11ஆம் வகுப்பு மாணவன் திருமுருகன் கொலை ! சாத்தரசன்கோட்டை பதட்டம் !
சிவகங்கை அருகே சாத்தரசன்கோட்டையை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவன் திருமுருகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட சம்பவம். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்யக்கோரி உறவினர்கள் உண்ணாவிரதப் போராட்டம்.
சிவகங்கை மாவட்டம் சாத்தரசன் கோட்டையை சேர்ந்த திருமுருகன் என்ற 11ம் வகுப்பு மாணவன் கடந்த 26 ந்தேதி அதே ஊரைச் சேர்ந்த சில மாணவர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை செய்யப்பட்ட மாணவரின் உறவினர் ஜெயகண்ணன் உட்பட நான்கு பேரை கைது செய்த நிலையில்,
விசாரணைக்கு பின்பு மூவரை விடுவித்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திருமுருகனின் உறவினர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் இன்று சாத்தரசன் கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மூன்றுக்கும் மேற்பட்டவர்கள் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், கொலைக்கு தூண்டுதலாக இருந்த கொலையாளியின் தாய், தந்தையரையும்கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
-பாலாஜி