மதுரையில் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது
மதுரையில் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது
மதுரை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனையை முற்றிலுமாக ஒழிப்பதற்கு மதுரை மாவட்ட காவல் துறையால் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதுஇதில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுகைது செய்தும்கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளை பறிமுதல் செய்துசட்டப்படியான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது அவ்வாறு எடுக்கப்படும் நடவடிக்கைகளில் மிக முக்கியமானதாக கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களை கட்டுப்படுத்தும் விதமாக அக்குற்றவாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்கம் செய்யப்பட்டுகுண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறதுஎழுமலை காவல் நிலைய சரகம் மானூத்து முனியாண்டி கோவில் மொட்டைபாறை அருகே கஞ்சா விற்பனை சம்மந்தமாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் எழுமலை காவல்நிலைய சார்பு ஆய்வாளர் மற்றும் பெண் காவலர்களுடன் மேற்கொண்ட சோதனையில்சந்தேகப்படும்படியாக அவ்விடத்தில் இருந்தபவுன்தாய், வயது 56, க/பெ பாண்டி, மானூத்து, உசிலம்பட்டி, பிராபாவதி (எ) பேச்சியம்மாள், வயது 34, க/பெ. வீரா, வடக்கு தெரு, மானூத்து, உசிலம்பட்டி, பேச்சியம்மாள், வயது 45, க/பெ. பாஸ்கர், வடக்கு தெரு, மானூத்து, உசிலம்பட்டி, மதுரை ஆகியோர்களை விசாரணை செய்தபோது அவர்களிடமிருந்து சுமார் 22 கிலோ கிராம் தடைசெய்யப்பட்ட கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுமேற்படி நபர்கள் எழுமலை காவல் நிலையம் கொண்டுவரப்பட்டு உசிலம்பட்டி உட்கோட்ட துணைக்கண்காணிப்பாளர் மற்றும் எழுமலை காவல் ஆய்வாளர் ஆகியோர் விசாரணை செய்ததில் எதிரிகள் ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சா மொத்தமாக கொள்முதல் செய்து வந்தது தெரியவந்துள்ளது இவர்கள்மீது எழுமலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்மேலும் மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் பதுக்குவோர் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு மற்றும் அவர்களுடைய உறவினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்படும் என மதுரை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சிவபிரசாத் எச்சரித்துள்ளார்இச்செயலைவிரைவாக கைது நடவடிக்கையில்செயல்பட்ட காவல்துறையினரை சக காவலர்கள் பாராட்டி வருகின்றனர்