அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மத நல்லிணக்கம் விரும்புபவர்கள் தர்காவை வேறு இடத்திற்கு மாற்றலாமே! – எச்.ராஜா  பரபரப்பு பேட்டி…

0

திருச்சியில் அடகு நகையை விற்க

இவன் மத நல்லிணக்கம் விரும்புவர்கள் இந்து முஸ்லிம் இடையே இணக்கமாக வாழனும் நினைபவர்கள் தர்காவை வேறு இடத்திற்கு மாற்றலாம். எச்.ராஜா  பரபரப்பு பேட்டி…

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா  மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

தலைநகர் டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக அருகே பெருபான்மையோடு ஆட்சி அமைக்கும் சூழல் உள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக ஆம் ஆத்மி கட்சியினுடைய ஊழல், நகர் முழுவதும் அசுத்தமாக பராமரிக்கப்படாத மோசமான ஆட்சியை மக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அதானல் இம்முறை பாஜக அரசாங்கத்தின் சாதனைக் அங்கு நல்ல பலன் அளிக்கும் சூழல் உள்ளது. தமிழகத்தில் இந்து விரோதத்தில் அராஜகம் நாளுக்கு நாள் அக்கிரமங்கள், அராஜகங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்து கோவிலை கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிற ஒரு ஆட்சி.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

பழனியில் முருகனுக்கு மாநாடு நடத்தி சனாதன ஹிந்து தர்மத்தை மலேரியா கொசு மாதிரி அடிக்க வேண்டும் என்று சொன்ன தீய நபருக்கு மகுடம் சூட்டுவதற்காக நடந்தது என்று தெளிவாகத் தெரிகிறது. லண்டன் தீர்ப்புப்படி முழு மலையும் முருகனுக்கு சொந்தம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

சிக்கந்தர் என்பவர் எப்படி மலையில் இறந்தார், எதற்கு மலைக்கு வந்தார், தர்கா வருவதற்கு முன்பாக அங்கு இருந்தது யார். காசி விஸ்வநாதர் கோவில்  இருந்த பொது சிக்கந்தருக்கு என்ன வேலை அங்கு.  காசி விஸ்வநாதர் கோயிலை இடிப்பதற்காகத்தான் சிக்கந்தர் போனார் என்கிற கருத்து மக்களிடையே உள்ளது.

எச்.ராஜா பரபரப்பு பேட்டி...
எச்.ராஜா பரபரப்பு பேட்டி…

இந்துக்களுக்குத்தான் அந்த மலை சொந்தமே தவிர உனக்கு என்ன வேலை. இவன் மத நல்லிணக்கம் விரும்புவர்கள் இந்து முஸ்லிம் இடையே இணக்கமாக வாழனும் நினைபவர்கள் தர்காவை வேறு இடத்திற்கு மாற்றலாம்.  அயோத்தியும் இதை போல் தான் ஆராய்ச்சி அடிப்படையில் கொடுக்கப்பட்டது, அதைப்போல் வேண்டுமென்றால் இந்துக்களுடன் இணக்கமாக வேண்டும் என்பவர்கள் செய்யலாம் .

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

தமிழக அரசு இந்து விரோதக் கொள்கையை கைவிட வேண்டும். இல்லையென்றால் 2026 இந்துக்கள் அனைவரும் தேசியவாதிகள், தமிழை நேசிப்பவர்கள், நீங்கள் தமிழ் விரோதிகள். ஈவேராவின் பெயரை சொல்பவர்கள் தமிழை விரும்புவர்களாக இருக்க முடியாது. தமிழை காட்டுமிராண்டி கூட்டம் என்று சொன்ன ஈவெராவின் கூட்டம் தமிழ் பற்றாளர்களாக இருக்க முடியாது.

நாளைக்கு இந்துத்துவாவின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி தர வேண்டும். மயிலாடுதுறையில் பிளக்ஸ் வைத்தவனை கைது செய்து நீதிமன்றம் அனைத்து செல்கிறார்கள் நீதிபதியை கேட்கிறார். இவரை எதிர்த்து அழைத்து வந்தீர்கள் என்று கேட்கிறார். இந்துக்களை துன்புறுத்துவது தான் இந்த அரசின் வேலை. உதயநிதி ஸ்டாலின் நான் கிறிஸ்தவன், அதில் பெருமைப்படுகிறேன் என்று சொல்கிறார், சேகர் பாபு அல்லேலூயா என்றார் அதற்குத்தான் அவரை அல்லேலூயா பாபு என பெயர் வைத்தேன்.

அயோத்தி பிரச்சனைக்கு பிறகு இந்து எழுச்சியால் யாரும் உத்தர் பிரதேசத்தில் அதிகாரம் வர முடியவில்லை அந்த எழுச்சி இங்கு வரும்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நவாஸ்கனி வந்தபோது இந்த 144 இல்லை இந்துக்களை துன்பப்படுத்தி வேறு மதத்திற்கு தள்ளிவிட வேண்டும் என்பதுதான் ஸ்டாலின் அரசின் எண்ணம். திருப்பரங்குன்றத்திற்கு வாங்கள் என்று சொன்னால் கைது செய்வீர்களா, அராஜகம் இல்லையா, நீதித்துறை தீர்ப்பில் சொல்லி இருக்கிறது.

அந்த இடம் ஸ்ரீ கந்தர் மலை தான் சிக்கந்தர் அங்கிருந்த கோவிலை இடிக்க போனதாகவும் அதனால் அங்கிருந்த முருக பக்தர்கள் அவரை தாக்கியதாகவும் கருத்து உள்ளது.  இந்துக்கள் மலை மீது செல்வதற்கு நியாயம் உள்ளது முஸ்லிம்க்கு அங்கு என்ன வேலை சிக்கந்தர் எதற்காக சென்றார். ஆக்கிரமிக்க சென்றவர். பூர்வமாக சொத்துக்களை வைத்துக் கொள்வதற்கு எந்த கடவுளுக்கும் அதிகாரம் இல்லை இந்து கடவுளுக்கு மட்டும் தான் உள்ளது.

கனிமொழிக்கு அரசியல் சட்டம் தெரியுமா, பட்ஜெட் என்றால் என்ன தெரியுமா. ஏதாவது மாநிலத்திற்கு சிறப்பு திட்டம் இருந்தால் அதன் பெயர் வரலாம், பெயர் வரவில்லை என்பதற்காக ஒரு மாநிலத்திற்கு பட்ஜெட்டை வைத்து பேச முடியுமா. அரசு ஊழியர்கள் உட்பட ஏழு லட்சத்தில் இருந்த வரி வரம்பை 12 லட்சம் வரை உயர்த்தி உள்ளார் மதுரையை சேர்ந்த வீர தமிழச்சி நிர்மலா சீதாராமன் கடைசி பந்தில் சிக்சர் அடித்துள்ளார்.உங்களுக்கும் ஓட்டு போட்ட மக்களுக்கும் இதை சேரும் தானே. பட்ஜெட்டில் அறிவித்துள்ள பயன்களை பெறுபவர்களும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் தானே அப்படி இருப்பவர்கள் தமிழர்கள் இல்லை என்று சர்டிபிகேட் கொடுத்து விடுவீர்களா.  ஈவேரா சொல்லிக்கொடுத்த பிரிவினைவாத சித்தாந்தம், ஆங்கிலேய அடிமைத்தனம். 44 இல் ஈவேரா போட்ட தீர்மானம் அது தான். நல்லாவே எடுத்துட்டு இருந்தீங்க வெள்ளையன் இந்தியாவை விட்டு வெளியேறக்கூடாது அப்படி வெளியேறினாலும் லண்டனில் இருந்து இந்தியாவை ஆள வேண்டும் என தீர்மானம் பொட்ட தேசத்துரோகிக்கு சிலை வைக்கும் கூட்டம் நாட்டு மக்களுக்கு நல்லது நினைக்குமா. நாட்டை, சுதந்திரத்தை எதிர்த்த தேச துரோகிகள். தேச விரோத கும்பல் மத்திய பட்ஜெட்டை பற்றி இப்படித்தான் அறிவில்லாமல் பேசுவார்கள் என கூறினார்.

 

— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.