அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

என்னை அழைக்காமல் விழா நடத்துறீங்களா ? போதையில் ரகளை செய்த திமுக துணை சேர்மன் !

திருச்சியில் அடகு நகையை விற்க

பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி-யில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்ற நிகழ்ச்சியில்  தனக்கு அழைப்பு விடுக்கவில்லை எனக் கூறி திமுக அமைச்சர் மற்றும் MP, MLA -களை நோக்கி, திமுக துணைச் சேர்மனும்  வழக்கறிஞருமான கு.நிபந்தன்   ஆபாசமான  வார்த்தைகளால் மது போதையில்   ரகளையில் ஈடுபட்ட  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில்  பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை  சார்பில் துணை சுகாதார நிலைய கட்டடங்கள் , செவிலியர் குடியிருப்பு மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டிடம்  திறப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி செப்-08 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன்  கலந்துகொண்டு விழாவினை துவக்கி வைத்தார். உடன்  திமுக தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் , பெரியகுளம் சட்டமன்ற  தனி தொகுதி உறுப்பினர்  கே.எஸ். சரவணகுமார் , மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

கு.நிபந்தன் 
கு.நிபந்தன்

இந்த விழாவில் தனக்கு எந்தவித அழைப்பும் கொடுக்கவில்லை என தேவதானப்பட்டி பேரூராட்சி திமுக துணை சேர்மன்  வழக்கறிஞர் கு. நிபந்தன் அமைச்சர், எம்பி, தனித்தொகுதி எம்எல்ஏ மற்றும் திமுகவின் மூத்த நிர்வாகிகளை பார்த்து ஆபாசமான வார்த்தைகளால் பேசி ரகளை ஈடுபட்டார். மேலும்,  ரகளையில் ஈடுபட்ட திமுக துணைச் சேர்மன் மது போதையில் இருந்ததாக  அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தகவல் தெரிவித்துள்ளனர் . ரகளையில் ஈடுபட்டவரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் தடுத்த போதிலும், ஆபாசமான வார்த்தைகளால் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தது  அங்கிருந்த அனைத்து துறை அலுவலர்கள் , பொதுமக்கள் திமுகவினர் இடையே  பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.