தேனி- அரசு பேருந்தில் மயங்கி விழுந்த பெண்ணை காப்பாற்றிய ஓட்டுநர் மற்றும் நடந்துநர்
தேனி மாவட்டத்தில் அரசு பேருந்தில் மயங்கி விழுந்த பெண்ணை 108 வாகனம் வர காலதாமதம் ஏற்பட்டதால் உடனடியாக வீரபாண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றிய ஓட்டுநர் மற்றும் நடந்துநர்.
தேனியில் இருந்து குச்சனூர் நோக்கி அரசு பேருந்து TN57N 1259 சென்றது. அப்போது போடேந்திரபுரம் விலக்கு பகுதியில் சென்ற கொண்டு இருந்த போது பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் திடீரென மயக்கி விழுந்தார். பெண்ணின் கணவர் சத்தம் போட்டதால் பேருந்து ஓரமாக நிறுத்தப்பட்டது.
அரசு பேருந்தில் மயங்கி விழுந்த பெண்ணை 108 ஆம்புலன்சுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுக்கப்பட்டு நிலையில் காலதாமதம் ஏற்பட்டதால, உடனடியக அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடந்துநர் அருகே உள்ள வீரபாண்டி அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
வீரபாண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண் தற்போது நலமுடன் உள்ளார். அரசு பேருந்து ஒட்டுநர் முருகன் மற்றும் நடந்துநர் செல்வகுமாருக்கு இருவருக்கும் பொது மக்கள் நன்றி தெரிவித்தனர்.
— ஜெய்ஸ்ரீராம்.