அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

16 வயது சிறுமிக்கு கட்டாய கல்யாணம் ! குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை !

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சிராப்பள்ளி மாவட்டம். மணிகண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாகமங்கலம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 02.11.2020 -ம் தேதி அவரது தோழியின் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் பின்பு வீடு திரும்பவில்லை. விசாரணையில் மணிகண்டன் 24/20, த.பெ. கமல் சூசைராஜ், கீழ நாகமங்கலம். திருச்சி என்பவர் அச்சிறுமியை அவருடன் அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி குழந்தை திருமணம் செய்தும். அச்சிறுமியை பாலியல் தாக்குதலுக்கு உட்படுத்தியதாக அச்சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் மணிகண்டம் காவல் நிலைய குற்ற எண்.586/20-ன் படி Girl Missing @ 366 IPC r/w 9 of child marriage Act & 5(1). 6 (1) of POCSO act – 6 14 04.11.2020 வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

மணிகண்டன்
மணிகண்டன்

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

மேற்படி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக செல்வி. சுமதி, ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில் (27.03.2026) திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி திருமதி. சண்முகபிரியா, அவர்கள் எதிரி மணிகண்டன் 24/20, த.பெ.கமல் சூசைராஜ் என்பவருக்கு 20 வருட சிறைத் தண்டனையும், ரூபாய்.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

இந்நிலையில், இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர நீதிமன்ற நடவடிக்கைகளை சரிவர கவனித்த மணிகண்டம் காவல் நிலைய நீதிமன்ற பெண் தலைமைக் காவலர் திருமதி. கலைமதி என்பவரை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்      செ. செல்வநாகரத்தினம், இகாப வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.