கருப்பு பட்டை அணிந்து நில அளவையர்கள் !
கருப்பு பட்டை அணிந்து நில அளவையர்கள் மாலை நேர கண்டன ஆர்ப்பாட்டம்
நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு தமிழ்நாடு நில அளவையர்கள் மற்றும் அலுவலர்கள் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
அந்த வகையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் , இன்று மாலை, காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் , நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குனரின் ஊழியர் விரத போக்கை கைவிட வேண்டும், நில அளவையர் மீது ஏற்றப் பட்டுள்ள பணி சுமையை கைவிட வேண்டும்.
ஒப்பந்த அடிப்படையில் நில அளவையர் பணி செய்யும் சர்வேயர்களுக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி , தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நில அளவையர்கள் மற்றும் அலுவலர்கள் கருப்பு பேட்ச் அணிந்து தமிழக அரசை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பினர் .
மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நில அளவையர்கள் கலந்து கொண்டனர்.
-சோழன்தேவ்