அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கள்ளச்சாராயம் காய்ச்சியதாக பொய்வழக்கு ! ஆட்சியர் அலுவலகம் முற்றுகை ! தேனியில் பரபரப்பு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

கள்ளச்சாராயம் காய்ச்சியதாக பொய்வழக்கு போட்டதாக ஆட்சியர் அலுவலகம் முற்றுகை ! தேனியில் பரபரப்பு !
தேனியில் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக கைது செய்யப்பட்ட நபரை விடுவிக்க கோரி கிராம மக்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொய் வழக்கு போட்டு போலீசார் கைது செய்ததாக தெரிவித்து மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மேக்கிழார்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயியான ராமகிருஷ்ணன். இவரது தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக கடந்த 14ஆம் தேதி ஆண்டிப்பட்டி போலீசார் இவரை கைது செய்தனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ராமகிருஷ்ணனுக்கு வேண்டாத சில நபர்களின் தூண்டுதலின் பேரில் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக போலீசார் பொய் வழக்கு போட்டு கைது செய்திருப்பதாக மேக்கிழார்பட்டி கிராம மக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

முதல்வர் பிறந்தநாள்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

பொய் வழக்கு போட்டு கைது செய்யப்பட்ட ராமகிருஷ்ணனை விடுவிக்க வேண்டும் என்றும்; கள்ளசாராயம் காய்ச்சியதாக பொய் வழக்கு பதிவு செய்த போலீசார் மீது மாவட்ட ஆட்சியர் உரிய முறையில் விசாரணை நடத்தி சம்மந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டும் என்றும் மேக்கிழார்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தினர் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கிராம மக்களிடம் பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் முத்துமாதவன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை செய்த பின்பு தேனி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.

ஜெய்ஸ்ரீராம் 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.