பாரம்பரியமாக ஊடகத்திற்கு மூன்று அடிப்படைக் கடமைகள் !
பாரம்பரியமாக ஊடகத்திற்கு மூன்று அடிப்படைக் கடமைகள் இருக்கின்றன.
inform (தகவல் தெரிவிப்பது), educate (கற்பிப்பது) and entertain (கேளிக்கை) அளிப்பது.
தகவல்: இப்போதுள்ள பெரும்பாலான தொலைக்காட்சி, டிஜிடல் ஊடகங்கள் தகவல் தெரிவிப்பது என்பதை தகவலைத் திரிப்பது என்று மாற்றிவிட்டனர்.

இன்று மாபெரும் ஊடக்வியலாளர்களே ‘strategists’ ஆக உருமாற்றிக் கொண்டு சதிக் கோட்பாடுகளை அவிழ்த்து விடுவது போல் தெரிகிறது.
கேளிக்கை: பிரபலங்களின் மரணத்தையும், உயிரிழப்புகளையும் கேளிக்கையாக மாற்றிவிட்டனர். நேற்று நடந்த் கரூர் சோகத்தைச் சொலலும் சாக்கில் அங்கே சிதறிக்கிடக்கும் செருப்புகளையும் தண்ணீர் பாட்டில்களையும் காட்சியாக்கி பின்னணியில் சோக இசை மீட்டியது ஒரு ஊடகம். ரோபோ சங்கரின் குடும்பத்தின் அழுகையை க்ளோசப் ஆகக் காட்டி சோகப் பாடல்களை பின்னணியில் ஓட விட்டன சில ஊடகங்கள். சில ஆண்டுகளுக்கு முன்னால் பம்பாயில் மரணம் நிகழ்ந்த ஒரு வீட்டில் இருப்பவர்களை வீடியோ எடுக்க வந்தவர்கள் அவர்களுக்கு மேக்கப் போடச் சொன்னதாக ஒரு தகவல் வெளியானது. அழகியல் நிறைந்த மரணங்கள் போல.
அதே போல் விஜய் தூங்கி எழுந்தது முதல் பரப்பரை செய்து முடிப்பது வரையிலான காட்சிகளை நேரலை செய்து, வெறித்தன்மாகப் பேசினார், நாமக்கல் அதிர்ந்தது (ஆம் சென்னையில் கூட கட்டிடங்கள் ஆடின) என்று பரபரப்பைக் கூட்டி, இடையிடையே விஜய் பாடல்களை ஒலிக்கவிட்டு ரசிகர்களுக்கு உசுப்பேத்தும் daylong entertainment ஆக மாற்றி விட்டனர்.
கற்பிப்பது: இந்தப் பணி இப்போது நடப்பதே இல்லை. விஜய் கூறிய பல அரைகுறை கூகுள் தகவல்களயும், பொய்களையும் சமூக வலைத்தளங்களில் பலரும் அம்பல்ப்படுத்திய பின்னரும் அவரை கேள்வியின் நாயகனாக ஒரு பிம்பத்தைக் கட்டமைத்தனர்.
சான்றாக:
நாகப்பட்டினம் ரயில் தொழிற்சாலை: நாகப்பட்டினத்திலிருந்த ரயில்வே பணிமனையை பொன்மலைக்கு மாற்றிய காலகட்டம் 1926-28. இதை அப்போது நடந்த போராட்டத்தில் பெரியாரும் கலந்து கொண்டு சிறை சென்றார். இந்த வரலாற்றுத் தகவலை நான் வெளியிட்ட போதிலும் அந்தப் பேச்சு திரும்பத் திரும்ப ஒளிபரப்பானது.
ரிசர்வேஷன்: கம்யூனல் ஜி.ஒ. 1921இலேயே பிறப்பிக்கப்பட்ட போதிலும் 1927இல் திரு சுப்பராயன் ஆட்சிக்காலத்தில்தான் அமுலுக்கு வந்தது.6 ஆண்டுகள் அதனைத் தாமதப் படுத்திய கூட்டத்தின் சதியைக் குறித்து ஏராளமான விவரங்களும், கட்டுரைகளும் வெளிவந்து விட்டன. அதே கம்யூனல் ஜி ஓவை உச்சநீதிமன்றம் ரத்து செய்த போது அதை எதிர்த்துப் போராடி வென்றது திராவிட இயக்கம், அரசிய்லமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தமாக அது இடம் பெற்றதற்கு இந்த இயக்கத்தின் போராட்டம்தான் காரணம்.
இதெல்லாம் தெரிந்தால்தானே. தெரிந்தாலும் உண்மையைச் சொல்லும் நேர்மை இருந்தால்தானே?
பொதுக் கூட்டம், பரப்புரைக் கூட்டம் organise செய்வதில் திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் திறம்பெற்றவை. அவை எப்படி அதைச் சாதித்தன, விஜயின் கூட்டங்கள் எப்படி தறிகெட்டு நடந்தன என்பதை நன்றாக அறிந்த ஊடகப் புலிகள் கூட அவற்றைப் பெரிய சாதனையாகக் கண்டு பிரமித்துப் போனது உச்சகட்ட அயோக்கியத்தனம். கூட்டம் தேர்தல் முடிவுகளில் பிரதிபலிப்பதில்லை என்று நிறுவப்பட்ட பின்னரும் கூட நான் என் வாழ்நாளில் இப்படிப்ப்ட்ட கூட்டத்தைக் கண்டதிலலை என்று பசப்புவது ஊடக உலகிற்கு பெரும் இழுக்கு.
இப்படிப் பல சமீபத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் எனக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு: Media Responsibility. தலைப்பே தவறு, அது media irresponsibility என்று இருக்க வேண்டும் என என் பேச்சைத் துவக்கி ஆதாரங்களையும் எடுத்து வைத்தேன். என் 39 ஆண்டு கால ஊடக அனுபவத்தை வைத்து இன்னும் விரிவாக எழுதவேண்டும்.
Vijayasankar Ramachandran – மூத்த பத்திரிகையாளர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.