அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தூற்றுவார் தூற்றட்டும், போற்றுவார் போற்றட்டும் … பொறுத்திருந்து பாருங்கள் – ஜி.கே.வாசன் !

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

ட்சி அதிகாரத்தில் பங்கு என்பது கூட்டணியின் பலம், சட்டமன்ற உறுப்பினரின் எண்ணிக்கை அதனைச் சார்ந்தே கூட்டணி அரசின் வாதமாக வரும் நாட்களில் இருக்கும்” ஜி.கே.வாசன் கருத்து தெரிவித்திருக்கிறார்.

மதுரை செல்லூர் பகுதியில், தனியார் மருத்துவமனையை திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், “உலகளவில் இந்தியாவில் தான் சுகாதார கட்டமைப்பு போற்றக் கூடிய வகையில் உள்ளது. மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மை இல்லாமல் அனைத்து மாநிலங்களில் சுகாதாரத்துறைக்கு நிதியை வழங்கி வருகிறது.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

அதன் அடிப்படையில் எய்ம்ஸ் மருத்துவமனை படிப்படியாக வளர்ந்து வருகிறது ஒரு காலக்கெடுவிற்குள் கட்டி முடிக்கப்பட்டு மதுரையின் “மைல் கல்லாக” எய்ம்ஸ் மருத்துவமனை அமையும்.மதுரை மக்கள் எய்ம்ஸ் மருத்துவமனை வரப்பிரசாதமாக கருதுகிறார்கள்.”தூற்றுவார் தூற்றட்டும், போற்றுவார் போற்றட்டும்”. எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்து லட்சக்கணக்கான மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது  மத்திய அரசின் கடமை.

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

வரலாற்றுச் சிறப்பை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.1999 ஆம் ஆண்டு மூப்பனார் தலைமையில் கூட்டணி அமைந்த போது ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று எடுத்துரைக்கப்பட்டது என்பதை நினைவு கூற விரும்புகிறேன்.

தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று இருந்தால் தங்களுடைய கட்சியின் வளர்ச்சிக்கு நல்லது என்று தலைவர்களும் தொண்டர்களும் நினைப்பது தவறு கிடையாது. ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு எப்படி வர வேண்டும் என்றால் நல்ல கூட்டணி, ஒத்த கருத்துடைய கூட்டணி, அதன் அடிப்படையில் கூட்டணியின் பலம் மக்களின் நம்பிக்கை வெற்றி வாய்ப்பு சட்டமன்ற உறுப்பினரின் எண்ணிக்கை அதனைச் சார்ந்தே கூட்டணி அரசின் வாதமாக வரும் நாட்களில் இருக்கப் போகின்றது” என்றார்.

 

— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.