அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

இந்தாளு ஏமாத்து பேர்வழி ! புத்தக வெளியீட்டு விழாவில் பூகம்பம் ! மோசடி மன்னர்கள் – பாகம் 05

திருச்சியில் அடகு நகையை விற்க

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

ஒரு மோசடி மன்னன் தன்னைப்பற்றி உலகமே யோசிக்கணும், உலகமே பேசணும்னு பேராசைப்படுறார். தன்னோட பராக்கிரமங்களையெல்லாம் தொகுத்து ஒரு புத்தகமாக அச்சிட முடிவு செய்கிறார். அவர் வெளியிட விரும்பிய புத்தகத்தோட தலைப்பு என்ன தெரியுமா? வாழும் அன்னை தெரசா !

கடந்த காலங்களில் என்னென்ன சமூக சேவை எல்லாம் ஆத்துனாரு அப்படின்னு அந்த புத்தகத்தில நல்லா ஒருத்தர் ஆத்தி இருந்தாரு ஆசிரியர் கு ஜான் பீட்டர். தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியிருந்த அந்த புத்தகத்தை, கடந்த 2022 ஆம் வருஷம் நவம்பர் மாதம் 4-ஆம் தேதி வெளியிட்டாரு குடுமியான்மலை ரவிச்சந்திரன்.

https://www.livyashree.com/

மலைத்தாதம்பட்டி என்கிற ஊரில் இருந்து விழா நடைபெற்ற மணப்பாரை ஆர்மன்ஸ் மஹால் வரையில் சாரட் வண்டியில் ஒய்யாரமாக உட்கார வைத்து அழைத்து வரப்பட்டார் குடுமியான்மலை ரவிச்சந்திரன். தெருவெங்கும் திருவிழாக்கோலம்தான். விழா மண்டபம் ஆதரவாளர்களால் பிதுங்கி வழிந்தது. அதற்கு ஒரு சிறப்புக் காரணமும் இருந்தது. அந்த நூலை வெளியிடுவதற்காக அழைக்கப்பட்ட பிரபலம் வேறு யாருமல்ல. அப்போதைக்கு சினிமா மார்க்கெட்டில் உச்சத்தில் இருந்த நடிகைகள் நமீதா, நீலிமாராணி, ஜனனி ஐயர் ஆகிய மூவரும்தான். இவர்களோடு ஈரோடு கருணாமூர்த்தியும் சேர்ந்து நூலை வெளியிட்டார்கள். பாரத முன்னேற்ற கழகத்தினுடைய தலைவர் பாரதராஜா யாதவ்; கரூர் பி அன்புச்செழியன் உள்ளிட்டு பலரும் வாழ்த்துரை வழங்கினார்கள்.

மோசடி மன்னர்கள்
மோசடி மன்னர்கள்

ஒரு கோலாகலமான கொண்டாட்டமாக நடந்து கொண்டிருந்த விழாவில், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மேடை ஏறினாள் அந்த இசுலாமிய பெண்மணி. ஆர்வ மிகுதியில் அண்ணனை புகழ்ந்து பேசத்தான், இப்படி மேடை ஏறிவிட்டதாகவே எல்லோரும் நினைத்திருந்தார்கள். ஆனால், மைக்கைப் பிடித்தவர், “இந்த குடுமியான்மலை ரவிச்சந்திரனுடைய வசிய பேச்சை நம்பி 16 இலட்சத்து முப்பதாயிரம் ரூபாய் கொடுத்தேன். வருஷம்13  ஆச்சு. இன்னும் இதோ அதோனு சொல்லிட்டு இருக்காரு. எனக்கு 16 இலட்சத்துக்கு16 கோடி எல்லாம் வேண்டாம். அந்த சொச்சம் கூட வேண்டாம். முழுசா 16 மட்டும் கொடுக்க சொல்லுங்க. புண்ணியமா போகும். நீ காசை கொடுக்கலன்னா இதே மேடையில நான் சாகுறத தவிர வேற வழி இல்லை.”னு திருச்சி கே.கே.நகரை சேர்ந்த ஹாஜிரா என்ற பெண் பேசியதை கேட்டு வாயடைத்து நின்றது மொத்தக்கூட்டமும்.

குடுமையான்மலை ரவிச்சந்திரன் யார் என்பதை, அந்த சபைக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த உலகுக்கும் அறிவிப்பதாக இருந்தது அந்த பெண்ணின் துணிச்சல் மிகுந்த நடவடிக்கை. இது 2022 இல் நடைபெற்ற சம்பவமாக இருந்தாலும், இதே 2022-க்குப் பிறகும் இதே ஆளிடம் ஏமாந்த ஏமாளிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது தனிக்கதை.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

அதே மேடையில், நடிகைகள் மூவருடன் குடுமியான்மலை ரவிச்சந்திரனுடன் இருப்பது போல வெளியான அந்த குழு புகைப்படங்கள் திருச்சி மாவட்ட போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அன்றைய காலகட்டத்தில் ஏரியாவில் பிரபல தாதாவாக ரவுடியாக வலம் வந்த பட்டறை சுரேஷ் என்ற நபர்தான் அவர்களோடு போஸ் கொடுத்தது. நடிகைகளுக்கும் ரவுடிக்கும் அதுவும் குடுமியான்மலை ரவிச்சந்திரன் போன்ற மோசடிப்பேர்வழிகளுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்விகள் எழுந்தது.

மோசடி மன்னர்கள் ”நான் முன்னாடிதான் ரவுடி. இப்ப திருந்தி வாழ்ந்துட்டு இருக்கிறேன். முழுநேர அரசியலில் ஈடுபட்டு இருக்கிறேன். அருள்தாஸ் அறக்கட்டளையில் நானும் பணம் போட்டிருக்கிறேன். பணத்தை திருப்பித் தருவதாக சொன்னார்கள். அதனால் பங்கேற்றேன்.” என்பதாக அப்போது விளக்கமும் அளித்திருந்தார், பட்டரை சுரேஷ்.

இங்கே ஒரு விசயத்தை குறிப்பிட்டே ஆக வேண்டும். ரம்மி விவகாரத்தில், விளம்பரங்களில் தோன்றி நடித்த நடிகர் நடிகைகளும் எவ்வாறு விசாரிக்கப்பட்டார்களோ? அதுபோலவே, இதுபோன்ற மோசடிக்காரர்கள் நடத்தும் கூட்டங்களில் பங்கேற்கும் நடிகர் நடிகைகளையும் குற்றத்துக்கும் பொறுப்பாக்க வேண்டும். அவர்களையும் குற்ற வழக்குகளில் இணைக்க வேண்டும்.

”டிரஸ்ட்-னா மக்களுக்கு சேவை செய்வதுதானே? இவர்கள் என்ன பேங்க் மாதிரி நானும் இன்வெஸ்ட்மென்ட் செய்திருக்கிறேன் என்று சொல்கிறார்களே?” என்று அந்த அரங்கத்தில் கிளம்பிய அதிர்ச்சி பட்டித்தொட்டியெங்கும் பரவியது. போன பக்கம் எல்லாம் இவரை கை கூப்பி வரவேற்ற அதே மக்கள் … போன பக்கம எல்லாம் செமத்தியா உதை விழும் என்றொரு நிலையும் வந்தது.

தொடர்ந்து பேசுவோம்.

—   ஆதிரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.