திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா அட்டவணை

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சிறப்பு வாய்ந்த சிவாலயங்களில் ஒன்றாக இருப்பது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் இங்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். மேலும் பிரதோஷம், பௌர்ணமி தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்கின்றனர். மிக முக்கியமான திருவிழாக்களில் கார்த்திகை தீபத்திருநாள் திருவண்ணாமலையில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டு  2024 கார்த்திகை தீப திருவிழா கொண்டாட்டத்திற்கு வரும் 23ஆம் தேதி அண்ணாமலையார் கோவிலில் பந்த கால் முகூர்த்தம் நடும் விழா நடைப்பெற்று

திருவண்ணாமலை

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

தொடக்க  நிகழ்வாக  23 -ந்தேதி  காலை திருகார்த்திகை தீபத்திருவிழா முன்னிட்டு  பந்தக்கால் முகூர்த்தம் ராஜகோபுரம் முன்  நடப்பட்டது . 13-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும் மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் திருக்கோவின் மிக  முக்கியமான 10 நாள் கார்த்திகை தீபத் திருவிழா எந்த நாளில் என்ன விசேஷம்

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

1 – டிசம்பர், 2024 ஞாயிறு அருள்மிகு துர்க்கை அம்மன் உற்சவம் காமதேனு வாகனம் புறப்பாடு .

2- டிசம்பர், 2024 திங்கள் அருள்மிகு பிடாரி அம்மன் உற்சவம் சிம்ம வாகனம் புறப்பாடு .

3- டிசம்பர், 2024 செவ்வாய் அருள்மிகு விநாயகர் உற்சவம் வெள்ளி மூஷிக வாகனம் சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனம் புறப்பாடு.

4- டிசம்பர் 2024 புதன் நாள் 1 காலை முதல் லக்னம் கொடியேற்றம்  (கொடியேற்றம்)  பஞ்சமூர்த்திகள் வெள்ளி விமானங்கள். இரவு பஞ்சமூர்த்திகள்  வெள்ளி அதிகார நந்தி, ஹம்ச வாகனம் புறப்பாடு.

5 – டிசம்பர் 2024 வியாழன் நாள் 2 காலை விநாயகர், சந்திரசேகரர் தங்க சூர்ய பிரபை வாகனம்.இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி இந்திர விமானம் புறப்பாடு .

6- டிசம்பர் 2024 வெள்ளி நாள் 3 காலை விநாயகர், சந்திரசேகரர் பூத வாகனம். இரவு பஞ்சமூர்த்திகள் சிம்ம வாகனம் வெள்ளி அன்ன வாகனம் புறப்பாடு .

7 – டிசம்பர் 2024 சனி நாள் 4 காலை விநாயகர், சந்திரசேகரர் நாக வாகனம். இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி காமதேனு, கற்பக விருட்ச வாகனம் புறப்பாடு.

8 – டிசம்பர் 2024 ஞாயிறு நாள் 5 காலை விநாயகர், சந்திரசேகரர் கண்ணாடி ரிஷப வாகனம்.  இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி பெரிய ரிஷப வாகனம் புறப்பாடு.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

9 – டிசம்பர் 2024 திங்கள் நாள் 6 காலை விநாயகர், சந்திரசேகரர் வெள்ளி யானை வாகனம் 63 நாயன்மார்கள் வீதி உலா. இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரதம், வெள்ளி விமானங்கள்  புறப்பாடு.

தேரோட்டம்

10 – டிசம்பர் 2024 செவ்வாய் நாள் 7 காலை முதல் லக்னம் விநாயகர் தேர் , வடம் பிடித்தல் பஞ்சமூர்த்திகள்  மகாராதங்கள் தேரோட்டம்  நடைபெறுகிறது .

11 – டிசம்பர் 2024 புதன் நாள் 8 காலை விநாயகர், சந்திரசேகரர் குதிரை வாகனம். மாலை 4.30 மணி பிச்சாண்டவர் உற்சவம் இரவு பஞ்சமூர்த்திகள் குதிரை வாகனம் வீதி உலா.

12‌ – டிசம்பர் 2024 வியாழன் நாள் 9 காலை விநாயகர், சந்திரசேகரர் புருஷ முனி வாகனம். இரவு பஞ்சமூர்த்திகள் கைலாச வாகனம், காமதேனு வாகனம். வீதி உலா  மகா தீபம்.

13 – டிசம்பர் 2024 வெள்ளி  அதிகாலை 4 மணியளவில் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் Iபரணி தீபம்   ஏற்றப்படுகிறது அதனைத்தொடர்ந்து மாலை 6 மணி மலை உச்சியில்  மகா தீபம்  (கார்த்திகை தீபம்) ஏற்றப்படுகிறது , இரவு  பஞ்சமூர்த்திகள்  தங்க ரிஷப வாகனம் வீதி உலா நடைபெறுகிறது .

14 – டிசம்பர் 2024 சனிக்கிழமை, இரவு 9 மணி  ஐயங்குளத்தில் ஸ்ரீ சந்திரசேகரர் தெப்பல் உற்சவம்.

15 – டிசம்பர் 2024 ஞாயிறு அதிகாலை அருள்மிகு உண்ணாமூலை உடனுறை  ஸ்ரீ அண்ணாமலையார் (அருள்மிகு பெரிய விநாயகர் ) கிரி பிரதக்ஷணம்.  இரவு 9 மணியளவில்  ஐயன்குளத்தில் அருள்மிகு பராசக்தி அம்மன்  தெப்பல் உற்சவம்.

16 – டிசம்பர் 2024 திங்கள் இரவு 9 மணி   ஐயங்குளத்தில் அருள்மிகு சுப்பிரமணியர் தெப்பல் உற்சவம்.

17 – டிசம்பர் 2024 செவ்வாய் இரவு அருள்மிகு சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனம் புறப்பாடோடு  தீபத்திருவிழா  முடிவுப்பெறுகிறது .

இந்த மகா தீப திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம் கடந்த ஆண்டு 25 லட்சம் பக்தர்கள் பங்கேற்ற நிலையில் இந்த வருடம் சுமார் 40 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து பாதுகாப்பு முன்னேற்பாடுகளை தமிழக காவல் துறை முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

 

—  மணிகண்டன்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.