அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

உயர்கல்வியை உயரிய கல்வியாக மாற்றுங்கள், அமைச்சரே !

திறந்த மடல் - 8

திருச்சியில் அடகு நகையை விற்க

தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அவர்களுக்கு, வணக்கம்.

தமிழ்நாட்டின் கலை, அறிவியல் கல்லூரிகளை இணைப்பு கல்லூரிகளைக் கொண்டுள்ள பல பல்கலைக்கழகங்களின் இணைவேந்தர், அரசு கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் – என உயர்கல்வியின் காவலன் என்ற பெருமை உங்களுக்கு உள்ளது. இந்நிலையில்தான், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அரசு உதவிபெறும் கல்லூரிகள் தனியார் பல்கலைக்கழகமாக மாற்றிக்கொள்ளலாம் என்ற உயர்கல்வியில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவை, ஆசிரியர், மாணவர், பெற்றோர் ஒன்றுகூடி எதிர்த்தனர்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

இதனால் பழுப்பு பல்கலைக்கழகங்கள் உருவாக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது ஓரளவு ஆறுதலாய் உள்ளது. இந்தப் பழுப்பு பல்கலைக்கழக உருவாக்கத்தால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி பெறும் உரிமையை, நீங்கள் எப்படி அந்த கொள்கை முடிவை ஆதரித்தீர்கள் என்று கேள்விகள் எழுந்தன. பழுப்பு பல்கலைக்கழகம் முடிவு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதால் நீங்கள் ஒரு பெரும் பழியில் தப்பியுள்ளீர்கள்.

நீங்கள் பொறுப்பேற்ற காலத்தில் கல்லூரி ஆசிரியர் குறிப்பாக அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்கள் போராடிக் கொண்டிருந்தார்கள். 2018 இலிருந்து ஆசிரியர்கள் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். உயர்கல்வி அமைச்சர் என்ற முறையில் தங்களை நேரில் சந்தித்து ஆசிரியர்கள் உங்களிடம் கோரிக்கையை முன்வைக்கின்றபோது, நீங்கள் தவறாமல் சொல்லும் ஒரே வார்த்தை “விரைவில் செய்து முடிப்பேன்”என்பதுதான்.

Admission Enquiry Form

அமைச்சர் கோவி.செழியன்
அமைச்சர் கோவி.செழியன்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

ஆனால், இதுவரை இவ்வாறு நீங்கள் அளித்த உறுதிமொழிகள் இன்னும் நிறைவேறாமலே நீடிப்பது வருத்தமானது. கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலக அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வெளியிட்ட கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியம், பணிமேம்பாடு மற்றும் சில கோரிக்கைகளை முன்வைத்தனர். அரசுக் கல்லூரி ஆசிரியர்களுக்கு எல்லாவித நிதிப் பயன்களும் உடனே வழங்கப்பட்ட நிலையில், அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. பணி மேம்பாட்டில் வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகைகளை வழங்கப்படாமல் உள்ளது.

பல்கலைக்கழக மானியக்குழு நெறிமுறைகளின்படி கல்லூரி ஆசிரியர்கள் பெற்ற எம்.பில். மற்றும் பிஎச்.டி. பட்டத்திற்கான ஆண்டு ஊதிய உயர்வு வழங்கவில்லை. புத்தொளி / புத்தாக்க பயிற்சிக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டுகிறார்கள். கல்லூரிகளில் பேராசிரியர் பதவிக்கான ஆணை பிறப்பிக்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுகின்றனர். தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்டமுன்வடிவை முற்றிலுமாகக் கைவிடுக என்று போராடி வந்த கல்லூரி ஆசிரியர்கள் கடந்த 2 வாரம் காலம் கல்லூரிகளில் இரவு பகலாகக் காத்திருப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இப் போராட்டங்களால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படவில்லை என்பதால், உயர்கல்வி அமைச்சர் என்ற பொறுப்பில் உள்ள நீங்கள் ஆசிரியர் வைத்துள்ள கோரிக்கைகளில் உள்ள நியாயங்களை நீங்கள் புரிந்திருந்தாலும், கோரிக்கைகளை நிறைவேற்ற உயர்கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட முடியாமல், இருப்பதன் காரணங்களைப் புரிந்து கொள்ளமுடியவில்லை. மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு உழைத்துவரும் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற உயர்கல்வி அமைச்சராக உள்ள நீங்கதானே முன்வரவேண்டும்?

2021 ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்தது. உயர்கல்வியில் ஏறத்தாழ 10ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக ஆசிரியர் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. 2015 ஆம் ஆண்டு காலியிடங்கள் 4500 பணியிடங்கள் இன்னும் திமுக ஆட்சியில் நிரப்பப்படாமலே உள்ள நிலை தொடர்கின்றது. அரசு கல்லூரிகளில் பல பணியிடங்கள் காலியாக உள்ளதால் மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்க மிகக்குறைந்த ஊதியத்தில் தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படுவதுதான் சமூகநீதியா? என்று பொதுமக்கள் கேட்கின்றனர். அரசு உதவிபெறும் கல்லூரிகளில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு உயர்கல்வி இயக்குநரகம் அனுமதி வழங்க மறுக்கின்றது. கல்வியில் உயர்ந்த தமிழ்நாடு என்று சொல்லும் உங்கள் கட்சியின் ஆட்சியில் புள்ளிவிவரங்கள் மட்டுமே சொல்லப்படுகின்றது. உண்மை வேறாக உள்ளது என்பதை உயர்கல்வி அமைச்சர் உரிய நடவடிக்கை எடுத்து உயர்கல்வியை உயரிய கல்வியாக மாற்றிருக்கவேண்டும் என்ற பொதுமக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிட வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறதுதானே?

இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையில் அடிப்படை அறிவியல் பாடங்களான கணிதம், இயல்பியல், வேதியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்துள்ளது. இது குறித்துத் தமிழ்நாட்டில் இயங்கிவரும் உயர்கல்வி மன்றம் ஆய்வு செய்ததாகத் தெரியவில்லை. உயர்கல்வி அமைச்சராக நீங்களும் ஆய்வு செய்தாகவே, மாணவர், பெற்றோர் கருத்தும் கேட்கப்படவில்லை. தமிழ்நாட்டின் உயர்கல்வியை உயரிய கல்வியாக மாற்றுங்கள். உயர்கல்வியைத் தனியாருக்குத் தாரை வார்க்க வேண்டாம் என்று பெற்றோர், மாணவர், ஆசிரியர்கள் சார்பில் உங்களை வேண்டுகிறார்கள்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள சோழபுரத்திற்கு அருகிலுள்ள ராஜாங்கநல்லூர் என்ற கிராமத்தில் பிறந்து, இதுவரை எந்தவொரு கட்சியிலும் எந்தவொரு பட்டியலினம் சார்ந்த ஒருவரும் பெற்றிடாத உயர்ந்த நிலையை நீங்கள் பெற்றதற்கு காரணமே, நீங்கள் பயின்ற உயர்கல்விதானே? அந்த உயர்கல்விக்கே அமைச்சராகவும் உயர்ந்துள்ள உங்களிடம், உயர்கல்வியை உயரிய கல்வியாக மாற்றுவதற்கான முனைப்பை எதிர்பார்ப்பதில் தவறொன்றும் இல்லையே?

தமிழன்புடன்   ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.