அங்குசம் சேனலில் இணைய

நீ செத்தாதான் … எனக்கு சொத்து கிடைக்கும் … உயிலுக்காக பெற்ற தாயின் உயிரை எடுத்த சைக்கோ மகன் !

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

வீட்டை விற்று விலை உயர்ந்த பைக்கை வாங்கி தர மறுத்த தாய் தந்தையரை கத்தியால் குத்தி, தாயை கொலை செய்த சைக்கோ கில்லரை  கண்டு உறைந்து போய் உள்ளார்கள் திருப்பத்தூர் மக்கள்.

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி வட்டத்திற்குட்பட்ட கசிநாயக்கன்பட்டி  கிராமத்தை சேர்ந்தவர்  ஆதிமூலம்(64). இவருடைய மனைவி வெங்கடேஸ்வரி (54). இவர்களுக்கு வெற்றிச்செல்வன் மற்றும் கோமதி என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

ஆதிமூலத்துக்கு சென்னையில் சொந்தமாக வீடு இருக்கிறது. அங்கிருந்தவாரே, இவரது மகன் வெற்றி செல்வன் CA  முடித்து சென்னையில் உள்ள ஒரு ஆடிட்டர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்திருக்கிறான்.

அவ்வப்போது, சென்னை வீட்டை விற்று பணத்தை தர வேண்டும் அல்லது விலை உயர்ந்த இருசக்கர வாகனம் வாங்கித் தர வேண்டும் என  தந்தையிடம் வெற்றி செல்வன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளான்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

தந்தைக்கு கத்திக்குத்து

கடந்த 2023- ம் ஆண்டு தனது தந்தை ஆதி மூலம் நடத்தி வந்த டைலர் கடைக்குச் சென்ற வெற்றிச்செல்வன்  வீட்டை விற்று பணம் தர வேண்டும் . இல்லையெனில் விலையுயர்ந்த இருசக்கர வாகனம் வாங்கிக் கொடுக்குமாறு தகராறில் ஈடுபட்டிருக்கிறான்.

அப்போது, ஆத்திரமடைந்த  வெற்றிச்செல்வன், தாய் வெங்கடேஷ்வரி கண் எதிரே தந்தை ஆதிமூலத்தை கடையில் இருந்த கத்தரிக்கோலைக் கொண்டு 14 இடங்களில் கொடூரமாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி இருக்கிறான்.

மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பிறகு பிழைத்த ஆதிமூலம்,  சைக்கோ மகன் எந்த நேரத்திலும் வருவான் என பயந்து போய் கசிநாயக்கன்பட்டி பகுதியில் இருந்த வீட்டை காலி செய்துவிட்டு,  மனைவி வெங்கடேஸ்வரியை அழைத்துக் கொண்டு  திருப்பத்தூர் நகர் பாவுசா நகரில் உள்ள மற்றொரு வீட்டில் குடியேறி வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த செப். 15-ஆம் தேதி இரவு சைக்கோ வெற்றிச்செல்வன் தனது அம்மாவை பார்க்க வந்துள்ளான். அப்போது திரும்பவும் சொத்தை விற்றுத் தருமாறு மீண்டும் தந்தை மகன் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, இங்கிருந்தால் பிரச்சனை ஏற்படும் என நினைத்த ஆதிமூலம் சைக்கோ மகனுக்கு பயந்து அங்கிருந்து இரவோடு இரவாக , மீண்டும் காசிநாயக்கன்பட்டி வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சைக்கோ வெற்றிச்செல்வன்,  தன்  தாய் வெங்கடேஸ்வரியிடம், வண்டி வாங்கித் தருமாறு வாக்குவாதம் செய்து , மறைத்து வைத்திருந்த இரும்பு ராடால் அவனது  தாய்  தலையில் பலமாக தாக்கிக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளான்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

தாய் கத்தியால் குத்திக் கொலை

பின்னர் செப். 16-ஆம் தேதி காலை ஆதிமூலம் திருப்பத்தூர்  வீட்டை திறந்து பார்த்தபோது,  மனைவி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தவர், திருப்பத்தூர் தாலுகா காவல் நிலையத்திற்கு  தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு  திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வெங்கடேஸ்வரி
வெங்கடேஸ்வரி

சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்   சியாமளாதேவி,  விசாரணை மேற்கொண்டு  தப்பித்த சைக்கோவை  பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, சைக்கோவை பிடிக்க  சென்னை மற்றும் அவனது உறவினர்கள் இடத்தில் தேடி வந்த நிலையில், சென்னை மாங்காடு பகுதியில் உள்ள அவனது வீட்டில் சைக்கோ வெற்றிச்செல்வன் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. சுதாரித்துக் கொண்ட தனிப்படையினர், அங்கு விரைந்து சென்று வெற்றிச்செல்வனை கைது செய்தனர்.

சைக்கோ அளித்த புது விளக்கம் – மிரண்ட போலீஸ் !

நான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் எனக்கு போதிய சம்பளம் கிடைக்கவில்லை. இதனால் பர்னிச்சர் கடை வைப்பதற்காக எனது பெற்றோரிடம் பணம் மற்றும் டூ வீலர் வாங்கி தரச்சொல்லி கேட்டதற்கு அவர்கள் மறுத்துவிட்டனர். இதையடுத்து பணம் தரவில்லை என்றால் சொத்தை பிரித்து கொடுக்குமாறு கேட்டேன். அதற்கு சென்னை மாங்காட்டில் எனது அம்மா வெங்கடேஸ்வரி பெயரில் உள்ள வீட்டை எனக்கு உயில் எழுதி கொடுத்தனர். அதில் எனது அம்மாவின் இறப்புக்கு பின்னர் தான் அந்த சொத்தை நான் அனுபவிக்க முடியும் என குறிப்பிட்டிருந்தனர்.

இதனால் கோபமடைந்து எனது அம்மாவை கொலை செய்துவிட்டால், வீட்டை விற்று கொள்ளலாம் என நினைத்து, இந்த முறை எனது அம்மாவை குறிவைத்து  சுத்தியால் தலையில்  அடித்து, கீழே தள்ளிய பின்னர், கத்தியால் குத்தி  கொலை செய்தேன்.

பின்னர் வீட்டில் இருந்த டூ வீலரை எடுத்து கொண்டு ஜோலார்பேட்டை சென்று, அங்கிருந்து பஸ் மூலம் சென்னை வீட்டிற்கு சென்றுவிட்டேன். அங்கு வந்த  போலீசார் என்னை  கைது செய்துவிட்டனர்” என தெரிவித்ததைத் தொடர்ந்து சைக்கோ வெற்றிச்செல்வனை கோர்ட்டில், ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

சொத்துக்காக பெற்றத் தாயையே கொடூரமாக கொன்ற சைக்கோ மகனின் செயல் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

 

 —    மணிகண்டன்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.