ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றம் வழங்கிய 414 பக்க தீர்ப்பின் நகல் !
ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் வழங்கிய 414 பக்க தீர்ப்பின் நகல்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தது “சட்டவிரோதம்” என்று இன்று (ஏப். 08) தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், அவ்வாறான 10 மசோதாக்களுக்கு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒப்புதல் வழங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல், மாநில அரசின் ஆலோசனைக்கு ஏற்ப ஆளுநர் நடக்க வேண்டும் என்றும் அதன் செயல்பாடுகளுக்கு “முட்டுக்கட்டையாக” இருக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது. மேலும், மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடுவும் விதித்துள்ளது. இந்த தீர்ப்பின் நகலை அனைத்து மாநில உயர்நீதிமன்றங்களுக்கும், அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு