பாளர் அருள்குமார் பூ வித்தாகச் சொன்னார். ஆனால் அவர் சினிமா மீது வைத்திருக்கும் அன்பு தான் அவரை தயாரிப்பாளர் ஆக்கியுள்ளது. எல்லோரையும் மதிக்கும் அவரது பண்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மனதிற்காகவே இப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும். நான் நிறைய புதிய இயக்குநர்களுடன் பணிபுரிந்துள்ளேன், இயக்குநர் தினேஷ், என்னுடன் நிறைய விவாதித்தாக சொன்னார் ஆனால் எல்லாமே படத்திற்காகத் தான், படத்தை மிகச்சிறப்பாக எடுத்துள்ளார். இப்படத்தில் ஹீரோ அவர் தான், இவர் தான் என்றார்கள், ஆமாம் இப்படத்தில் மூன்று ஹீரோ, பிரவீன் ஒரு ஹீரோ, ஐஸ்வர்யா ராஜேஷ் இன்னொரு ஹீரோ. ராஜேஷ் அவரது தந்தையின் பெயர், அவர் சின்ன வயதில் தவறிவிட்டார். அவரும் நடிகர் தான், அவருடன் நான் சில படங்களில் நடித்துள்ளேன் அவர் எனக்கு சிறந்த நண்பர். ஐஸ்வர்யா ராஜேஷ் மிகச்சிறந்த நடிகை, அவர் இன்னும் வளர வாழ்த்துக்கள். எல்லோருடைய ஆசீர்வாதமும் அன்பும் இப்படத்திற்குக் கிடைக்க வேண்டும்”.

சட்டத்தை தாண்டி நியாயம் இருக்கும், நியாயத்தை தாண்டி தர்மம் இருக்கும், ஆனால் இறுதியில் தர்மமே ஜெயிக்கும் எனும் கருத்தை மையமாகக் கொண்டு, ஒரு அதிரடி ஆக்சன் த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.
‘ஆக்சன் கிங்’ அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷுடன் அபிராமி வெங்கடாசலம், பிரவீன் ராஜா, லோகு, ராம் குமார், தங்கதுரை, பேபி அனிகா, பிராங்க்ஸ்டர் ராகுல், பிரியதர் ஷினி, சையத், ஜி.கே. ரெட்டி, பிஎல் தேனப்பன், ஓ.ஏ.கேசுந்தர், வேல ராமமூர்த்தி, பத்மன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு: சரவணன் அபிமன்யு இசை: பரத் ஆசிவகன் படத்தொகுப்பு : லாரன்ஸ் கிஷோர் கலை இயக்கம் : அருண்சங்கர் துரை, பி.ஆர்.ஓ.: யுவராஜ்.
தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் ரிலீஸ் ஆகிறது.
— ஜெடிஆர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.