நியோமேக்ஸ் விரும்புவது இதைத்தான் ! – ”ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்”
”ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்” நியோமேக்ஸ் விரும்புவது இதைத்தான் ! “ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்” என்ற பழமொழிக்கேற்ப, நியோமேக்ஸால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருமித்தக் கருத்தில் ஒன்று திரண்டு விடக்கூடாது என்பதற்காகவே, பல்வேறு வகைகளில் தந்திரமான முறைகளை கையாண்டு வருவதாக குற்றஞ்சாட்டுகிறார், சிவகாசியைச் சேர்ந்த பொறியாளர் ராமமூர்த்தி.
நியோமேக்ஸ் நிறுவனத்தின் ஆசை வார்த்தைகளுக்கு இரையாகாமல்; நீதிமன்றத்தையும், பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசாரையும்; அரசையும் நம்பி குறிப்பாக, சட்டப்படியாக மேற்கொள்ளப்படும் முன்னெடுப்புகளே நிரந்தர தீர்வுகளாக அமையும் என்கிறார். பாதிக்கப்பட்டவர்களே, பல்வேறு முரண்பட்ட கருத்துக்களுடன் முறுக்கிக் கொண்டிருந்தால், எல்லோருக்கும் தீர்வு எட்டுவதிலும் தாமதம் ஏற்படும், நியோமேக்ஸ் நிறுவனமும் எளிதில் தப்பிவிடும் என எச்சரிக்கிறார், அவர்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்டிருக்கும் விளக்கத்தில், “2019 ஆம் ஆண்டிற்கு பிறகு தான் நிறைய துணை நிறுவனங்களை தொடங்கினார்கள். அந்தந்த துணை நிறுவனங்களின் பெயர்களில் சிறிதளவு சொத்துக்களை வாங்கி வைத்துள்ளனர். அவற்றை இதுவரை நிறுவனத்தார்கள் வெளியிடவில்லை. காவல் துறையும் கைப்பற்றவில்லை. அவற்றை கண்டறிந்து attachment செய்ய வைத்தால் புகார் கொடுத்தவர்களுக்கு தாராளமாக முதிர்வு தொகை, ஊக்கத்தொகை மற்றும் பாக்கி வட்டி போன்றவற்றை பணமாக கொடுத்து விட இயலும்.
2019 ஆம் ஆண்டிற்கு பிறகு தான் மோசடி நிறுவனத்தின் பேராசையால் அவர்களுடைய வியாபாரம் பல மாவட்டங்களுக்கு பல விதங்களில் விரிவாக்கப்பட்டது. அதன் மூலம் வருமானம் பெருகியது. ஆனால், சுயநலத்திற்காக நிறுவனத்தின் முக்கிய முடிவுகள் எடுக்கும் அதிகாரம் படைத்தவர்கள், நிறுவனத்தின் பணத்தை தவறாக பயன்படுத்திக் கொண்டார்கள்.
பெரிய திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஆசைப்பட்டார்கள் அதற்கு நமது நாட்டில் உள்ள பெரிய கட்டுமான நிறுவனங்களுடன் கூட்டு சேர திட்டமிட்டார்கள். அது பலன் அளிக்கவில்லை. ஏனென்றால், அந்த புராஜெக்ட்கள் உருவாக்க திட்டமிடப்பட்டிருந்த இடங்களுக்குரிய ஆவணங்கள் பினாமிகள் பெயரில் இருந்தன. சில நிலங்கள் புதிய சிறிய துணை நிறுவனங்கள் பெயரில் இருந்தது மற்றும் நிறுவனத்தின் கணக்கு வழக்குகள் முறையாக இல்லாமல் இருந்தது.
அதனால் வெளி நாடுகளில் இருந்து முதலீடுகளை பெறுவதற்கு நிறுவனத்தின் தலைவர் நிறுவனத்தின் மீது FIR பதிவு செய்வதற்கு முன் இருந்த இரண்டு வருடங்களில் பெரும்பாலான நாட்களை வெளிநாட்டில் செலவிட்டார். பல முறை நிர்வாக இயக்குனர் வெளிநாட்டிற்கு சென்று வந்தார். நிறுவனத்திடமிருந்த பணம் பெரும்பாலானவை என்ன ஆனது? என்றே புரியவில்லை என பல இயக்குனர்கள் புலம்புவதை அப்பொழுதே கேட்க முடிந்தது.
வெளிநாட்டிலிருந்து முதலீடு வரும் என எதிர்பார்த்ததற்கு மாறாக, ”உள்ளதும் போச்சு நொள்ளக்கண்ணா” என அமைந்து விட்டது என முக்கிய நிர்வாகிகள் பேசிக் கொண்டது பலருக்கும் தெரியும். இதற்கிடையில் தலைமை அலுவலக இயக்குனர்கள் அல்லாத ஒரு சில இயக்குனர்கள் ஒன்று சேர்ந்து தனியாக மிகப் பெரும் தொகையை வசூல் செய்து துணை நிறுவனங்களின் பெயரில் டெபாசிட் தாரர்களுக்கு ரசீது கொடுத்துவிட்டு அந்தப் பணத்தில் நிறைய சொத்துக்களை தங்கள் பெயரிலும் அவர்களுக்கு வேண்டியவர்கள் பெயரிலும் பினாமி சொத்துக்களாக வாங்கிக் குவித்து விட்டார்கள். அவர்களிடம் பேச்சுத் திறமை மிகுந்த பல கைதேர்ந்த மார்க்கெட்டிங் மேலாளர்கள் இருந்ததால் அதை அவர்கள் எளிதாக செய்து முடிக்க இயன்றது.
நிறுவனத்தின் தலைமை அலுவலக நிர்வாகம் மற்றும் முக்கிய முடிவுகளை எடுக்க மறைமுக அதிகாரம் கொண்டவர்கள் தங்கள் பெயரிலும் தங்களுக்கு விசுவாசமாக செயல்படுபவர்களின் பெயரிலும் பினாமி சொத்துக்களாக வாங்கி குவித்துக் கொண்டார்கள்.
இப்படி இரு குழுவாக மறைமுகமாக பிரிந்து, அவர் அவர்களுக்கு இயன்றதை சுருட்டி விட்டார்கள். அதனால் மோசடி குழும நிறுவனங்கள் பெற்ற டெபாசிட் தொகை அதிகளவு உள்ளது. நிறுவனங்களின் பெயரில் உள்ள சொத்துக்கள் குறைவாக உள்ளன.
அதிலும் தரமான சொத்துக்கள் மறைத்து வைக்கப் பட்டுள்ளன. பல புராஜெக்ட்களில் இருக்கும் அனுமதி பெற்ற, விற்காத, விலைக்கு தகுந்த நிலமாக இல்லாதவற்றை 5A முறையில் செட்டில்மென்ட் செய்து முடிக்க நிறுவனம் அதனுடன் இணக்கமாக மற்றும் சுயநலமாக செயல்படுபவர்கள் மூலமாக முயற்சி செய்கிறது.
இது ஒரு மொத்த வியாபாரம் போன்றது. ஒவ்வொருத்தராக , இல்லை சிறிய குழுக்களாக அழைத்து சமரசம் பேசுவதைக் காட்டிலும் ஒரு சிலருடன் ரகசிய பேச்சு வார்த்தைகள் நடத்தி அவர்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறி அந்த நிறுவனத்தின் மூலமாக பயனடைந்த பலரின் வரலாற்றைக் கூறி நீங்களும் இப்படி ஆகி விடலாம் என நம்பவைத்து இப்பொழுது சில நாடகங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
Charge sheet போடுவதற்கு முன்பு 5A செட்டில்மென்ட் செய்து கொடுக்க DRO விற்கு அதிகாரம் இருந்தாலும் அது முறையாக செய்தால் தான் அதை ஏற்றுக் கொள்ள இயலும். அதில் பொது நலன் இல்லாமல், உள் நோக்கம், சுயநலம், மற்றும் ஒரு தலை பட்சமான பாகுபாடுடன் இருப்பதாக அறிந்தால் அதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். முன்பு அட்வகேட் கமிஷனர்கள் செயல்பட்டது போலத்தான் இதுவும் என்று அதன் ஆரம்பகட்ட வேலைகளைச் செய்து கொண்டிருப்பவர்களே கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
அட்வகேட் கமிஷனர்கள் மூலமாக செய்ததை ஏற்றுக்கொள்ள இயலாது என உயர் நீதி மன்றம் தடை ஆணை விதித்தது எதனால் என்பது பற்றி ஆலோசிக்க வேண்டும். நிறுவனம் தங்களிடம் உள்ள சொத்துக்களை முதலீட்டிற்கு ஏற்ப பகிர்ந்து கொடுப்பதற்காக, பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அறிந்து கொள்ளவும், வர வேண்டிய பணத்திற்கு ஏற்ப நிலத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும் வெளிப் படையாக அறிவித்துள்ளதா? அதை பார்வையிட்டு விலை நிர்ணயம் செய்து கொள்ள வாய்ப்புகள் வழங்கி உள்ளதா?
ஒரு சங்க நிர்வாகிகள் மோசடி நிறுவனத்தின் துணையுடன் முன்பு அட்வகேட் கமிஷனர்கள் செய்ததை இப்பொழுது செய்து கொண்டிருக்கிறார்கள் அவ்வளவு தான். இதில் எந்த மாற்றமும் இல்லை. முன்பு அட்வகேட் கமிஷனர்கள் சிறப்பு நீதி மன்றத்தில் அவர்களுடைய அறிக்கையை சமர்ப்பித்தார்கள்.
அதற்குப் பதிலாக ஒரு சங்கத்தின் நிர்வாகிகள், அவர்களுக்கு வேண்டியவர்களிடமிருந்து மட்டுமே பெற்றுக் கொண்ட மனுக்களை DRO அலுவலகத்தில் சமர்பிப்பார்கள். அதை அந்த அலுவலகம் பெற்றுக் கொண்டு உரியவர்களை அழைத்து, இருப்பதில் தரமான சொத்துக்களை ஒரு சங்கத்தின் நிர்வாகிகளின் விருப்பம் போல் நிறுவனம் நிர்ணயித்த நிலத்தை செட்டில்மென்ட்டாக கொடுத்து முடித்து விடுவார்கள் என சிலர் பாதிக்கப்பட்டவர்களை நம்ப வைத்து தீவிரமாக செயல்படுவதை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, இதில் அதிகமான வெளிப்படையான சட்ட விதி முறைகள் இருப்பதால், இந்த முயற்சி வெற்றி பெறாது என்பதை விவரம் அறிந்தவர்கள் அறிவர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறி சிலரின் சுயநல முயற்சிகளுக்கு அவர்களை ஒத்துழைக்க வைத்து இறுதியில் அது நிறை வேறா விட்டால் நிறுவனமும் சங்க நிர்வாகிகளும் சிலரை காட்டி இவர்கள் தான் செட்டில்மென்ட் கால தாமதம் ஆவதற்கு காரணமானவர்கள் என வன்முறையை தூண்டி விடுவதற்கு முயற்சி செய்கிறார்கள். இதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மோசடி நிறுவனம் அவர்கள் வசூலித்த பணத்தில் 10 சதவீத பணத்திற்கு மட்டுமே நிறுவனத்தின் பெயரில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கி உள்ளார்கள். அதிலும் தரமான பல சொத்துக்களின் மீது வங்கி மூலமாகவும், தனியார் பைனான்சியர்கள் மூலமாகவும் கடன் பெற்றிருக்கிறார்கள். அதனால் அந்த சொத்துக்களை வங்கியும் பைனான்சியர்களும் சட்டப்பூர்வமாக கைப்பற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
எங்களிடமிருந்து பணமாக வசூலித்த டெபாசிட்களுக்கு உண்டான பலன் தொகையையும் சேர்த்து பணமாகவே எங்களுக்கு திருப்பித் தர வேண்டும் என்று கேட்பவர்களுக்கும், ஒரு குறிப்பிட்ட சங்கத்தை சாராதவர்களுக்கும், எப்படி செட்டில்மென்ட் , எப்பொழுது செய்து கொடுக்க இயலும் என்பதை கணக்கில் கொள்ளாமல் அதை உறுதிபடுத்தாமல், இப்பொழுது உள்ள தரமான நிலங்களை நிலமாகவும், பணமாக கேட்பவர்களுக்கு வங்கியில் உள்ள நிறுவனத்தின் பணத்தை ஒரு குறிப்பிட்ட சங்கத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் கொடுக்க இயலுமா? அதை நீதி மன்றம் ஏற்றுக் கொள்ளுமா? ஒரு தரப்பிற்கு இப்பொழுது செட்டில்மென்ட், மற்றவர்களுக்கு எப்பொழுது என்று தெரியாது என பொறுப்பானவர்களால் கூற இயலுமா? அதை சம்பந்தப்பட்டவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? இதனால் மேலும் கால தாமதம் ஆகாதா? அப்படியானால் உண்மையாக செட்டில்மென்ட்டை திட்டமிட்டு கால தாமதப் படுத்துவது யார்? எதற்காக அதை செய்கிறார்கள் என்றால், நிறுவனத்தார்கள் அவர்களின் சுயநலத்திற்காக மட்டுமே அதை செய்கிறார்கள் என்பதை பாதிக்கப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் .
அனைவருக்கும் ஒரே மாதிரியான தீர்வு, ஏற்றுக்கொள்ள கூடிய காலளவிற்குள் கிடைக்க வேண்டும் என்றால், அனைவரும் ஒத்த கருத்தில் உயர் நீதி மன்றம் அறிவுறுத்தி இருப்பது போல் எங்களுக்கு செட்டில்மென்ட் செய்து கொடுங்கள் என்ற ஒரே முடிவுடன் செயல்பட வேண்டும். மாறுபட்ட கருத்துக்கள் உடன் செயல்பட்டால் அதனால் கால தாமதம் ஆவதை தவிர்க்க இயலாது. அது மோசடி நிறுவனத்திற்கு சாதகமாக அமையும். இதற்காகத்தான் அவர்கள், அவர்களுக்கு சாதகமாக செயல்படுபவர்கள் மூலமாக பாதிக்கப் பட்டவர்களை பல வகைகளில் பல குழுக்களாக நன்கு திட்டமிட்டு பிரித்தாள் கின்றனர் அதாவது சாட்சிகளை களைக்கின்றனர். ( முதல் புகார்தாரர் அல்லாத மற்ற புகார்தாரர்கள் அனைவரும் சாட்சிகளாகவே கருதப்படுகின்றனர் ).
நிறுவனத்தினரிடம் விலை போனவர்களை பாதிக்கப்பட்டவர்கள் புரிந்து கொள்வதில்லை. டெபாசிட்டாக வசூல் செய்த பணம் எவ்வளவு, அதை என்ன செய்தார்கள், யார், யார் அதற்கு காரணமானவர்கள் மற்றும் எதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செட்டில்மென்ட் செய்து கொடுக்க கால தாமதம் ஆகிறது என்று உண்மையாக இதுவரை ஆய்வு செய்யவில்லை என்பதே இப்பொழுதுள்ள நிலைமைக்கு காரணம்.
நிறுவனத்தின் முக்கிய இயக்குனர்களின் ஜாமீனை ரத்து செய்யா விட்டால் இந்த நிலை தொடரும். அவர்கள் எந்த வித நல்ல செயல்களையும் செய்ய மாட்டார்கள்.அவர்களின் ஜாமீனை எதற்காக நீதி மன்றம் ரத்து செய்யவில்லையோ அதை செய்யாமல், அதற்கு எதிர் மாறான செயல்களை தங்களின் சுயநலத்திற்காக செய்து கொண்டு, பாதிக்கப் பட்டவர்களுக்கு அதிக மன வருத்தத்தையும் நம்பிக்கை இன்மையையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் தங்களுடைய பண பலத்தையும், அதிகாரத்தில் உள்ளவர்களிடம் தங்களுக்குள்ள செல்வாக்கையும் காட்டி சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை உள்ளே அனுப்பி விட்டால், நீதிமன்ற உத்தரவுப்படி அரசுத் துறைகள் தானாக திறம்பட செயல்பட ஆரம்பித்து விடும்.
அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் வெளியில் இருக்கும் வரை பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு காணல் நீர் போல் தான் இருக்கும் என்பதை விசயம் அறிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.
பாதிக்கப் பட்டவர்கள் ஒன்று கூடி நிறுவனத்தார்கள் செய்து கொண்டிருக்கும் சட்ட விரோத செயல்களுக்கு கண்டனம் தெரிவித்தும், உரிய முறையில் உயர் அதிகாரிகளுக்கு ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும், சட்டப்போராட்டங்கள் நடத்தியும் நீதிமன்றம் மற்றும் அரசின் கவனங்களை ஈர்க்க வேண்டும்.
விழிப்புணர்வு இல்லாத பாதிக்கப்பட்டவர்கள் செட்டில்மெண்ட் விசயத்தில் மேலும், மோசம் போய் விடாமல் இருப்பதற்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட அப்பாவிகளிடம் மனுவில் கையொப்பம் பெற்ற பின் அதன் மேல் அவர்களுக்கு சாதகமாக சிலவற்றை எழுதிக் கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதனால், மேலும் மோசடி நடைபெற வாய்ப்பு உள்ளது.
புகார் கொடுக்காதவர்கள் நிறுவனத்தை புகழ்வதும், நிறுவனத்தார்கள் புகார் கொடுக்காதவர்களை புகழ்வதுமாக இருந்தால் ”ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டாம்” என்பது போல் ஆகிவிடும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒன்று கூடி, சங்கம் பதிவு செய்து, நிறுவனத்தின் முக்கிய நபர்களின் ஆதரவில் அவர்களுக்கு சாதகமாக தைரியமாக, இதற்கும் மேலான குற்றங்களை திட்டமிட்டு செய்து பாதிக்கப் பட்டவர்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்த தயங்க மாட்டார்கள் என்பதை அண்மையில் புகார் கொடுக்காதவர்களின் தலைவர் வெளியிட்ட வாய்ஸ் மெசேஜ் மூலமாக பலர் புரிந்து கொண்டனர்.” என்பதாக குறிப்பிடுகிறார், சிவகாசியைச் சேர்ந்த பொறியாளர் ராமமூர்த்தி.
– அங்குசம் புலனாய்வுக்குழு.
பொய் செய்திகளை பரப்பி மக்களை ஏமாற்றி பணத்திற்கு விபச்சாரம் செய்யும் பொறம்போக்கு பிச்சைக்கார எச்சக்கல மானங்கெட்ட விபச்சார ஊடகம் அங்குசம்
பொறியாளர் ராமமூர்த்தி 2010 இல் வந்த நீ ஒரு கோடி முதலீடு செய்து விட்டு 5 கோடி சம்பாதித்து விட்டாய் தற்போது செட்டில்மெண்ட் வரும்போது ஸ்டே ஆர்டர் வாங்குறாய் கஸ்டமராகிய நாங்கள் உன் வீட்டிலும் அங்குசம் வீட்டிலும் உட்காருவோம் நீ அனைவருக்கும் சாப்பாடு போடவும்.
பொறியாளர் ராமமூர்த்தி 2010 இல் வந்த நீ ஒரு கோடி முதலீடு செய்து விட்டு 5 கோடி சம்பாதித்து விட்டாய் தற்போது செட்டில்மெண்ட் வரும்போது ஸ்டே ஆர்டர் வாங்குறாய் கஸ்டமராகிய நாங்கள் உன் வீட்டிலும் அங்குசம் வீட்டிலும் உட்காருவோம் நீ அனைவருக்கும் சாப்பாடு போடவும்.
ஆசை மனிதனை ஒருபோதும் வாழ விடாது
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 100க்கு 50℅ ஆசிரியர்கள் இந்த திட்டத்தில் இருக்கிறார்கள்.
இவர்கள் அரசிடம் வேலை செய்யாமல் வாங்கிய பணம்.
ஆகவே நியோமேக்ஸ நிர்வாகிகளே தயவுசெய்து இவர்களுக்கு பணம் செட்டில்மென்ட் செய்ய வேண்டாம்.
இதுவரை எந்த ஒரு நிதி மோசடி நிறுவனம் மக்களுக்கு பணம் திருப்பி கொடுத்ததாக நான் பார்க்கவில்லை
ஆகவே யாருக்கும் பணம் திருப்பி கொடுக்காது
ஆசை மனிதனை ஒருபோதும் வாழ விடாது
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 100க்கு 50℅ ஆசிரியர்கள் இந்த திட்டத்தில் இருக்கிறார்கள்.
இவர்கள் அரசிடம் வேலை செய்யாமல் வாங்கிய பணம்.
ஆகவே நியோமேக்ஸ நிர்வாகிகளே தயவுசெய்து இவர்களுக்கு பணம் செட்டில்மென்ட் செய்ய வேண்டாம்.
இதுவரை எந்த ஒரு நிதி மோசடி நிறுவனம் மக்களுக்கு பணம் திருப்பி கொடுத்ததாக நான் பார்க்கவில்லை
ஆகவே யாருக்கும் பணம் திருப்பி கொடுக்காது
இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கிராமத்தை சேர்ந்தவன் நானும் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறேன். பணம் திரும்ப கிடைக்கவில்லை என்றால் என் நிலமை மிகவும் கவலைக்குரியதாகி விடும். முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்கும் வேலையை பாருங்கள் நிறுவனத்தின் இயக்கனர்களே.
கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு pearless மாதிரி எல்லாம் தலையில் துண்டை போட்டுகிட்டு உட்காருங்கள் பிரியா விட்டா கம்பெனிக்காரன் செட்டில்மெண்ட் பண்றது ரெடியா இருக்காங்க
அப்படியா