வெடி விபத்தில் சிக்கிய மூன்று சிறுவர்கள், கிராமமே சோகத்தில் மூழ்கிய சோகம் !
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பகுடி ஒன்றியம் களபம் பஞ்சாயத்து S.களபம் கிராமத்தில் மூன்று சிறுவர்கள் இன்று காலை தீபாவளிக்கு வாங்கிய பட்டாசுகள் மிஞ்சி இருந்ததை பொங்கல் விழா தொடர்ச்சியான இன்று பட்டாசுகளை எடுத்து வெடிக்க வயல்வெளி பக்கம் சென்றுள்ளனர்.
நாட்கள் கடந்த பட்டாசு என்பதால் வெடிக்காமல் இருந்துள்ளது பட்டாசை மீண்டும் பற்ற வைக்க தீயை எடுத்து சென்ற நிலையில் பட்டாசு வெடித்ததில் அடைக்கலராஜ் மற்றும் 2 சிறுவர்களுக்கு உடல் முழுதும் தீப்பற்றி உடல் முழுதும் தோல் உறிந்து பெறும் விபத்து ஏற்பட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அவரச வாகனம் மூலம் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளனர் மூன்று சிறுவர்களும், தகவல் அறிந்த தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவர்களின் பெற்றோர்களிடம் விபரங்கள் கேட்டறிந்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு சிகிச்சையை தீவிரப்படுத்துமாறு மருத்துவர்களிடம் உத்தரவிட்டுள்ளார். சிறுவர்களுக்கு பட்டாசு வெடித்து பெறும் விபத்து ஏற்பட்டு உள்ள சூழலில் கிராமமே பெறும் சோகத்தில் உள்ளனர்.