தூத்துக்குடி – கண்மாய்களில் கலக்கப்படும் கழிவுநீர் ! வாழ்வாதாரத்தை இழந்த கிராம மக்கள்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மூப்பன்பட்டி கிராம மக்களின் வாழ்வாதாரமாக விளக்குவது விவசாயம். இதற்கு தேவையான நீர் ஆதாரமாக உள்ள இரண்டு கண்மாய்களில் படர்ந்து வளா்த்திருக்கும் அமலை செடிகளை அகற்றவும், தொழிற்சாலை மற்றும் மருத்துவ கழிவுகள் கண்மாயில் கலப்பதை தடுக்கவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
தூத்துக்குடி மூப்பன்பட்டி கிராமத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் நெல் மற்றும் காய்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த விவசாயத்திற்கு தேவையான நிலத்தடி நீர் ஆதாரமாக கிராமத்தின் முன்பகுதியில் அமைந்துள்ள இரண்டு கண்மாய்கள் விளங்கிய நிலையில்,
தற்போது சரியான பராமரிப்பு இல்லாமல் கண்மாய் முழுவதும் அமலை செடிகள் படா்ந்து வளா்வதனால் மழை பெய்தாலும் தண்ணீர் தேங்காத நிலை ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது.
மேலும் கோவில்பட்டி நகரில் இருந்து வரக்கூடிய தொழிற்சாலை கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள் அதிக அளவில் இந்த இரண்டு கண்மாய்களில் விடப்படுவதால், துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி, கண்மாய்கள் மாசடைந்து வருவதால் கால்நடைகள் கூட நீர் அருந்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
எனவே இந்த இரு கண்மாய்களில் படர்ந்து விரிந்து காணப்படும் அமலை செடிகளை அகற்றவும் , கோவில்பட்டி நகர் பகுதியில் இருந்து வரும் சாக்கடை கழிவு நீர் கண்மாய்களில் கலக்காமல் தடுக்கும் வகையில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
— மணிவண்ணன்.