அங்குசம் சேனலில் இணைய

ரூ.8 லட்சம் மதிபுள்ள புகையிலை பொருட்களை கைப்பற்றிய காவல்துறை !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  செ. செல்வநாகரெத்தினம், இ.கா.ப., உத்தரவின் பேரில்,  (16.05.2025) திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்,

திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  தனிப்படையினர் திருவெறும்பூர், சோழமாதேவி, மாணிக்கம் நகர், 9-வது கிராஸ் என்ற முகவரியில் வசித்து வரும் ரமேஷ் குமார் 32/25 S/o ராமர் பாண்டி என்பவரை கைது செய்தது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

திருச்சி, சங்கிலியாண்டபுரத்தில் உள்ள குடோனில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சுமார் ரூ.8,00,000 மதிப்புள்ள ஹான்ஸ் புகையிலை- 592 Kg. Cool lip புகையிலை 24 Kg. விமல் குட்கா 78 kg மற்றும் வி1 குட்கா பாக்கு-16 kg என மொத்தம் 710 kg அரசால் தடைசெய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்ககூடிய குட்கா பொருட்கள் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய TN 55 AK 2692 பதிவெண் கொண்ட கார்-1. ஐ போன்-1 மற்றும் பணம் ரூ.8800 ஆகியவற்றை கைப்பற்றி, திருவெறும்பூர் காவல் நிலைய 5 . 532/25 U/s 123 BNS & 6(a) r/w 24(1) of COTPA Act-ன் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

புகையிலை விற்பனைமேலும்,  (15.06.2025) சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குபேரன் நகர், அரியாறு பகுதிகளில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில், தனிப்படையினர் சோதனை மேற்கொண்டதில், திருச்சி. சண்முகாநகர், 7-வது கிராஸ் முகவரியில் வசிக்கும் ஆனந்தராம் 42/25 த.பெ நடராஜன் என்பவர் அரியாறு பகுதியில் தனக்கு சொந்தமான குடோனில் அரசால் தடைசெய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்ககூடிய சுமார் ரூ.3,50,000 மதிப்புள்ள ஹான்ஸ் புகையிலை-260 Kg. Cool llp புகையிலை 14 Kg, விமல் குட்கா -30 kg, வி1 குட்கா பாக்கு-14 kg மொத்தம் 318 Kg குட்கா போதைப்பொருட்களை பறிமுதல் செய்து, . 227/25, U/s 123 BNS & 6(a) r/w 24(1) of COTΡΑ Act-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். திருச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில், இதுவரை 1028 கிலோகிராம் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு, எதிரிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

மேற்கண்ட சிறப்பான பணியினை மேற்கொண்ட காவல் அதிகாரி மற்றும் ஆளினர்களை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரெத்தினம், இ.கா.ப., வெகுவாக பாராட்டினார்கள்.

மேலும், இது போன்ற அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை, கஞ்சா விற்பனை, போலி மதுபான விற்பனை, கள் விற்பனை, போதை பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட மதிமயக்கும் பிற போதை வஸ்துக்கள் விற்பனை போன்ற சட்டவிரோத செயல்களில் யாரேனும் ஈடுபடுவதாக தெரிய வந்தால் பொதுமக்கள் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண் 8939146100-க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் கொடுப்போரின் பெயர் விலாசம் ரகசியம் காக்கப்படும்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.