மகாத்மா காந்திக்கு எந்நாளும் மரியாதை செலுத்துவோம்!
காந்தியும் கஸ்தூரிபாயும் போல் வாழுங்கள் என்று சொல்வார்கள் … !
உலக உத்தமர் மகாத்மா காந்தியடிகளின் 156-வது பிறந்தநாள் நாடு முழுவதும் காந்தியடிகளின் சிலைக்கும், படத்துக்கும் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகிறார்கள்.
தேசப்பிதா, மகாத்மா என்றாலே காந்தியடிகளை மட்டுமே குறிக்கும். இதுநாள் வரையில் Reserve Bank -ல் இருந்து வெளிவருகின்ற ரூபாய் நோட்டுகளில் காந்தியடிகளின் படத்தைத் தவிர வேறு ஒருவரின் படத்தினைப் போட்டு அரசாங்கத்தால் வெளியிட முடியவில்லை. அவர்தான் மகாத்மா.
காந்தியும் கஸ்தூரிபாயும் போல் வாழுங்கள் என்று சொல்வார்கள். தென்ஆப்பிரிக்காவில் காந்தியடிகளுக்கு மக்கள் வழங்கிய பரிசுப்பொருட்களை சிலவற்றையாவது இந்தியாவிற்கு எடுத்துச் செல்லலாம் என்று கஸ்தூரிபாய் அம்மையார் கூறியிருக்கிறார். அதற்கு காந்திஜி அவர்கள் இந்தப் பரிசுப்பொருட்கள் அனைத்தும் தென்ஆப்பிரிக்கா மக்கள் கரம்சந்த் காந்தியடிகளின் மனைவி கஸ்தூரிபாய் – க்காக கொடுத்தது. அதனால் காந்தியடிகள் அவர்கள் பரிசுப்பொருட்கள் அனைத்தையும் தென்ஆப்பிரிக்கா மக்களுக்கே கொடுத்து விட்டு வந்தார்.
காந்தியடிகளை கோட்சே சுட்டுக் கொன்று விட்டார் என்ற செய்தி கிடைத்ததும் ஜவஹர்லால் நேருவும், பட்டேல் அவர்களும் ஆரத்தழுவிக்கொண்டு கதறி அழுதார்கள். நமக்கு வழிகாட்டுவதற்கும், அறிவுரை சொல்வதற்கும் இனி யாரிடம் போய் நிற்போம் என்று கலங்கி நின்றார்கள் .
முறைப்படி காந்தியடிகளின் இறுதிச்சடங்கு நடைபெற இருந்தது. அவருடைய மூத்த மகன் கீறாலால்காந்தியை அழைத்து கொள்ளி போடச் சொல்கிறார்கள். மறைந்த எனது தந்தை தேசப் பிதாவாக இருக்கலாம். எனக்கு அவர் பிடித்தமான தந்தை இல்லையே! எனக்கூறி இறுதிச்சடங்கு செய்யமாட்டேன் என்று புறக்கணித்து விட்டார். காந்தியடிகளின் அடுத்த மகன்தான் கொள்ளி வைத்து இறுதிச்சடங்கினை செய்தார்.
காந்தியடிகளின் கொள்ளுப்பேத்தி (கீறாலால்காந்தி அவர்களுடைய பேத்தி) தன்னுடைய தாத்தா கீறாலால்காந்தி செய்ய மறுத்த அந்த இறுதிக்கடனை வெளிநாட்டில் இருந்த மகாத்மா காந்தி அவர்களின் அஸ்தியை பெற்றுக் கொண்டுவந்து கங்கை ஆற்றில் கரைத்து தனது தாத்தா செய்யவேண்டிய கடனை பேத்தி செய்ததாக நெஞ்சம் நிறைந்த நினைவலைகள் காந்திஜி அவர்களின் இந்த 156-வது பிறந்தநாளில் நெஞ்சில் அலைமோதுவதை காண்கிறோம்.
இன்று இச்சமூகத்தில் அன்பு புறக்கணிக்கப்பட்டு வெறுப்பு, வன்மம் அதிகரித்துவரும் நிலையில் அன்பையும், அகிம்சையையும் போதிக்க அம்மாமனிதன் மீண்டும் பிறக்க மாட்டானா? என்று எங்கும் ஏக்கக்குரல் ஓங்கி கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது.
மகாத்மா காந்திக்கு எந்நாளும் மரியாதை செலுத்துவோம்! தேசப்பிதாவை போற்றி வணங்குவோம். கருப்பு காந்தி என்று நம்மால் அழைக்கப்பட்ட காமராஜர் அவர்களின் நினைவு தினமும் அக்டோபர் -2 தான். அவர்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்துவோம்.
அண்ணன் வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர்,
வின்சென்ட் பால்ராஜ், பொதுச்செயலாளர்,
அ.எழிலரசன் மாநிலத்தலைவர்,
ஆ.இராஜசேகர், மாநிலப் பொருளாளர்,
கு.ரமாராணி, மாநில மகளிரணிச் செயலாளர்,
தமிழக ஆசிரியர் கூட்டணி.