சேலத்தில் கார் கண்ணாடியை உடைத்து லேப்டாப், ரூ.12 ஆயிரம் திருட்டு !

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

சேலத்தில் ஹோட்டலில் சாப்பிட சென்ற பெங்களூரை சேர்ந்த ஐ.டி. நிறுவன ஊழியரின் கார் கண்ணாடியை உடைத்து லேப்டாப், ரூ.12 ஆயிரம் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒலவக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் இவரது மகன் அபிஷேக் (29), மனைவி சாந்தரா. இவர்கள் இருவரும் பெங்களூரில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

இதனிடையே அபிஷேக் சனிக்கிழமை அவரது மனைவியுடன் கேரளாவில் இருந்து காரில் பெங்களூர் செல்வதற்காக சேலம் வழியாக சென்றார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அப்போது சேலம் மாமாங்கத்தில் உணவு சாப்பிடுவதற்காக காரை நிறுத்திவிட்டு ஹோட்டலுக்குச் சென்றனர், உணவு சாப்பிட்ட பிறகு திரும்பி வந்து காரை பார்த்தபோது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் காரில் இருந்த லேப்டாப் மற்றும் ரூ.12 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அபிஷேக், சூரமங்கலம் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் சூரமங்கலம் சப் இன்ஸ்பெக்டர் சகாயம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கார் கண்ணாடியை உடைத்து லேப்டாப் மற்றும் பணம் ஆகியவற்றை திருடி சென்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-சோழன்தேவ்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.