மோகன்லாலின் ‘விருஷபா’ படப்பிடிப்பு நிறைவு
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் நடிப்பில், இந்தியாவின் மிகப்பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வரும் ‘விருஷபா’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றது. மும்பையில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர் ஆகியோரின் அர்ப்பணிப்பு மிக்க தொடர் உழைப்பைத் தொடர்ந்து, படப்பிடிப்பு நிறைவடைந்ததை, கேக் வெட்டிக் கொண்டாடினர்.

நந்த கிஷோர் எழுத்து இயக்கத்தில், கனெக்ட் மீடியா மற்றும் பாலாஜி டெலிஃபிலிம்ஸ், ஏவிஎஸ் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் இப்படம், இந்தியாவின் பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகிறது. மோகன்லாலுடன், இந்திய அளவிலான முன்னணி நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். திறமைமிகு முன்னணி தொழில் நுட்பக் கலைஞர்கள் பணிபுரிந்துள்ளனர்.
படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் பரபரப்பாகத் துவங்கியுள்ளது.
‘விருஷபா’ தெலுங்கு, மலையாளம், இந்தி, தமிழ், கன்னடம் என ஐந்து மொழிகளில் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகலாம்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஷோபா கபூர், ஏக்தா கபூர், சி.கே. பத்ம குமார், வருண் மாத்தூர், சௌரப் மிஸ்ரா, அபிஷேக் வியாஸ், விஷால் குர்னானி மற்றும் ஜூஹி பரேக் மேத்தா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் விளம்பர பணிகள் தற்போது பரபரப்பாகத் துவங்கியுள்ளது. திரைக்குப் பின்னால் நடந்த காட்சிகள், போஸ்டர்ஸ், சிங்கிள்ஸ் என வரிசையாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
— மதுரை மாறன்.