திருவெறும்பூர் சப் இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விட்ட ரவுடிகள் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

 

திருவெறும்பூர் சப் இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விட்ட ரவுடிகள்

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

திருவெறும்பூரில் பிரபல ரவுடிகள் சப் இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விட்ட சம்பவம் திருவெறும்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இதுபற்றிய விவரம் வருமாறு திருவெறும்பூர் கக்கன் காலனி செல்லும் வழியில் உள்ள ஒயின்ஷாப் கடையில் 08.09.2022  இரவு 10 மணி அளவில் கடை மூடிய பிறகு திருவெறும்பூர் அருகே உள்ள காந்தி நகர் செல்வபுரம் பகுதியில் வசிக்கும் விஷ்ணு பிரவீன் ஆகிய இருவரும் பூட்டிய கடையில் மதுபானம் கேட்டதாக சொல்லப்படுகிறது கடையை மூடிவிட்டு கணக்குப் பார்த்துக் கொண்டிருந்த கடை விற்பனையாளர் இதுகுறித்து திருவெறும்பூர் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ்,மற்றும் போலீஸ் வீரமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து இது குறித்து விசாரித்தனர்.

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

அப்பொழுது போதையில் இருந்த பிரவீன் மற்றும் விஷ்ணு போலீசாரை கடுமையான வார்த்தைகளால் திட்டியதுடன் கொலை மிரட்டலும் விடுத்தனர்.

பின்னர் அங்கு திரளாக கூடிய பொதுமக்கள் பிரவீன் மற்றும் விஷ்ணுவை சரமாரியாக தாக்க தொடங்கினர் காயமடைந்த இருவரும் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து வரவழைத்து சிகிச்சைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று விட்டனர்.

இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்ததை அடுத்து போலீசார் பிரவீன்,விஷ்ணு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

போலீசார் மீது கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.