போதையில் ஓட்டிய பஸ் டிரைவர் – பலியான திருச்சி ரயில்வே ஊழியர் பரிதாப மரணம் ! வீடியோ
திருச்சி ஜங்ஷன் ஆர்.சி. பள்ளி அருகே உள்ள ரயில்வே காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் மோகன் (வயது 35). இவருக்கு திருமணம் ஆகி 10 மாதங்கள் ஆகிறது. ரயில்வே ஊழியரான இவருக்கு பிரியா (வயது 27 ) என்ற மனைவி உள்ளார். வழக்கம் போல் இன்று 18.04.2023 காலையில் திருச்சி ஜங்ஷன் ஆர்.சி. பள்ளி அருகேயுள்ள ரயில்வே குடியிருப்பில் இருந்து ரோட்டை கடந்து எதிரே உள்ள முனீஸ்வரன் கோவில் பகுதியில் குடிநீர் எடுப்பதற்காக பிளாஸ்டிக் குடத்துடன் சென்றார்.
குடிநீர் எடுத்து விட்டு வீட்டுக்கு திரும்பினார். நடந்து ரோட்டை கிராஸ் பண்ணும் போது திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஜங்ஷன் நோக்கி அதி வேகமாக தாறுமாறாக வந்த தனியார் பஸ் TN48 P 4432 இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரயில்வே ஊழியர் மோகன் பரிதாபமாக இறந்தார். மோகன் திருமணமாகி 10 மாதம் நிறைவடைந்த நிலையில் இந்த கோரவிபத்து ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ லிங்
மோகனை மோதி தூக்கி எறிந்த தனியார் பேருந்து நிற்காமல் இதை அடுத்த பெட்ரோல் பங்கு வெளியே நின்று கொண்டு இருந்த இன்னோரு பஸ் மீதும் மோதி அதையும் தாண்டி பெட்ரோல் பங்கில் உள்ள போஸ்ட் மரத்தில் இடித்து உடைத்து நின்றது.
அதிபயங்கர சத்தத்துடன் மோதியதில் அக்கம் பக்கத்தில் நின்று கொண்டு இருந்த பொதுமக்கள் கூடி பேருந்தில் இருந்த தனியார் பேருந்தில் இருந்த டிரைவர் காலையிலே போதையில் இருந்தது தெரியவந்துள்ளது டிரைவரை பிடித்து இழுத்து தர்ம அடி கொடுத்தனர். அந்த பேருந்தில் 4 பேர் பஸ் சம்மந்தப்பட்டவர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களில் வண்டி ஓட்டியவர் போதையில் இருந்திருக்கிறார், விபத்து ஏற்படுத்தியதில் இடித்து பேருந்தின் டயரே பஞ்சர் ஆகி உள்ளது. இது குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த இடத்தில் பள்ளி மாணவர்கள் தினமும் ஆயிரக்கணக்கில் கடந்து செல்லும் இடம் என்பது குறிப்பிடதக்கது.