சிவகாசி – பேருந்து மீது மோதி இருசக்கர வாகனம் ! பலியான வாலிபா், தீக்கிரையான ஆமினி பேருந்து !
விருதுநகர் மாவட்டம், சிவகாசி பேருந்து நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் நோக்கி செல்லும் தனியார் பேருந்து நேற்று( நவம்பர் 21 ) இரவு 9 மணி அளவில் 20 பேர் கொண்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. பேருந்தை மாரியப்பன் என்பவர் இயக்கியுள்ளார்.
சரியாக நேற்று இரவு 10 மணி அளவில் சிவகாசியில் இருந்து சாத்தூர் செல்லும் சாலையில் அனுப்புங்குளம் பகுதியில் சென்றபோது. எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது ஆமினி பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் வந்த மீனம்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (35) பேருந்து அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே தலை நசிங்கி உயிரிழந்தார்.
இந்த விபத்தில் பேருந்து சிறிது தூரம் இருசக்கர வாகனத்தை இழுத்துச் சென்றபோது. பெட்ரோல் டேங்க் வெடித்து ஆமினி பேருந்து தீப்பெற்ற தொடங்கியது உடனடியாக பேருந்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டனர்.
சம்பவத்தில் பேருந்து முழுவதும் தீப்பற்றி எரிந்து சேதம் அடைந்தது.உடனடியாக இரண்டு தீயணைப்பு வாகனத்தில் வந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தால் அந்தப் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மேலும் விபத்து நடந்த பகுதியை விருதுநகர் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் நேரில் ஆய்வு செய்தார். விபத்தில் உயிரிழந்த கார்த்திக் உடலை ஆம்புலன்ஸ் மூலமாக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிவகாசி கிழக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
— மாரீஸ்வரன்.