மதில் மேல் பூனை  – விழிப்பாக இருக்க வேண்டிய காலகட்டம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அரசியல் கணக்குகளை இப்போது போட முடியாது இருந்தாலும் தோராயமாக ஒன்றை கணிக்க முடியும் ஏறக்குறைய அதிமுக பிஜேபி கூட்டணி நேற்று உறுதியாகிவிட்டது . இதை சாத்தியப்படுத்தியது துருப்புச் சீட்டாக பிஜேபிக்கு பயன்பட்ட செங்கோட்டையன்தான். அதற்குப் பின்னால் தான் இபிஎஸ் மனநிலையில் பெரிய மாற்றம் வந்து தானே தேடி போய் பெரியவர் அமித்ஷா அவர்களை சந்திக்க வைத்துள்ளது. ஆக கூட்டணி உருவாகிவிட்டது.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

இனிய ரமலான் வாழ்த்துகள்

இந்த கூட்டணியில் தினகரன் இருப்பார் பன்னீர் இருப்பார். நவகிரகங்கள் ஒருவரை ஒருவர் பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொண்டிருந்தாலும் ஒரே இடத்தில் இருப்பதில்லையா அதுபோல கூட்டணியில் இருப்பார்கள்.

வரும் தேர்தல் நான்கு முனை போட்டியாக அமைய வாய்ப்பு உள்ளது . விஜய் தனித்துதான் நிற்பார். சீமான் தனித்து தான் இருக்கிறார் .ஆக திமுகவின் எதிர்ப்பு வாக்குகள் இவ்வாறு பிரியும் அதே சமயம் இதனுடைய விளைவாக திமுகவின் வேலை சுலபமாய் விடும் என்று அந்த கட்சி நினைத்தால் அது தவறு

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

கடந்த வாரம் நடந்த முதல்வர் பிறந்த நாள் விழாவில் பேசிய பாண்டே சூசகமாக ஒன்றைச் சொன்னார் .2026 திமுகவுக்கு சவாலான ஒன்றாக தான் இருக்கும் என்று திமுக மேடையிலேயே சொன்னார். அதனுடைய அர்த்தம் இப்போது உண்மையாகி விட்டது.

பாண்டே

பாண்டே

பிஜேபி உறவாடி கெடுத்து அதிமுகவை மெல்ல மெல்ல சுரண்டுகிறதோ எண்ணவோ அது வேறு விஷயம். இனி இபிஎஸ் அண்ட்கோ அதிமுகவை.

பழைய நிலைமைக்கு கொண்டு வரும் என்று எம்ஜிஆர் சமாதியில் போய் தூங்கி ஒருவன் கனவு காண முடியாது.

எப்படி இந்தியாவில் முகலாய சாம்ராஜ்யத்தை பகதூர்ஷா முடித்து வைத்தாரோ அது போல’ எப்படி மதுரையில் பாண்டியர் ஆட்சியை வீரபாண்டியன் முடித்து வைத்தானோ அப்படி அதிமுக கோட்டையை சிதிலமாக செய்துவிடுவார் இபிஎஸ் .. அநேகம் அதிமுகவின் கடைசி தலைவர் இ பி எஸ் தான் என்பதில் சந்தேகம் இல்லை.

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

அதற்குப் பிறகு அக்கட்சி படிப்படியாக சேதாரம் ஆகிவிடும் . பல்வேறு துண்டுகளாக உடையும் அதில் ஒரு பகுதி அல்லது பெரும் பகுதி பிஜேபியை ஆதரிக்கும்.

எடப்பாடி அமித்ஷா சந்திப்பு
எடப்பாடி அமித்ஷா சந்திப்பு

குறைந்தபட்சம் 2031 பிஜேபி ஆட்சி அமைக்க பகிரத பிரேயத்தனம் செய்யும் . அதற்குள் திமுக மக்களிடம் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகிறது என்பதை பொறுத்து பிஜேபி வருவதும் வராததும் இருக்கிறது. இந்த வாய்ப்பை அமித்ஷா தவற விட மாட்டார் . அழுத்தமாக தமிழ்நாட்டில் காலூன்ற என்னென்ன செய்ய வேண்டுமோ இந்த கூட்டணியை வைத்து செய்து விடுவார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எறும்பு ஊர கல்லே தெரியுமென்றால் தமிழ்நாடு மட்டும் விதிவிலக்கா என்ன.

இபிஎஸ் மூலம் எது நிகழாது என்று நினைத்தோமோ அது நேற்று நடந்து விட்டது. இனி எத்தனை பாசாங்கு போட்டாலும் இஸ்லாமியர் வாக்கு ஒரு சொட்டு கூட அ திமுக கூட்டணிக்கு போகாது.

திமுக கூட்டணியை பொறுத்தவரை இதே கூட்டணி நிச்சயம் தொடரும் .தேமுதிக அநேகம் திமுகவோடு வர வாய்ப்பு இருக்கிறது.

அவர்களுக்கு வேண்டியது எம்எல்ஏ இடங்கள் முக்கியமல்ல . பிரேமலதா அவர்களின் நோக்கம் தனது தம்பியை எம்பி ஆக்க வேண்டும் என்பதுதான். அதற்கு திமுக உடன் பட்டால் நிச்சயம் திமுக கூட்டணிக்கு வந்து விடுவார்.

புதிதாக ஒரு தலைவலி வேல்முருகன். அவரிடம்  கணிசமாக வன்னியர் வாக்குகள் இருக்கின்றன . அவரே திமுக கூட்டணியில் இருந்து அநேகம் போக விட மாட்டார்கள் . இருந்தாலும் அவர் பாமகவோடு இணைந்தால் வட மாவட்டங்களில் திமுகவுக்கு பின்னடைவு ஏற்படும் . விஜய் கட்சிக்கு போனால் அதனால் பாதிப்பு இல்லை அதிமுகவுக்கு போக வாய்ப்பு இல்லை.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்த ஓராண்டில் திமுக செய்யக்கூடிய மக்கள் நலப் பணிகள்,, அரசு ஊழியருக்கு பழைய ஓய்வு ஊதியம் , இலவசங்கள் என்று சில உடனடி லாபங்களை தந்தால் கடுமையான போட்டி இருந்தாலும் மீண்டும் திமுக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறது.

திமுக மிக மிக விழிப்பாக இருக்க வேண்டிய காலகட்டம் இந்த ஓராண்டு காலகட்டம் தான்.

 

—   ஜெயதேவன் – எழுத்தாளர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.