தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்தில் இலவச பேட்டரி கார் திட்டம்!
வயதானவர்கள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு, மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்தில் இலவச பேட்டரி கார் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்திற்கு வரும் முதியவர்கள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பேட்டரி கார் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா இன்று பச்சைக் கொடி காட்டி தொடங்கி வைத்தார்.

தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு தினந்தோறும் ஏராளமான பொது மக்கள் மாற்றுத்திறனாளி, முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், அலுவலகத்திற்கு மனு கொடுக்க வருகின்றனர்.
இவர்களுக்கு மெயின் ரோட்டில் இருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகம் வரை இலவச பேட்டரி கார் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இன்று இந்த பேட்டரி காரில் முதியவர்கள் வயதானவர்கள் மாற்றுத்திறனாளிகள் கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட அனைவரும் இலவசமாக பேட்டரி காரில் பயணம் செய்தனர்.
— ஜெய்ஸ்ரீராம்.