திருப்பரங்குன்றத்தில் அலைமோதிய பக்தர்களின் கூட்டம் ! கோலாகலமாக நடைபெற்ற சூரசம்கார விழா !
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சூரசம்கார விழா கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
முருக பெருமானின் அறுபடைவீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி விழா கடந்த 2ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் இன்று நடைபெற்றது.
சூரனை வதம் செய்வதற்காக தாய் கோவர்த்தனாம்பிகையிடமிருந்து சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. முன்னதாக, சூரனை வதம் செய்வதற்காக சிவப்பு நிற பட்டாடை அணிந்து மயில் வாகனத்தில் அமர்ந்து காட்சியளித்ததை தொடர்ந்து கோவிலில் இருந்து புறப்பட்டு சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பு எழுந்தருளினார்.
தொடர்ந்து ஸ்தானிக்கப்பட்டர் சூரசம்ஹார லீலைகள் குறித்து பக்தர்களுக்கு எடுத்துரைத்த தொடர்ந்து வீரபாக தேவருடன் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி மிக விமர்ச்சையாக நடைபெற்றதுகந்த சஷ்டி விழாவை காண திருப்பரங்குன்றம் மட்டுமல்லாது மதுரை திருமங்கலம் சோழவந்தான் உசிலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் கந்த சஷ்டி விழாவை காண பக்தர்கள் கூட்டம் கோவிலில் அலை மோதியது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் சன்னதி தெருவில் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு தடுப்புகளுக்குள்மக்கள் அமர்ந்து சூரசம்ஹார லீலையை காணுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததுமேலும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.